அலசன் விளக்குஅலசன் விளக்கு (Halogen lamp) அல்லது தங்குதன்-அலசன் விளக்கு ( tungsten halogen lamp) என்பது அடிப்படையில் வெள்ளொளிர் விளக்குப் போன்றதே. எனினும் இவ்வகை விளக்கின் குமிழினுள் நிரப்பபடும் வாயுக்களுடன் அலசன்களும் உள்ளன.[1][2][3] தங்ஸ்தன் நுண்ணிழையாலான வெள்ளொளிர் விளக்குகளில், இழை சூடாகி ஒளிரும்போது தங்ஸ்தன் ஆவியாகி குமிழின் உட் பகுதியில் படிகின்றது. இது குமிழை மங்கச் செய்வதுடன், விளக்கிலிருந்து கிடைக்கும் ஒளியின் அளவும் குறைகின்றது. அத்துடன் இழையும் மெல்லியதாகி விரைவில் அறுந்து விடுகிறது. தங்ஸ்தன் - அலசன் விளக்கு இதற்கு ஒரு தீர்வாக அமைகின்றது. இங்கே வெப்பத்தினால் இழையிலுள்ள தங்ஸ்தன் ஆவியாகும் போது குமிழினுள் உள்ள அலசன்கள் அதனுடன் தாக்கமுறுவதனால் அது குமிழ்ச் சுவரில் படிவது தடுக்கப்படுகின்றது. இதனால் விளக்கின் வாழ்க்கைக் காலம் முழுதும் அதிலிருந்து ஏறத்தாள ஒரேயளவு ஒளியே கிடைக்கிறது. இது மட்டுமன்றி தங்ஸ்தனும், அலசனும் சேர்ந்து உருவாகும் சேர்வைகளின் (Compounds) மூலக்கூறுகள் (Molecules) சூடாக இருக்கும் நுண்ணிழைக்கு அருகில் செல்லும்போது மீண்டும் பிரிவடைந்து, தங்ஸ்தன் உலோகம் நுண்ணிழையில் மீண்டும் படிகின்றது. இதன் காரணமாக ஆவியாதல் மூலம் தங்ஸ்தன் இழை மெலிந்து அறுந்து போவதற்குக் கூடிய காலம் எடுக்கும். எனவே விளக்கின் ஆயுட் காலமும் அதிகரிக்கின்றது. இவ்விளக்கின் ஒளியில் நிறங்கள் கூடிய ஒளிர்வு (vibrant) பெறுவதுடன், மேற்பரப்புகள் ஒருவித மினுங்கல் தன்மையுடனும் தோற்றமளிக்கின்றன. சாதாரண வெள்ளொளிர்வு விளக்குடன் ஒப்பிடும்போது தங்ஸ்தன் - அலசன் விளக்குகள் கூடிய ஒளிதருகின்றன. ஒப்பீட்டளவில் குறைந்த வாட்டளவு (Wattage) கொண்ட விளக்குகளிலிருந்து கூடிய ஒளிப் பாயத்தைப் (Luminous Flux) பெறமுடிகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia