அம்மெய்யன் நாகனார்

அம்மெய்யன் நாகனார் சங்ககாலப் புலவரில் ஒருவர். அவரது பெயரில் ஒரே ஒரு பாடல் உள்ளது.

பாடல்

நற்றிணை 252 பாலை

பாடல் தரும் செய்தி

தலைவன் பொருள் தேடப் பிரிவான் என்று கவன்ற தலைவிக்குத் தோழி சொல்கிறாள்.

தலைவியின் அழகு

  • புனைசுவரில் இருக்கும் பாவை போன்றவள்
  • சுருங்கி விரிந்த அல்குல்(=இடுப்பு)
  • கருமை மிகுந்து தாமரை மொட்டுகளை இணைத்து வைத்தாற் போன்ற மழைக்கண்
  • முயல் வேட்டைக்குச் செல்லும் வேட்டைநாயின் நாக்குப் போன்ற சீறடி
  • பொம்மல் ஓதி (பொம்மிக்கொண்டிருக்கும் தலைமுடி)

பொருள் தேடல்

வீட்டிலிருந்தால் பொருள் வராது. எல்லை கடந்து சென்று பொருளை ஈட்டவேண்டும். திறம்(=நல்ல செயல்கள்) புரியும் சோக்கத்தோடு ஈட்டவேண்டும்.

இயற்கை

சிள்வீடு (இக்காலத்தில் சில்லுவண்டு என்பர்) காய்ந்த ஓமை மரத்தில் இருந்துகொண்டு கறக்கும் (ஒலிக்கும்)

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya