அண்டார்ட்டிக்கா மூவலந்தீவு

அண்டார்ட்டிக்கா மூவலந்தீவின் நிலப்படம்.
அண்டார்ட்டிக்காவில் அண்டார்ட்டிக்கா மூவலந்தீவின் இருப்பிடம்.

அண்டார்ட்டிக்கா மூவலந்தீவு (Antarctic Peninsula) தென் கோளத்தில் அந்தாட்டிக்கா பெருநிலப்பகுதியின் வடகோடியில் உள்ள பகுதியாகும்.

ஆடம்சு முனைக்கும் (வெடல் கடல்) பெருநிலப்பகுதியில் எக்லந்து தீவிற்கு தெற்கிலுள்ள ஒரு புள்ளிக்கும் இடையேயான கோட்டிலிருந்து 1,300 கி.மீ. (810 மைல்கள்) பரந்துள்ள இதுவே அண்டார்ட்டிக்காவில் கடல்மட்டத்திற்கு மேலே மிக முதன்மையானதும் மிகப் பெரியதுமானதுமான மூவலந்தீவு ஆகும். இதன் மேல் படந்துள்ள பனிக்கட்டிகளுக்கு கீழே இது பாறைகளாலான தொடர்ச்சியானத் தீவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பிரிக்கும் ஆழ்கால்வாய்களின் ஆழங்கள் தற்போதைய கடல்மட்டத்தை விட மிகக் கீழானது. தென் அமெரிக்காவின் தென்கோடி முனையான டியெர்ரா டெல் ஃபுயேகோவிலிருந்து டிரேக் பாதைக்கு அப்பால் 1,000 கி.மீ. (620 மைல்கள்) தொலைவில் உள்ளது.[1]

அண்டார்ட்டிக்கா மூவலந்தீவில் தற்போது பல ஆய்வு நிலையங்கள் நிறுவப்பட்டு பல நாடுகள் இறைமை கோரிவருகின்றன. அர்கெந்தீனா, சிலி மற்றும் ஐக்கிய இராச்சியம் உரிமை கோரும் இந்த மூவலந்தீவின் நிலப்பகுதிகளுக்கு பிணக்குகள் எழுந்துள்ளன. இவை எவற்றின் உரிமைகளுக்கும் பன்னாட்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை; அண்டார்டிக்கா ஒப்பந்தப்படி இந்நாடுகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயல்வதில்லை. இருப்பினும் பிரித்தானிய உரிமையை ஆத்திரேலியா, பிரான்சு, நியூசிலாந்து, நோர்வே. நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த மூவலந்தீவில் அர்கெந்தீனா மிக்க் கூடுதலான நிலையங்களையும் பணியாளர்களையும் நாட்டியுள்ளது.

மேற்கோள்கள்

  1. Stewart, J. (2011). Antarctic: An Encyclopedia. New York, NY: McFarland & Co. ISBN 978-0-7864-3590-6.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya