அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயில்

அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில்[1]
பெயர்
பெயர்:அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:அனந்தமங்கலம்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீதேவி, பூதேவி உடன் வாசுதேவ பெருமாள்
உற்சவர்:பாமா, ருக்மணி உடன் ராஜகோபால சுவாமி
தாயார்:செங்கமலவல்லித் தாயார் (தனி சன்னதி)
சிறப்பு திருவிழாக்கள்:அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
தொலைபேசி எண்:+91- 4364 - 289 888, 256 221 [2]

அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கும் இடையே அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது அனுமாருக்கு சிறப்பானதாக ’அனுமத் ஷேத்திரமாக’ வழங்கப்படுகின்றது. [1]

திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்

பிரதான திருக்கோயில் ராஜகோபால சுவாமி எனும் பெருமாளுக்கு உரியது. உள்ளே அமைந்துள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் பத்து கரங்கள், மூன்று கண்கள் கொண்டு காட்சி தருகின்றார்.

சங்கம், சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீலம் ஆகியவற்றைத் தம் கரங்களில் ஏந்தி முதுகில் கருடாழ்வாரைப்போன்று சிறகுகளுடன் இவர் அமைந்துள்ளது சிறப்பான அரிய அம்சமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 குமுதம் ஜோதிடம்; 27.09.2013; பக்கம் 3-6
  2. http://temple.dinamalar.com/New.php?id=245
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya