அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு (Confederate States of America) அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ (CSA) எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். எனினும் இது பிற நாடுகளாலோ அல்லது அனைத்துலகச் சட்டங்களினாலோ ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், இது எப்போதும் ஒரு முறையான விடுதலை பெற்ற அரசாக இருந்தது இல்லை. ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன. வரலாறுபிரிவினைக்கான காரணங்கள்பிரிவினைக்கான உடனடிக் காரணம் 1860 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்ற வெற்றியும், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், தென் கரோலினா[1], மிசிசிப்பி[2], ஜார்ஜியா[3], டெக்சாஸ்[4] ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது. எனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, நீக்ரோக்கள் வெள்ளையருக்குச் சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, தத்துவரீதியான, நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்[5]. தேசியக் கொடிகள்
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ கொடியானது "விண்மீன்கள் மற்றும் பட்டைகள்" (Stars and Bars) என அழைக்கப்பட்டது. - துவக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஏழு மாநிலங்களில் குறிக்க ஏழு விண்மீன்கள், இருந்தன. மேலும் மாநிலங்களில் இணைந்த போது ஒவ்வொன்றிற்கும் ஒன்று என (கென்டக்கி மற்றும் மிசோரி அப்போது பிரிந்திருந்ததால் அவற்றிற்கு மட்டும் இரண்டு சேர்க்கப்பட்டது) மேலும் 13 விண்மீன்கள் சேர்க்கப்பட்டன. எனினும், புல் ரனின் முதல் போரின் போது, சில நேரங்களில் ஒன்றிய கொடியிலிருந்து இருந்து நட்சத்திரங்கள் மற்றும் பட்டைகள் கொடியினை வேறுபடுத்துவது சிரமமானதாக இருந்தது. இதனால் போரிபோது மட்டிம் தனியாக வேறு கொடி பயன்படுத்தப்பட்டது. சட்ட பூர்வமாக இக்கொடி ஏற்கப்படாவிடினும், மக்கள் மத்தியிலும், வீரர்கள் மஹ்தியிலும் இக்கொடி புகழ் பெற்று விளங்கியது. இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் போது இந்த கொடியிலும் கூட சிக்கள்கள் இருந்தன. ஒரு காற்றடிக்காத, இதை எளிதாக சமாதான ஒப்பந்தக் கொடி எனவோ அல்லது சரணடைய அறிவிக்கும் கொடி எனவோ தவறாக கனிக்க வாய்ப்ப்புள்ளது. 1865இல் இதன் மாறுபட்ட வடிவம் ஏற்கப்பட்டது. இப்புதிய வடிவில் இதன் வெள்ளைப்பகுஹ்டி குறுகியும், சிகப்புப்பகுதி நீண்டும் இருந்தது. நிலவியல்தட்பவெப்ப மற்றும் நிலப்பரப்புஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, 2,919 மைல்கள் (4,698 km) கரையோரங்களைக் கொண்டுரிந்தது. இதனால் இதன் பெரிய பகுதி மணல் அல்லது சதுப்பு நிலமாக இருந்தன. உட்புற பகுதி பெரும்பாலும் விளைநிலங்களை கொண்டிருந்தது. இதில் சில மலைப்பாங்கான பகுதிகளும் இருந்தன. மேற்கு பகுதிகளில் பாலைவனங்கள் இருந்தன. மிசிசிப்பி ஆற்றின் கீழ்ப்பகுதி நாட்டினை இருபகுதிகளாக பிரித்தது..நீட்டின் மிக உயர்ந்த இடமாக (அரிசோனா, மற்றும் நியூ மெக்ஸிக்கோ நீங்கலாக) 8,750 அடிகள் (2,670 m) உள்ள டெக்சிஸில் உள்ள குவாதலூபே குன்று ஆகும். ![]() காலநிலைஇப் பகுதியில் லேசான குளிர்காலமும் நீண்ட, சூடான, ஈரப்பதமிக்க கோடைகாலமும் உடைய ஈரமான மிதவெப்ப தட்பவெப்பநிலை இருந்தது. தட்பவெப்பநிலை 100 டிகிரி மேற்கு திசையில் வறண்ட பாலைவனங்கள் முதல் பரந்த சதுப்பு நிலம் (அதாவது புளோரிடா மற்றும் லூசியானா இருப்பது போன்ற) வரை நாடுமுழுக்க பல் வேறுபட்ட நிலையில் இருந்தது. மிதவெப்ப தட்பவெப்பநிலை குளிர்காலத்தை லேசானதாக்கினாலும், இக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவ வழிவகுத்தது. இதன் விளைவாக, இரு தரப்பிலும் அதிக வீரர்கள் போரில் கொல்லப்பட்டதை விட நோய் தாக்கி இறந்தார்.[9] முதல் உலக போருக்கு முன் இது ஒரு இயபான நிகழ்வுஆகும். உசாத்துணைக் குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia