ஆர்த்திமிசு 2
ஆர்த்திமிசு 2 (Artemis 2) (அதிகாரப்பூர்வமாக ஆர்ட்டிமிசு II) நாசாவின் ஆர்த்திமிசின் இரண்டாவது திட்டப் பணியும் நாசாவின் ஓரியன் விண்கலத்தின் முதல் திட்டக் குழுப் பணியும் ஆகும் , இது தற்போது 2024 நவம்பரில் விண்வெளமேவுதல் அமைப்பால் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.[1] 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17 க்குப் பிறகு தாழ் புவி வட்டணைக்கு அப்பாலான முதல் குழு பயணமாக நான்கு விண்வெளி வீரர்கள் நிலவண்மையில் பறந்துவிட்டு புவிக்குத் திரும்ப உள்ளனர். 2006 ஆம் ஆண்டில் எஸ். டி. எஸ் - 116 க்குப் பிறகு கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதல் வளாகம் 39 பி இலிருந்து முதல் குழு ஏவுதலாக இந்தப் பணி திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தேட்டக் குழு - 2 (EM - 2) இந்தப் பணி நிலா வட்டணையில் கைப்பற்றப்பட்ட சிறுகோளிலிருந்து பதக்கூறுகளை எடுக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது. இப்போது எந்திரன்வகைச் சிறுகோள் திருப்பி அனுப்பும் பணி நீக்கப்பட்டது. இது ஆர்த்திமிசு நிகச்சிநிரல் அறிமுகமானதும் இதன் பெயர் மாற்றப்பட்டது..[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia