ஆற்றல் மாற்ற ஆய்வகம்(Laboratory for Energy Conversion) முன்பு சுழலெந்திர ஆய்வகம் அறியப்பட்டது. இது ஆரல் போலெசுலாவ் சுட்டோடொலா (Aurel Boleslav Stodola) என்பவரால் 1892 ஆம் ஆண்டு சுவிசர்லாந்தில் ஜூரிச் மத்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ETH) ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இந்த ஆய்வகம் சுழற்பொறியியல் துறை வராலாற்றில் புலமைபெற்ற பொறியாளர்கள் தலைமையில் வழி நடத்தப்பட்டுவந்தது..
ஆராய்ச்சித் துறைகள்
ஆற்றல் மாற்றஆய்வகத்தின் தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள் கீழ்காணும் புலங்களில் அமைகின்றன:
ஆற்றல் மாற்ற ஆய்வகத்தின் பல சாதனைகளில் அண்மையில் உருவாக்கப்பட்ட காலப் பிரிதிறப் பாய்ம இயக்கக் குலைதிற ஆய்கருவி(FENT) குறிப்பிடத் தக்கதாகும்.[1] இந்த ஆய்கருவி முதன்முறையாக, சுழற்பொறியின் குலைதிறவாக்கத்தை(entropy) அளக்கிறது. உயர்தர ஒருசாலை ஆய்வாளர் மேற்பார்வையிடும் அளத்தல் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் ஆய்விதழ்[2] இந்த ஆய்கருவி உருவாக்கம் 2008 இல் பாய்ம இயக்கவியல் சார்ந்த மிகச்சிறந்த கொடையாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
↑Foss, John; Dewhurst, Richard; Fujii, Kenichi; Regtien, Paul (1 May 2009). "Announcing the 2008 Measurement Science and Technology Outstanding Paper Awards". Measurement Science and Technology20 (5): 050101. doi:10.1088/0957-0233/20/5/050101.