ஆம்பல் (தாவரம்)
ஆம்பல் (Nymphaea pubescens, hairy water lily அல்லது pink water-lily) என்பது ஒரு வகை அல்லி மலர் ஆகும். பரவல்![]() ஆம்பலானது மித மற்றும் வெப்பமண்டல ஆசியாவின் வங்காளதேசம், இந்தியா, இலங்கை, யுன்னான், தைவான், பிலிப்பீன்சு, கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளில் ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் பொதுவாக காணப்படுகிறது. இது வங்கதேசத்தின் தேசிய மலர் ஆகும். இது வடகிழக்கு ஆத்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினிவிலும் காணப்படுகிறது.[1] ஆம்பலானது வளர்ப்புத் தாவரமாகவும், காட்டுத் தாவரமாகவும் உள்ளது. இது அமிலத் தன்மை அற்ற நீரையே விரும்புகிறது. மேலும் இது 15 °C க்கும் குறைவான வெப்பநிலையை பொறுத்துக்கொள்ளாது. விளக்கம்ஆம்பல் என்பது ஒரு நீர்வாழ் தாவரமாகும், இதன் வேர்த்தண்டுக்கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். முட்டை அல்லது வட்ட வடிவினதாகிய இவ்விலையின் அடியில் நீண்ட பிளவு ஒன்றுண்டு. இப்பிளவு இலை விளிம்பிலிருந்து இலைக்காம்பு வரை நீண்டிருக்கும். இலையின் நடுவில் இதன் இலைக்காம்பு இணைந்திருக்கும். இக்காம்பு மிக நீள மானது. நீரளவிற்கு நீண்டு கொடுக்கும் இயல்பு இக்காம்பிற்கு உண்டு. குளங்குட்டைகளில் திடீரென நீர் நிரம்பி விடுமாயின், இவ்வியல்பினால் இலைக்காம்பு ஒரிரு நாள்களில் நீண்டு கொடுத்து இலையை நீர்ப்பரப்பின்மேல் நிலைக்கச் செய்யும். இவ்வியல்பு இதன் பூக்காம்பிற்கும் உண்டு. இலையின் கனுக்குருத்து வளர்ந்து பூவாகுமெனினும், இலைக்காம்பிற்கும், பூக்காம்பிற்கும் உள்ளமைப்பில் ஒரே ஒரு வேறுபாடு காணப்படும். இலைக்காம்பில் இரண்டு பெரிய துளைகள் நடுவில் இருக்கின்றன. பூக்காம்பில் ஐந்து பெருந்துளைகள் நடுவில் அமைந்துள்ளன. இத்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன. இதன் இலைகள் தண்ணீர் மீது வட்டமாகவும், இதய வடிவிலானவையாக 15–26 (–50) செ.மீ அளவுள்ளவையாக இருக்கும். வெளிவரும் சில இலைகளின் தண்டுகள் தாமரையைப் போன்று தண்ணீருக்கு சற்று மேலே சற்று உயர்ந்து இலைகளை சுமக்கின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மேற்பரப்பில் மிதக்கின்றன. ஆம்பலானது நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளால் வணிகமயமாக்கப்படுகிறது. இந்த இனத்தாவரத்தின் நீருக்கடியில் உள்ள இலைகள் அழகிய தோற்றத்தை அளிக்கின்றன. இது நீர்வாழ் உயிரி காட்சியகத்தாரால் விரும்பப்டுகிறது. அவர்கள் இதை முழுவதுமாக நீர்வாழ் தாவரமாக வைத்திருக்க இவற்றின் மிதக்கும் இலைகளை நீக்குகின்றனர்.[2] இந்த மலர்கள் மிகவும் பெரியவை. இவை முழுமையாக மலரும்போது விட்டமானது 15 செ.மீ. இருக்கும். இவை பகலில் குவிந்து மூடி, இரவில் அகலமாக மலர்கின்றன. இவை கலப்பினத்தைப் பொறுத்து இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை என நிறத்தால் வேறுபடுகின்றன. பெயரும் வகைகளும்![]() ஆம்பல் மலரானது ஷாப்ளா என வங்காள மொழியிலும், கோகா என இந்தியிலும் குமுதம் என சமஸ்கிருத்த்திலும் அழைக்கப்படுகிறது.[3] இந்த தாவரத்தின் இலைகளின் அடிப்பகுதியியல் சரியாக புலப்படாத அல்லது மெல்லிய ரோமக்கால்களைக் கொண்டிருக்கும். அதைபோல தண்டுகளும் மெல்லிய ரோமக்கால்களைக் கொண்டிருக்கும். இது தண்ணீருக்கு மேலே இருந்து தாவரத்தைப் பார்க்கும்போது வெளிப்படையாக தெரியாது. ஆம்பலானது பல இயற்கை கலப்பினங்களுடன், செயற்கையாகயாக ஆக்கப்பட்ட கலப்பினல்களுடன் வளர்க்கப்பட்ட சில வகைகளைக் கொண்டுள்ளது. ஆம்பலானது பல்வேறு சொற்களில் அறியப்படுகிறது, அவற்றில் மிகவும் பொதுவானது ரெட் வாட்டர் லில்லி என்ற வணிகப் பெயரில் அறியப்படும் செவ்வல்லி ஆகும், இது பெரும்பாலும் ஊதா நிற இலைகளையும் கொண்டுள்ளது. தமிழிலக்கியங்களில் ஆம்பல்"ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்" என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 62). இவ்வடியில் பயிலப்படும் 'ஆம்பல்' என்பதற்கு 'ஆம்பற்பூ' என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். 'ஆம்பல்' என்பது 'அல்லி', 'குமுதம்' என வழங்கும். ஆம்பல் வகையில் தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக் காம்பலும் (செவ்வல்லி) உள்ளன. பொதுவாக ஆம்பல் என்புழி. சங்க இலக்கியங்கள் வெள்ளாம்பலைக் குறிக்கின்றன.[4] ஆம்பற் கொடியின் வேர்த்தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர் பெறுவர் என்ப: "யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத் ஆம்பல் பற்றிச் சங்கப் பாடல்கள் தரும் விளக்கங்களில் குறிப்பிடத்தக்க சில விளக்கங்கள் மட்டும் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன:
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia