இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு
இசுடாண்டர்ட் & புவர்'சு (Standard & Poor's, சுருக்கமாக S&P) ஓர் அமெரிக்க நிதியச் சேவைகள் நிறுவனமாகும். பங்குகள் மற்றும் கடனீடு ஆவணங்களை அலசி ஆய்வு செய்து வெளியிடும் மக்ராஹில் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற பங்குச் சந்தை குறியீடுகளுக்கு பரவலாக அறியப்பட்டது. கடன் மதிப்பீடு வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.[2] இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூயார்க் நகரில் கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.[3] ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி தேவன் சர்மா பதவி விலக வேண்டியதாயிற்று.[4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia