அமர்காண்டாக் விரைவுவண்டிஅமர்காண்டாக் எக்ஸ்பிரஸ் (Amarkantak Express) தினசரி செயல்படக்கூடிய ஒரு அதிவிரைவு ரயில் சேவையாகும். இது வண்டி எண் 12853 மற்றும் 12854 என்ற எண்களுடன் செயல்படுகிறது. அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் சந்திப்பிற்கும், சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான துர்க் நகரத்தின் ரயில் நிலையத்திற்கும் இடையே செயல்படுகிறது. அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ், 8225 மற்றும் 8226 என்ற வண்டி எண்களுடன் செயல்பட்ட போபால் – பிலாஸ்பூர் மஹாநதி எக்ஸ்பிரஸ், 8291 மற்றும் 8292 என்ற வண்டி எண்களுடன் செயல்பட்ட போபால் – ராய்பூர் எக்ஸ்பிரஸ், அத்துடன் 1235 மற்றும் 1236 என்ற எண்களுடன் செயல்பட்ட போபால் – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு பதிலாக இயக்கப்பட்டது. பெயர்க் காரணம்மத்திய பிரதேச மாநிலத்தின் அனூப்பூர் மாவட்டத்தின், யாத்திரீக நகரமான அமர்காண்டாக் பெயரின் அடிப்படையில் ‘அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ்’ என்று இந்த ரயில்சேவை அழைக்கப்படுகிறது. மத்திய இந்தியாவின் மிகப்பெரிய நதியான நர்மதா நதி இந்நகரத்திற்கு அருகே தனது பயணத்தினை தொடங்குகிறது. வந்தடையும் நேரமும் புறப்படும் நேரமும்வண்டி எண் 12854 போபால் சந்திப்பில் இருந்து தினமும் மாலை 3.40 மணியளவில் புறப்பட்டு, துர்க் நகரத்தினை அடுத்த நாள் காலை 7.55 மணியளவில் வந்தடையும். வண்டி எண் 12853, தினமும் துர்க் நகரத்தில் இருந்து மாலை 6.20 மணியளவில் புறப்பட்டு போபால் சந்திப்பினை அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் சென்றடையும். அமர்காண்டாக் எக்ஸ்பிரஸ், அதன் இலக்கினை அடையும் முன் 28 நிறுத்தங்களைக் கொண்டுள்ளது.[1][2] வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்
சராசரி வேகம்தினசரி இருதிசைகளிலும் செயல்படும் இந்த ரயில்சேவையானது சராசரியாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படுகிறது. வண்டி எண் 12854 சராசரியாக 7 நிமிடங்கள் தாமதத்துடன் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 57 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. அதேபோல் வண்டி எண் 12853 சராசரியாக 3 நிமிடங்கள் தாமதத்துடன் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 64 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது.[3][4] போபால் – பிலாஸ்பூர் பாதையில் செயல்படும் இதர தொடருந்து சேவைகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia