அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு (Iodine trifluoride dioxide) என்பது IO2F3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்அயோடைடுசேர்மமாகும்.[1][2][3] முதன்முதலில் 1969 ஆம் ஆண்டில் ஏங்கல்பிரெக்ட்டும் பீட்டர்சியும் இணைந்து இச்சேர்மத்தை கண்டறிந்தார்கள்.[4]
தயாரிப்பு
மெட்டாபெரயோடிக் அமிலத்துடன் ஒலீயத்தைச் வினை புரியச் செய்தால் அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு உருவாகிறது.[4]
பண்புகள்
மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகும் அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு 41 °செல்சியசு வெப்ப நிலையில் உருகுகிறது.[5] நேரடியாக சூடுபடுத்தினாலோ அல்லது சூரிய ஒளிக்கு வெளிப்பட்டாலோ சிதைவடைகிறது.
படிகநிலை மூலக்கூறுகள் இருமங்களாக காணப்படுகின்றன. 100°செல்சியசு வெப்ப நிலைக்கு மேலான வெப்பநிலையில் இது ஒருமமாக உள்ளது.[6]