அப் ஊர்பி கொண்டிட்டாஅப் ஊர்பி கொண்டிட்டா (ab urbe condita, AUC) என்பது இலத்தீன் மொழியில் "ரோம் நகரம் நிறுவப்பட்டதில் இருந்து" [1] எனப்படும். மரபுவழியாக இது கிமு 753 ஆம் ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. சில ரோமன் ஆண்டுகளைக் குறிக்க பண்டைய ரோமன் வரலாற்றாளர்கள் அ.ஊ.கொ (AUC) என்ற இந்த ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள். உண்மையில், பண்டைய ரோமன்களை விட இன்றைய வரலாற்றாசிரியர்கள் இந்த ஆண்டு முறையை மிக அதிகமாக தமது ஆக்கங்களில் பயன்படுத்தி வருகின்றனர். ரோமர் காலத்தில் பொதுவாகத் தமது ஆண்டுகளை அந்தந்த ஆண்டில் இருந்த இரண்டு ஆட்சியாளர்களின் (consul) பெயரால் அழைத்தனர். பேரரசர் ஒருவர் ஆட்சியேறிய ஆண்டும் (regnal year) சில வேளைகளில் பயன்படுத்தப்பட்டது. இம்முறை குறிப்பாக பைசண்டைன் பேரரசு காலத்தில் கிபி 537 இற்குப் பின்னர் யுஸ்டீனியன் பேரரசனின் நடைமுறையில் இருந்தது. அனோ டொமினி ஆண்டுகளுடன் ஒப்பீடுரோம் நகரில் டையனைசியஸ் எக்சிகசு என்ற துறவி கிபி 525 ஆம் ஆண்டில் அனோ டொமினி முறை காலக்கணக்கீட்டை அறிமுகப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பற்றிய அவரது ஆய்வை அடிப்படையாக வைத்து அவர் இந்த முறையைக் கணக்கிட்டார். அவரது ஈஸ்டர் அட்டவணையில் கிபி 532 ஆம் ஆண்டை ரோமப் பேரரசன் டயோகிளேத்தியன் முடி சூடிய ஆண்டான 248 உடன் தொடர்பு படுத்தினார். டயோகிளேத்தியன் முடி சூடிய 284, நவம்பர் 20 ஆம் நாளுடன் ஆரம்பிக்காமல், பதிலாக இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டாக எண்ணப்படும் ஆண்டுடன் தனது அட்டவணையைத் தொடங்கினார்[2]. இயேசு கிறிஸ்துவின் பிறந்த ஆண்டு கிபி 1 எனவோ அல்லது கிமு 1 எனவோ அவர் கருதியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது (அனோ டொமினி ஆண்டுக்கணக்கில் சுழியம் ஆண்டு இல்லை). கிபி 1 ஆம் ஆண்டு ரோம ஆண்டு "DCCLIV அப் ஊர்பி கொண்டிட்டா" எனப் பின்னர் வரலாற்றாய்வாளர்களால் கணக்கிடப்பட்டது[3].
குறிப்புகளும் மேற்கோள்களும்
|
Portal di Ensiklopedia Dunia