அலெக்சாண்டர் ரியோஅலெக்சாண்டர் ரியோ (Alexander Rea) (17 அக்டோபர் 1858 — 4 பிப்ரவரி 1924[1]) பிரித்தானிய தொல்லியல் அறிஞரன இவர் பிரித்தானிய இந்தியாவில் தென்னிந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதல் உதவி தொல்லியல் ஆய்வாளராக 1882-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தவர். பின்னர் 1892-இல் இவர் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.[2][3] இவர் பல்லாவரம் மலையடிவாரத்தில் நடத்திய அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல் சவப்பெட்டியை கண்டெடுத்தார்.[4] ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அலெக்சாண்டர் ரியோ, 1899-1900களில் ஆதிச்சநல்லூரில் சிறிய அளவிலேயே குழிகளைத் தோண்டி ஆய்வுசெய்தார். பிறகு 1903-04-ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் பெரிய அளவிலான அகழாய்வுகளை மேற்கொண்டார். அலெக்ஸாண்டர் ரியா செய்த ஆய்வின் போது கிடைத்த பொருட்கள், தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணிக் கரையில் உள்ள தொல்லியல் தலங்களை அடையாளம் காண பாளையங்கோட்டையிலிருந்து தாமிரபரணி கடலில் கலப்பது வரை நடந்துசென்று 38 இடங்களை அடையாளம் கண்டார் ரியா. ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்த இடமென்பது இறந்தவர்களை புதைக்கும் இடம். இந்த இடத்திற்கு அருகில் மக்கள் வாழ்ந்த இடமாக தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் உள்ள கொங்கராயங்குறிச்சி அடையாளம் காணப்பட்டது. இந்தப் பகுதியில் கிடைத்த மண்பாண்டங்கள் வேறு விதமாக இருந்தன. இதன் மூலம், இறுதிச் சடங்குகளுக்கெனவே தனியாக பானைகளைச் செய்யும் பழக்கம் இருந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆதிச்சநல்லூர் ஒரு வணிகத் தலமாக இருந்திருக்கலாம் எனக்கருதினார் அலெக்சாண்டர் ரியா.[5] வெளியீடுகள்இவர் எழுதிய சில நூல்கள் வருமாறு:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia