இசுரேலிய தேசியக் கொடி
இசுரேலிய தேசியக் கொடி (எபிரேயம்: דגל ישראל, Degel Yisrael, Arabic: علم إسرائيل) ஒக்டோபர் 28, 1948 அன்று இசுரேல் உருவாக்கப்பட்டு ஐந்து மாதங்களின் பின் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது வெள்ளை பின்னனியில் இரண்டு நீல நிற கிடையான கோடுகளின் நடுவே நீல நிற தாவீதின் நட்சத்திரத்துடன் வரையப்பட்டுள்ளது. நீல நிறம் "ஆழ் வான் நீல" நிறமாக மாத்திரம் இருக்க வேண்டும்.[1] வேறுபட்ட கொடிகளுக்கு ஏற்ப தூய நீல சாயல், சில வேளை மங்கி கிட்டத்தட்ட ஆழ் கடல் நீலமாக, 75% தூய மென் நீலமாகவும் மிக மென்மையான நீல நிறமாகவும் மாறலாம்.[2] இக்கொடி சீயோனிய இயக்கத்தினால் 1891 இல் வடிவமைக்கப்பட்டது. இதன் அடிப்படை வடிவம் வெள்ளையில் நீல நிறக் கோடுகளுடைய யூதர்களின் வேண்டுதல் போர்வையான தலிட் என்பதைக் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் நடுவில் தாவீதின் நட்சத்திரத்திரமான அறுகோண நட்சத்திரம் அமைந்துள்ளது. இது வரலாற்று இடைக்காலத்தில் யூத அடையாளமாக விளங்கி, 1897 ஆம் ஆண்டு கூடிய முதலாம் சீயோனிய சபையில் உள்வாங்கப்பட்டது.[1] 2007 இல், 660 X 100 மீட்டர் (2,165 x 330 அடி) அளவும் 5.2 டன் நிறையும் உடைய இசுரேலிய தேசியக் கொடி புராதன யூத கோட்டையான மசாடா அருகில் விரிக்க வைக்கப்பட்டு உலகில் பெரிய கொடி என்ற உலக சாதனையை நிகழ்த்தியது.[3] நிறங்களின் விளக்கம்
குறிப்பு
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia