அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயில்

அருள்மிகு கஜேந்திரவரதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:அத்தாளநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருச்செந்தூர்
கோயில் தகவல்
மூலவர்:ஆதிமூலப் பெருமாள்
தாயார்:தெற்கு நாச்சியார், வடக்கு நாச்சியார்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், சனிக்கிழமை
உற்சவர்:கஜேந்திரவரதர்
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயில் (Athalanallur Gajendra Varathar Temple) என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] கோயிலின் மேற்கே தாமிரபரணி ஆறு தெற்கு வடக்காக பாய்கிறது.

தொன்மம்

இத்தலம் தான் கஜேந்திரமோட்சம் நடந்த இடமாக கருதப்படுகிறது. இக்கோயிலின் பின்புறம் ஓடும் தாமிரமரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால் அத்தூணை நரசிம்மராக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.[2]

கோயில் அமைப்பு

இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இந்தக் கோயில் கருவறையில் சுதைவடிவில் சிறீதேவி, பூதேவியுடன் நின்றக் கோலத்தில் ஆதிமூலப் பெருமாள் உள்ளார். மூலவருக்கு அருகில் பிருகு, மார்கண்டேய முனிவர்கள் உள்ளனர். மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் உள்ளார். தனி சந்தியிதிகளில் தெற்கு நாச்சியார், வடக்கு நாச்சியார் என்று தாயார்கள் உள்ளனர். இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

தீர்தங்கள்

இக்கோயிலின் தல புராணத்தின் படி இங்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதலையிடம் இருந்து காப்பாற்றி கஜேந்திரனுக்கும் முதலைக்கும் வீடுபேறு அளித்ததக கருதப்படும் விஷ்ணு தீர்த்தமானது கோயிலுக்கு பின்புறமாக அமைந்துள்ளது. அடுத்து கோயிலின் வடபுறம் சிங்க தீர்த்தம் உள்ளது. மூன்றாவது திருவலஞ்சுழி என்னும் சக்கர தீர்த்தமாகும். அது சிங்கத் தீர்த்ததுக்கு தெற்கே ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெருமாளாளல் ஏவப்பட்ட சக்கராயுதம் முதலையை அழித்து பிறகு இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி புனிதம் அடைந்ததாக நம்பப்படுகிறது.

பூசைகள்

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை திருவிழாவாக நடைபெறுகிறது. தை மாதம் தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "ஆனந்த பெருவாழ்வு அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திரவரத பெருமாள் கோயில்". 2024-05-02. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya