அடிலைன் மொலமுறே
அடிலைன், மொலமுறே சீமாட்டி (Adeline, Lady Molamure, 1890 - 1977) பிபேக (அடிலைன்; தொடக்கத்தில் மீதெனிய) என்பவர் இலங்கை செனட் சபையின் முதலாவது பெண் உறுப்பினர் ஆவார். ஆதலின், இவரே இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டவரைஞர் ஆவார். இவர் செனட் சபையின் உப தலைவியாகச் செயற்பட்டார். கொழும்பு பிசப் கல்லூரியில் கல்வி கற்ற இவர் அப்போதைய சட்டவாக்கக் கழக உறுப்பினரான ஹென்றி மீதெனிய அதிகாரம் என்பவரின் மகளாவார்.[1][2] இவர் 1931 இல் தனது தந்தையின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக அவரது தேர்தல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1947 ஆம் ஆண்டு இவர் செனட்டுக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், 1955 இல் அச்சபையின் உப தலைவியாக நியமிக்கப்பட்ட அதே வேளை பிரித்தானியப் பேரரசு வரிசையின் கட்டளைத் தளபதியாக ஆக்கப்பட்டார். இவர் இலங்கையின் முதலாவது சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமுறே என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3][4][5] இவர்களின் ஒரே மகளான சீதா மொலமுறே என்பவரும் இலங்கை செனட் சபையின் உறுப்பினரானார். அவர் குடியியற் பணியாளராக இருந்து இலங்கைத் திறைசேரியின் செயலாளரான எல். ஜே. செனவிரத்ன என்பவரைத் திருமணம் புரிந்தார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia