இடேசுவென்துராடாசு தீவுக்கூட்டம்
இடேசுவென்துராடாசு தீவுக்கூட்டம் (Desventuradas Islands (எசுப்பானியம்: Islas Desventuradas,[2] IPA: [ˈislas ðesβentuˈɾaðas], "Unfortunate Islands" or Islas de los Desventurados, "Islands of the Unfortunate Ones"[3]) என்ற தீவுக்கூட்டத்தில் நான்கு சிறிய ஓசியானியாவின் தீவுகள் அடங்கியுள்ளன. இத்தீவுகள் அமைதிப் பெருங்கடலில் உள்ள சிலியின் கடற்கரையிலிருந்து 850 கிலோமீட்டர்கள் (530 mi) தொலைவிலும், சான் டியேகோ (சிலி) வடமேற்கிலும் அமைந்துள்ளன.[4] இவைகள் சிலியின் வெளிப்புறத்தின் பகுதி எனக் கருதப்படுகிறது. இத்தீவுகள் தனித்து, மக்கள் வாழாத இடங்களாக உள்ளன. ஆனால், சிலியின் கப்பற்படை உள்ளது. மேலும், 2,000-மீட்டர் (6,600 அடி) வானூர்தி நிலையமும் (Isla San Felix Airport) உள்ளது. இத்தீவுகளில் நன்னீர் இல்லை. இருப்பினும் உயரிச்சூழல் இருக்கின்றது. குறிப்பாக, கடல் பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்துகின்றன.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia