ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது)
ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகளை ஆப்கானித்தானியர்கள் தொடர்ச்சியாக அனுபவித்தனர். புதிய ஆட்சியை வலுப்படுத்த சோவியத் படையெடுப்பு 1979 டிசம்பரில் இடம்பெற்றது. முஜாஹிதீன் என அழைக்கப்பட்ட ஆப்கானித்தான் எதிர்ப்புப்படை சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டனர். சில பிரிவினர் பாக்கித்தானிய சேவைகளிடை உளவுத்துறை மற்றும் சவுதி அரேபிய ஆதரவுடன் அமெரிக்காவின் உதவியைப் பெற்றன. சோவியத் படைகள் 1989 பெப்ரவரியில் இல் பின்வாங்கின. எனினும் சோவியத் ஆதரவு ஆப்கானித்தான் பொதுவுடமை ஆட்சி 1992 இல் காபூல் வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்தது. உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia