இசுலாமியப் புத்தாண்டுஇசுலாமிய புத்தாண்டு அல்லது ஹிஜ்ரி புத்தாண்டு (Islamic New Year ) (அரபி: رأس السنة الهجرية) இசுலாமிய நாட்காட்டியில் ஆண்டு தொடக்கத்தை குறிக்கும் நாள் ஆகும்.இசுலாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முகரம் மாதத்தின் முதல் நாள் இசுலாமியப் புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. வரலாறுகி.பி. 622 இல் இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த நிகழ்ச்சி அரபு மொழியில் ஹிஜிரத் எனப்படும். அந்த ஆண்டே முதல் இசுலாமியத் புத்தாண்டு ஆகும்.[1] கணக்கீடுகள்சில இசுலாமியர்கள் நிலவை உள்ளூரில் நேரடியாக பார்த்து புதிய மாதத்தினைத் தீர்மானிக்கின்றனர். எனவே புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.[2] சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான இசுலாமிய நாடுகளில்,வானியல் கணக்கீடுகள் பின்பற்றி இசுலாமிய நாட்காட்டியில் எதிர்கால தேதிகள் தீர்மானிக்க படுகின்றன. புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. [3] நாள் ஆரம்ப நேரம்இசுலாமிய நாட்காட்டியில் நாள் சூரியன் மறையும் நேரம் அல்லது நிலவு தோன்றும் நேரம் என வரையறுக்கப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி ஒப்பீடுஇசுலாமிய நாட்காட்டி சந்திர ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி சூரிய ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. எனவே இசுலாமிய ஆண்டு கிரிகோரியன் ஆண்டை விட பன்னிரெண்டு நாட்கள் குறைவாக இருப்பதால், இஸ்லாமிய புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் நாட்காட்டியில் அதே நாளில் வரவில்லை. கிரிகோரியன் நாட்காட்டியின்படி பின்வரும் தேதிகளில் இஸ்லாமிய புத்தாண்டு ஒத்திருக்கும்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia