60 முதல் 77 கெல்வின் வரையிலான வெப்பத்தில் குறிப்பிட்ட மோலார் விகிதத்தின் F2—O2 வாயுக் கலவையின் மூலம் மின்சாரத்தைச் செலுத்துவதன் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். வாயுக்களின் விகிதம் இங்கு 6:2 என கணிக்கப்பட்டுள்ளது.[4]
இயற்பியல் பண்புகள்
ஆறாக்சிசன் இருபுளோரைடு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகும். 60 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் அடர்பழுப்பு நிற படிகத் திண்மம் போல காணப்படுகிறது. மெதுவாக வெப்பப்படுத்தினால் இது ஆக்சிசன் புளோரைடுகளாகவும் ஓசோனாகவும் சிதைகிறது. விரைவாக 90 கெல்வின் வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் வெடித்து O2 மற்றும் F2 வாயுக்களை உருவாக்குகிறது.[4]