அண்மைக் கிழக்கு![]() நவீன தொல்லியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அண்மைக் கிழக்கு அண்மைக் கிழக்கு அண்மைக் கிழக்கு (Near East) என்பது, பருமட்டாக மேற்காசியாவை உள்ளடக்கிய புவியியற் பகுதியைக் குறிக்கும் ஒரு சொல். அறிஞர் மட்டத்தில் இதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் கூறப்பட்டாலும், ஓட்டோமான் பேரரசின் மிகக் கூடிய அளவை உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கவே தொடக்கத்தில் இது பயன்பட்டது. இது இப்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இதற்குப் பதிலாக இப்போது மையக் கிழக்கு அல்லது மத்திய கிழக்கு என்னும் சொல் பயன்படுகிறது. "நசனல் ஜியோகிரபிக் சொசைட்டி"யின் படி, அண்மைக் கிழக்கு, மையக் கிழக்கு ஆகிய இரு சொற்களும் ஒன்றையே குறிக்கின்றன. அத்துடன், இது அரேபியத் தீபகற்பம், சைப்பிரசு, எகிப்து, ஈராக், ஈரான், இசுரேல், ஜோர்தான், லெபனான், பாலத்தீன ஆட்சிப்பகுதிகள், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்குவதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[1] ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஏறத்தாழ மேற்கூறியது போன்ற வரைவிலக்கணத்தையே தந்தாலும், ஆப்கானிசுத்தானை இதற்குள் சேர்த்துக்கொண்டு, மேற்காப்பிரிக்கப் பகுதிகளையும், பாலத்தீன ஆட்சிப்பகுதிகளையும் சேர்க்கவில்லை.[2] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia