ஆல்ஜின்
![]() அல்ஜீனிக் அமிலம் (Alginic acid), அல்லது ஆல்ஜின் (algin) பழுப்புக் கடற்பாசிகளில் உள்ள உண்ணக்கூடிய இயற்கை பல்சர்க்கரைப் பொருளாகும். இது நீர்வேட்புப் பொருளாகும்; நீரில் கரைத்து, பிசுபிசுப்பான இயற்கைக் கோந்தைப் பெறலாம். சோடியம், கால்சியம் பொன்மங்கள் சேர்த்துச் அல்ஜினேட்டுகள் எனும் உப்புகளைப் பெறலாம். இதன் நிறம் வெள்ளை முதல் மஞ்சட் பழுப்பு வரை மாறும். இது படலமாகவோ குறுமணிகளாகவோ தூளாகவோ விற்கப்படுகிறது. ஆல்ஜின் கடற்பாசிகளிலிருந்து சிறப்பாக பழுப்பு நிறப்பாசிகளிருந்து பிரித்து எடுக்கப்படும் ஓர் இயற்கைக் கோந்தாகும். ஆல்ஜினில் சோடியம், பொட்டாசியம், அம்மோனியம், கால்சியம் ஆல்ஜினிக் உப்புகள், புரோப்பைன் கிளைக்கால் ஆல்ஜினேட்டு ஆகியவை அடங்கியுள்ளன. மாக்ரோசிஸ்டிஸ் பைரிபெரா, அஸ்கோஸ்பில்லம் நோடோசம் போன்ற பாசிகளிலிருந்து ஆல்ஜின் பெருமளவில் பிரிக்கப்படுகிறது. கைல், மெக்சிக்கோ, ஆத்திரேலியா ஆகிய இடங்களில் கடற்கரையை ஒட்டி பெருவாரியாகக் கிடைக்கிறது. இது சூடோமோனாசு ஏருஜினோசா எனும் குச்சுயிரி உருவாக்கும் உயிரிப் படலங்களில் கணிசமான உட்கூறாக அமைகிறது. இந்தக் குச்சுயிரி நாரிழக்கல அழர்சி நோயுள்ள நுரையீரல்களில் காணப்படுகிறது.[1] இந்த உயிரிப் படலமும் பி. ஏருஜினோசா குச்சுயிரியும் உயிர்முறி மருந்துகளுக்கு உயர் எத்திர்ப்பைக் காட்டுகின்றன;[2]ஆனால், பேருண்ணித் தடுப்புக்கு ஆட்படுகின்றன.[3] கட்டமைப்புஅல்ஜீனிக் அமிலம் நேரியல் இணைபலபடியாகும்; இதில் முறையே (1→4)- பிணைந்த β-D-மான்னுரோனேட்டு (M), α-L- பிணைந்த குளூரோனேட்டு (G) எச்சங்களும் உள்ள கூட்டிணைதிறப் பிணைப்பு கொண்ட ஒத்தபலபடி துண்டங்கள் பல்வேறு வரிசைமுறைகளிலும் துண்டங்களிலும் அமைகின்றன.தொடர்வரிசை G-எச்சங்கள் (G-துண்டங்கள்), தொடர்வரிசை M-எச்சங்கள் (M-துண்டங்கள் அல்லது ஒன்றுவிட்டொன்றாக அமையும் M, G-எச்சங்கள் (MG-துண்டங்கள்) ஆகிய ஒத்தபலபடி துண்டங்களில் ஒற்றைப்படி மூலக்கூறுகள் தோன்றலாம். α-L-குளூரோனேட்டு என்பது β-D-மான்னுரோனேட்டின் C-5 எப்பிமர் ஆகும். வடிவங்கள்சோடியம் அல்ஜினேட்டு (NaC6H7O6) என்பது அல்ஜீனிக் அமிலச் சோடிய உப்பாகும்மிது ஒரு கோந்தாகப் பயன்படுகிறது. பொட்டாசியம் அல்ஜினேட்டு (KC6H7O6) என்பது அல்ஜீனிக் அமிலப் பொட்டாசியம் உப்பாகும். கால்சியம் அல்ஜினேட்டு (CaC12H14O12), என்பது சோடியம் அலிஜினேட்டில் உள்ள பொட்டாசியம் மின்னணுவை கால்சியம் மின்னணுவால் பதிலிட்டுப் பெறப்படுகிறது. பயன்கள்ஆல்ஜின் உணவுப்பொருட்களும், மருந்துகளும், தொழில்சார் வேதிப்பொருட்களும் உருவாக்க பயன்படுகிறது.[4] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia