இசுப்புட்னிக் 4
மனிதரை ஏற்றிய விண்வெளிப் பறப்புக்களை நிகழ்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட தொடர் விண்கலங்களுள் இதுவே முதலாவதாகும். இது பல அறிவியற் கருவிகள், ஒரு தொலைக்காட்சித் தொகுதி, ஒரு பொம்மை மனிதனைக் கொண்ட உயிர் வாழ்வுக்கான வசதிகளைக் கொண்ட ஒரு சிற்றறை என்பவற்றைக் கொண்டிருந்தது. உயிர் வாழ்வதற்கான வசதிகளை வழங்கும் முறைமைகளின் இயக்கம் மற்றும் பறப்பில் ஏற்படக்கூடிய நிலைமைகளையும் ஆராயும் நோக்குடனேயே இக்கலம் வடிவமைக்கப்பட்டது. விண்கலம் ஏராளமான தொலை அளவீட்டுத் தகவல்களையும், முன்னரே பதிவு செய்யப்பட்ட குரலையும் வானலை மூலம் அனுப்பியது. நான்பு நாள் பறப்புக்குப் பின்னர், மீள்கலம், சேவைக் கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புவிக்குத் திரும்புவதற்கான ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. இக்கட்டத்திலேயே வழிகாட்டு முறைமை சரியாக இயங்காமல் திட்டமிட்டபடி கலம் பூமியை நோக்கித் திரும்பவில்லை. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia