ஆட்டம் (மலையாளத் திரைப்படம்)
ஆட்டம் (பொருள்: நாடகம், Aattam) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதை ஆனந்த் ஏகர்ஷி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை ஜாய் மூவி புரொடகசன்ஸ் சார்பில் அஜித் ஜாய் தயாரித்தார். இந்த திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் 2023 ஆம் ஆண்டிற்கான கிராண்ட் ஜூரி விருதைப் பெற்றது, கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைப்படத்திற்கான 70வாவது தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[2] கதைஹயவதனா என்ற நாடகத்தில் ஒரு நாடகக் குழுவினர் நடிக்கின்றனர். அந்த நாடகத்தைக் காணவந்த இருவர், அக்குழுவினரை தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைக்கின்றனர். விருந்துக்குப் பிறகு நாடகக் குழுவினர் அதே வீட்டில் தங்குகின்றனர். குழுவில் உள்ள 12 பேரில் ஒரே பெண் அஞ்சலி மட்டுமே. அந்த இரவில் பன்னிரண்டு பேரில் ஒருவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறார். அக்குழுவில் அண்மையில் இணைந்த திரைப்பட நடிகர் ஹரி மீது அக்குற்றம் குறித்த சந்தேக நிழல் படர்கிறது. எனவே அவனைக் குழுவைவிட்டு நீக்குவது குறித்து மற்ற 11 ஆண்களும் கலந்துரையாடுகின்றனர். அவனை வெளியேற்றுவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட முயல்கையில், அந்த முடிவை எடுக்க வேண்டாம் என்றும் அந்த தண்டனை அவசியமா என்று ஒருசிலருடைய கேள்வியாகிறது. அது எப்படி பெரும்பான்மையினரின் கேள்வியாக மாறுகிறது என்பதே கதைப் போக்காக உள்ளது. நடிகர்கள்வெளியீடுலாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா, இந்திய சர்வதேச திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா, ஆகிய விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டைப் பெற ஆட்டம் 5 சனவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3][4][5][6][7][8] பாராட்டுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia