அததொ-பி-26 (HAT-P-26) என்பது 466 ஒளியாண்டுகள் (143 புடைநொடிகள்) தொலைவில் உள்ள K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . 2015 ஆம்ஆண்டின் ஒரு கணக்கெடுப்பு இதன் வட்டணையில் எந்த இணைவிண்மீனையும் கண்டுபிடிக்கவில்லை, [5] இருப்பினும் வெப்பநிலை 4000 +100 −350 கெ கொண்ட செங்குறுமீன் இணை.பரந்த வட்டணையில் சுற்றிவருவதாக கருதப்படுகிறது. [6]
2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில், இந்தக் கோள் அமைப்பு மூன்றாவது புற உலகங்களின் பெயரிடல் திட்டத்தால் பெயரிடப்பட்ட 20 கோள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது. புவேர்ட்டோ இரிக்கோவைச் சேர்ந்த குழுவால் முன்மொழியப்பட்ட ஏற்கப்பட்ட பெயர்கள் ஜூன் 2023 இல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, டைனோ தொன்மப் பாத்திரங்களின் அடிப்படையில் அததொ-பி-26 குவாகயோனா என்றும் அதன் கோளுக்கு குவாடாபா என்றும் பெயரிடப்பட்டன, .
கோள் அமைப்பு
2010 ஆம் ஆண்டில், வெப்பமான நெப்டியூன் ஒத்த புறக்கோள் கண்டறியப்பட்டது. அவாய் மற்றும் அரிசோனாவில் அமைந்துள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி அததொ-பி-26 பி என்ற கடப்புக் கோள் அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டறியப்பட்டது. கூழாங்கல் அகந்திரளல் பொறிமுறையால் கோள் உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [7] அததொ-பி-26 பி கோளின் செலுத்தக் கதிர்நிரல் 2015 இல் எடுக்கப்பட்டது. இதற்கு முகிலற்ற வளிமண்டலம் அல்லது தாழ்வான முகில்கவிப்பு கொண்ட வளிமண்டலம் சிறந்த பொருத்தம் கொண்டுள்ளது. [8] கோளின் வளிமண்டல உட்கூறு 2019 ஆம் ஆண்டில் அளவிடப்பட்டது. மேலும், நீராவி பருமன் பகவு 1.5 +2.1 −0.9 % எனக் கண்டறியப்பட்டது. அததொ-பி-26 விண்மீனில் கரிமம் குறைவாக உள்ளது. கரிம/ உயிரக விகிதம் 0.33 க்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோளின் வளிமண்டலத்தில் எடைகுறைந்த பொன்ம(உலோக) ஐதரைடுகள் உள்ளன. [9] கோளின் வெப்பநிலை 563 +58 −54 கெ ஆகும் .
2019 ஆம் ஆண்டில், HAT-P-26b இன் கோளகடப்பு நேர வேறுபாட்டுப் பகுப்பாய்வு, பரந்த, 1141 நாட்கள் வட்டணை அலைவுநேர இரண்டாவது கோளின் வாய்ப்புள்ள இருப்பைக் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டில், கோளின் வளிமண்டலத்தில் 590 +20 −30 கெ வெப்பநிலையில் 12 ±2% நீராவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. . [10]
↑Hartman, J. D.; Bakos, G. Á.; Kipping, D. M.; Torres, G.; Kovács, G.; Noyes, R. W.; Latham, D. W.; Howard, A. W.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W.; Isaacson, H.; Quinn, S. N.; Buchhave, L. A.; Béky, B.; Sasselov, D. D.; Stefanik, R. P.; Esquerdo, G. A.; Everett, M.; Perumpilly, G.; Lázár, J.; Papp, I.; Sári, P. (2010), "HAT-P-26b: A LOW-DENSITY NEPTUNE-MASS PLANET TRANSITING A K STAR", The Astrophysical Journal, 728 (2): 138, arXiv:1010.1008, doi:10.1088/0004-637X/728/2/138, S2CID119228956
↑Piskorz, Danielle; Knutson, Heather A.; Ngo, Henry; Muirhead, Philip S.; Batygin, Konstantin; Crepp, Justin R.; Hinkley, Sasha; Morton, Timothy D. (2015), "Friends of Hot Jupiters. III. An Infrared Spectroscopic Search for Low-Mass Stellar Companions", The Astrophysical Journal, p. 148, arXiv:1510.08062, Bibcode:2015ApJ...814..148P, doi:10.1088/0004-637X/814/2/148{{citation}}: Missing or empty |url= (help)
↑Stevenson, Kevin B.; Bean, Jacob L.; Seifahrt, Andreas; Gilbert, Gregory J.; Line, Michael R.; Désert, Jean-Michel; Fortney, Jonathan J. (2015), "A SEARCH FOR WATER IN THE ATMOSPHERE OF HAT-P-26b USING LDSS-3C", The Astrophysical Journal, p. 141, arXiv:1511.08226, doi:10.3847/0004-637X/817/2/141{{citation}}: Missing or empty |url= (help)CS1 maint: unflagged free DOI (link)
↑MacDonald, Ryan J.; Madhusudhan, Nikku (2019), "The Metal-Rich Atmosphere of the Neptune HAT-P-26b", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 1292–1315, arXiv:1903.09151, doi:10.1093/mnras/stz789{{citation}}: Missing or empty |url= (help)CS1 maint: unflagged free DOI (link)
↑Revisiting the Transit Timing and Atmosphere Characterization of the Neptune-mass Planet HAT-P-26 b, 2023, arXiv:2303.03610
↑von Essen, C.; Wedemeyer, S.; Sosa, M. S.; Hjorth, M.; Parkash, V.; Freudenthal, J.; Mallonn, M.; Miculán, R. G.; Zibecchi, L.; Cellone, S.; Torres, A. F. (2019), "Indications for transit timing variations in the exo-Neptune HAT-P-26b", Astronomy & Astrophysics, 628: A116, arXiv:1904.06360, Bibcode:2019A&A...628A.116V, doi:10.1051/0004-6361/201731966, S2CID118674293