ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2014ஆலந்தூர் சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் அதன் உறுப்பினராக இருந்த தேமுதிகவின் பண்ருட்டி இராமச்சந்திரன் 2013ல் பதவி விலகியதால் ஏற்பட்டது. இத்தேர்தல் 2014ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். போட்டியிடும் வேட்பாளர்கள்இந்த இடைத்தேர்தலில் மொத்தம் பதினான்கு பேர் போட்டியிட்டனர். தேமுதிக சார்பாக எ. எம். காமராசும் திமுக சார்பாக ஆர் எசு பாரதியும், அதிமுக சார்பாக வி. என். பி. வெங்கட்ராமனும், எளிய மக்கள் கட்சி (ஆம் ஆத்மி) சார்பாக ஞாநி சங்கரனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பொதுவுடமை கட்சிகள் ஞானி சங்கரனை ஆதரித்தன.[1] தேமுதிக வேட்பாளர் 2005-2009ல் வாங்கிய பல கோடி ரூபாய் சொத்துக்களை 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல சொத்துக்களை குறிப்பிட தவறிவிட்டார் என்றும் 2014 இடைத்தேர்தலில் குறிப்பிட்டுள்ளார் எனவும் தேர்தல் ஆணையத்தில் ஞானி குற்றம் சுமத்தினார்.[2] வாக்குப்பதிவுஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இங்கு 63.98% வாக்குகள் பதிவாகின.[3] வாக்கு எண்ணிக்கை மையம்ஜெ.ஜெ. அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்.[4] தேர்தல் முடிவு
மேற்கோள்கள்
உசாத்துணைவெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia