அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில்
அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் பாண்டவர்களின் வனவாசத்தில் வழிகாட்டியருளிய கோயிலாக கருதப்படுகிறது.இத்திருக்கோயில் வத்திராயிருப்பில், மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில், மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கடும் வறட்சி நிலவிய காலகட்டத்தில் இங்கு வந்த பஞ்சபாண்டவர்களைக் கண்ட மக்கள் வறட்சியை நீக்க வேண்டினர், அர்ஜூனன் தமது காண்டீபத்தை பூமியில் செலுத்தி கங்கையையே இங்கு கொண்டு வந்தார். அதுவே அர்ஜூன நதி என்று இன்று போற்றப்படுகிறது. வரலாறுஸ்ரீமகாலட்சுமி நாராயணரைத் தனிமையில் தியானித்து தவம் செய்ய ஏற்ற புனிதமான இடத்தை சப்தரிஷிகளிடம் கேட்க, அவர்கள் தேர்ந்தெடுத்து காட்டிய இடம் இது. இதனை ஸ்ரீதேவித் தாயார் முகம் மலர்ந்து ஏற்றதால், இந்த தலத்திற்கு ஸ்ரீவக்த்ரபுரம் (ஸ்ரீ - மகாலட்சுமி; வக்த்ரம்-திருமுகம் மலர்தல்) என்ற பெயர் வந்தது. இங்கு தவம் இருந்த ஸ்ரீதேவித் தாயார் அதன் பலனாக பெருமாளைக் கைத்தலம் பற்றிய தலம் இங்கிருந்து 38கி.மீ தொலைவில் உள்ள திருத்தங்கல் என்ற திருத்தலம். பிரம்மாண்ட புராணத்தில் உள்ள திருத்தங்கல் மஹாத்மியத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. இறங்காக்கிணறு மற்றும் உறங்காப்புளி ஆகியவை இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கல்வெட்டுகள்
சிதிலமடைந்த கோவில்காலவெள்ளத்தில் இத்திருக்கோவில் சிதிலமடைந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள இந்தக் கோவிலை சீரமைக்க அத்துறைக்கு 2010 ஆம் ஆண்டில் குமுதம் ஜோதிடம் பத்திரிக்கை, பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் வைத்தது. வத்திராயிருப்பு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. [2] தலவரலாற்றுத் தொடர்புடைய திருக்கோயில்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia