ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீசுவரர் கோயில்

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு வடக்கிலும் வைத்தீஸ்வரன்கோயிலுக்குத் தெற்கிலும் திருப்புன்கூருக்குக் கிழக்கிலும், திருவெண்காட்டிற்கு மேற்கிலும் உள்ள ஆனந்ததாண்டவபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் பாரிஜாதவனம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடிய இடமாதலால் இவ்விடம் ஆனந்த தாண்டவபுரம் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக பஞ்சவடீசுவரர் உள்ளார். இங்குள்ள பிரஹந்நாயகி என்றும் கல்யாணசுந்தரி என்றும் இரு இறைவிகள் உள்ளனர். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று மணக்கோலத்தில் காட்சி தந்ததால் கல்யாணசுந்தரி என்றழைக்கப்படுகிறார். [2]

சிறப்பு

ஜடாநாதர் என்ற பெயரில் அரிந்தெடுத்த கூந்தலை இடது கையில் பிடித்தபடி இறைவன் காட்சி தருகிறார். சப்த கன்னியரின் கௌமாரி வழிபட்ட சிறப்பைப் பெற்றது இக்கோயில். [2]

அமைப்பு

கிழக்கு நோக்கிய நிலையில் ராஜ கோபுரம் உள்ளது. அடுத்து பலி பீடம், கொடி மரம், திருச்சுற்று ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தில் இறைவி சன்னதியும், நடராசர் சன்னதியும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. திருச்சுற்றின் தெற்கு மூலையில் விநாயகரும், முருகனும் தனி சன்னதிகளில் உள்ளனர். பைரவர், நவக்கிரகர், சனீசுவரர், சந்திரன், துர்க்கை,சூரியன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கஞ்சாற நாயனார் அவதரித்த மற்றும் பேறு பெற்ற தலம் இதுவேயாகும்.[1]

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "பக்தர்களைக் காக்கும் பஞ்சவடீஸ்வரர், தினகரன், 11 டிசம்பர் 2013". Archived from the original on 2015-06-09. Retrieved 2017-01-15.
  2. 2.0 2.1 2.2 அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya