அடைநெடுங் கல்வியார்அடைநெடுங் கல்வியார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர். பெயர்க் காரணம்அடை என்னும் சொல் நீரில் படரும் செடி இனங்களின் இலையைக் குறிக்கும். இங்கு அடை என்னும் சொல் அடை படர்ந்த ஊரைக் குறிக்கிறது. நெடுங்கிள்ளி, நெடுஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் என்னும் அரசர் பெயர்களிலும், நெடும்பல்லியத்தனார், நெடும்பார தாயனார் போன்ற புலவர் பெயர்களிலும் வருவது போல இப்புலவர் பெயரிலும் அடைமொழியாக அமைந்துள்ளது. கல்வியார் என்பது இப்புலவர்க்கு ஊர்மக்கள் இட்டு வழங்கிய பெயர். பாடிய பாடல்கள்சஙக இலக்கியங்களில் இவர் பாடியதாக மூன்று பாடல்கள் உள்ளன.[1] மூன்றும் புறநானூற்றில் இடம் பெறுகின்றன. இவரது பாடல்கள் தரும் செய்திகள்: புறம் 283அழும்பில் என்னும் ஊர் நீர்நாய் விளையாடும் ஆற்றுப்பகுதியில் இருந்தது என்றும், முதலை மேயும் அகழியைக் கொண்டது என்றும், இவ்வூரில் வலம்புரிக் கோசர்கள் வாழ்ந்தனர் என்றும் இப்பாடலில் புலவர் குறிப்பிட்டுள்ளார். வலம்புரி கோசரின் அவைக்களம் வலம்புரிச் சங்கு போன்ற அமைப்பினைக் கொண்டது. புறம் 344 மகப்பாற்காஞ்சிஇப்பாடல் அடி ஒன்றிலும் சிதைவு உள்ளது. புறம் 345 மகப்பாற்காஞ்சிமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia