இதய துடிப்பலைஅளவி
![]() ![]() இதய மின்துடிப்புப் பதிவு எனப்படும் எலக்ட்ரோகார்டியோகிராஃபி , (ஈசிஜி அல்லது ஈகேஜி ), தோலின் மீது வைக்கப்படும் மின்முனைகள் வழியாக ஒரு குறிப்பிட்ட கால அளவில் இதயத்தின் மின்சாரச் செயல்பாட்டை வெளிப்புறமாகக் கைப்பற்றிப் பதிவு செய்யும் உள்மார்பக மேல்விளக்கமாகும்.[1] இது இதய மின் துடிப்பைப் பதிவு செய்யும் ஒரு கருவியால் ஊடுருவாத முறையில் பதிவு செய்வதாகும். இது இதயத்தின் மின்சார செயல்பாடு தொடர்பானது என்பதால் எலக்ட்ரோ என்பதிலிருந்தும், இதயம் என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லான கார்டியோ என்ற சொல்லிலிருந்தும் "எழுதுவது" எனப் பொருள்படும் கிரேக்க வேர்ச்சொல்லான கிராஃப் என்பதிலிருந்தும் இந்தச் சொல்லின் மூலம் கிடைக்கப் பெறுகிறது. இதயத்தின் மின்சாரத் துடிப்புகள் சினோட்ரியல் கணுவில் உருவாகி இதயத் தசைக்கு நெருங்கிய கடத்தி அமைப்பு வழியாகப் பயணம் செய்கின்றன. இந்தத் துடிப்புகள் மயோகார்டியல் தசை நார்களைச் சுருங்குமாறு தூண்டி அதன் மூலம் இதயச் சுருக்கம் நிகழுமாறு தூண்டுகின்றன. இந்த மின்சார அலைகளை தோலில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படும் மின்முனைகளைக் கொண்டு அளவிடலாம். இதயத்தின் பல்வேறு பக்கங்களில் பொருத்தப்படும் மின்முனைகள் இதயத் தசையின் பல்வேறு பாகங்களின் செயல்பாட்டை அளவிடுகின்றன. ஓர் ஈசிஜியானது இந்த மின்முனைகளின் ஜோடிகளுக்கு இடையில் உள்ள மின்னியக்க விசையளவை வெளிக்காட்டுகிறது. மற்றும் பல திசைகளிலிருந்து அவை அளவிடும் தசைச் செயல்பாட்டையும் நோய்க்கடத்தி உயிரிகளாகப் புரிந்து கொள்ளலாம். இந்த வெளிப்பாடானது இதயத் தசையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குறைபாடுகளையும், இதயத்தின் பொதுவான தாளத்தையும் சுட்டிக் காட்டுகிறது. இதயத்தின் அசாதாரணமான தாளத்தை,[2] குறிப்பாக மின்சார சமிக்ஞைகளைக் கொண்டு செல்லும் கடத்திச் திசுக்களின் அசாதாரண தாளத்தை அல்லது மின் பகுளிகளின் அசம நிலைகளால் உருவாகும் அசாதாரணத் தாளங்களை அளவிடுவதற்கு இது ஒரு சிறந்த வழியாக உள்ளது.[3] ஒரு மாரடைப்பு(எம்ஐ) நிகழ்வில், இதயப் பகுதி முழுவதையும் உள்ளடக்காவிடினும், இதயத் தசையானது குறிப்பிட்ட இடங்களில் பழுதடைந்துள்ளதா என்று அடையாளம் கண்டறிய ஈசிஜி உதவும்.[4] ஈசிஜியால், இதயத்தின் உந்துத் திறனை நம்பகத் தன்மை உடைய வகையில் அளவிட இயலாது. இதற்காக செவிப்புலன் கடந்த ஒலிகளின் அடிப்படையிலான மின் ஒலி இதய வரைவி அல்லது அணு மருத்துவ சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறு1872வது வருடம் அலெக்சாண்டர் மியூர்ஹெட் என்பவர் செயிண்ட் பார்ததலோமியா மருத்துவ மனையில் (மின்சாரத் துறையிலான) தனது அறிவியல் பட்ட மேற்படிப்புக்காக, காய்ச்சல் கொண்டிருந்த ஒரு நோயாளியின் மணிக்கட்டில் மின்சாரக் கம்பிகளைச் சுற்றி அவரது இதயத் துடிப்பு விகிதத்தை அளவிட முயன்றதாகக் கூறப்படுகிறது.[5] பிரித்தானிய உடற்கூறு இயலாளர் ஜான் பர்டன் சாண்டர்சன் லிப்மேன் தந்துகி மின்மானியைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை நேரடியாகப் பதிவு செய்து கண்டறிந்தார்.[6] மின்சாரக் கண்ணோட்டத்திலிருந்து இதயத்தை முறைப்படி முதலில் அணுகியவர் லண்டன் நகரில் பெட்டிங்க்டன் செயிண்ட் மேரி'ஸ் மருத்துவ மனையில் பணி புரிந்து வந்த அகஸ்டஸ் வாலர் என்பவர் ஆவார்.[7] அவர் வடிவமைத்த இதய மின் துடிப்புப் பதிவி, காட்சித்திரை கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு லிப்மேன் தந்துகி மின்மானியைக் கொண்டிருந்தது. இதயத்திலிருந்து வெளிவரும் தடயங்கள் ஒரு புகைப்படத் தகட்டின் மீது விழுமாறு அமைக்கப்பட்டது; இந்தத் தகடானது ஒரு பொம்மை ரயில் வண்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதனால், இதயத் துடிப்பு அதன் உண்மையான கால அளவில் பதிவு செய்யப்படுவது சாத்தியமானது. 1911வது வருடம், தன்னுடைய இந்தப் பணிக்கான மருந்தகப் பயன்பாடு அநேகமாக ஒன்றுமேயில்லை என்பதாகத்தான் அவர் கண்டார். நெதர்லாந்து நாட்டின் லெயிடன் நகரில் பணியாற்றி வந்த வில்லெம் ஐந்தோவன் 1903வது வருடம் கண்டு பிடித்த கம்பி மின்னோட்டமானியின் பயன்பாடுதான் இதில் முதல் பிரதான நிகழ்வாக அமைந்தது.[8] இது வாலர் பயன்படுத்திய தந்துகி மின்மானி மற்றும் 1987வது வருடம் கிளெமெண்ட் ஆடர் என்னும் ஃபிரெஞ்சு பொறியாளர் தனியாகக் கண்டு பிடித்த வேறொரு கம்பி மின்னோட்ட மானியை விடவும் அதிக மிகு உணர்வைப் பெற்றிருந்தது.[9] ஐந்தோவன் பல்வேறு விலக்கங்களுக்கும் பி, க்யூ, ஆர், எஸ் மற்றும் டி என்ற எழுத்துக்களை ஒதுக்கினார். இதன் மூலம் இதயக் குழலிக் கோளாறுகள் பலவற்றின் இதய மின் துடிப்பு அம்சங்களை அவர் விளக்கினார். 1924வது வருடம் அவருடைய கண்டு பிடிப்பிற்காக அவருக்கு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[10] அந்தக் காலத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்றளவும் புழக்கத்தில் இருந்து வருவதாயினும், இதய மின் துடிப்பு இயலில் காலவெள்ளத்தில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்து விட்டன. உதாரணமாகக் கருவிச் செயலாற்றல் என்பதானது மிகவும் சிக்கலான ஆய்வுக்கூடக் கருவிகளிலிருந்து உருவாகித் தற்போது, இதய மின்துடிப்பிற்குக் கணினியின் மூலமாக மேல் விளக்கம் அளிக்கும் கையடக்கமான மின்னணு அமைப்புகள் உள்ளிட்ட பல நவீனக் கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது.[11] ஈசிஜி வரைபடக் காகிதம்![]() ஈசிஜியின் சரியான நேர மேல்விளக்கம் என்பதானது ஒரு காலத்தில் எழுது கருவி மற்றும் காகிதத்தின் வேகம் ஆகியவற்றைச் சார்ந்திருந்தது. எண்வழி பகுப்பாய்வு தற்போது இதய விகித வேறுபாடுகளில் கணிசமான அளவு ஆய்வை அனுமதிக்கிறது. ஓர் உதாரண இதய மின் துடிப்புப் பதிவானது விநாடிக்கு 25 மிமி வேகம் கொண்டு ஓடும் ஒரு காகிதத்தில் பதிவாகிறது; சில நேரங்களில் இதை விட அதிகமான காகித வேகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஈசிஜி காகிதத்தின் ஒவ்வொரு சிறிய பகுதியும் 1 மிமி 2. ஒரு விநாடிக்கு 25 மிமி காகித வேகத்தில், ஈசிஜி காகிதத்தின் ஒரு சிறிய பகுதி 40 எம்எஸ் அளவாகும். இவ்வாறான ஐந்து சிறு பகுதிகள் ஒரு பெரிய பகுதியை அமைக்கின்றன; அது 200 எம்எஸ் அளவாகும். ஆகவே, ஒரு வினாடியில் ஐந்து பெரும் பகுதிகள் உள்ளன. 12 மின் திறத்தட ஈசிஜியின் ஒரு நோய் கண்டறியும் திறனானது 10 எம்/வி என்னும் அளவில் கணக்கிடப்படுகிறது; அதனால் 1 மிமி என்பது 0.1 எம்வியாகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒரு வரையறை சமிக்ஞை உள்ளிடப்பட வேண்டும். 1 எம்வியை உள்ளடக்கிய ஒரு பொதுத் தரநிலைப்படுத்தப்பட்ட சமிக்ஞை எழுது கருவியை 1 செமி நேர்கோடாக, அதாவது ஈசிஜி காகிதத்தின் இரண்டு பெரும் சதுரங்களின் மீதாக, நகர்த்த வேண்டும். வடிகட்டியைத் தேர்ந்தெடுத்தல்நவீன ஈசிஜி கண்காணிப்பு இயந்திரங்கள் சமிக்ஞை செயற்பாட்டிற்கான பலவகை வடிகட்டிகளை வழங்குகின்றன. இதில் மிகவும் பொதுவான அமைப்பு முறைகள் கண்காணிப்பு முறை மற்றும் நோய் கண்டறியும் முறை ஆகியவையாகும். கண்காணிப்பு முறைமையில், குறைந்த விசையெண் வடிகட்டி (இது நிச்சயிக்கப்பட்டதை விட அதிக விசையெண் கொண்ட சமிக்ஞைகளையும் கடத்தும் என்பதால் அதிகக் கடத்தி வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது) 0.5 ஹெர்ட்ஸ் அல்லது 1 ஹெர்ட்ஸ் என்னும் அளவில் வைக்கப்படுகிறது மற்றும் அதிக விசையெண் கடத்தி (இது நிச்சயிக்கப்பட்டதை விட குறைந்த விசையெண் கொண்ட சமிக்ஞைகளையும் கடத்தும் என்பதால் குறை-கடத்தி வடிகட்டி என்றும் அழைக்கப்படுகிறது) 40 ஹெர்ட்ஸ் அளவிற்கு அமைக்கப்படுகிறது. இதனால் இதயத் தாளத்திற்கான வழக்கமான கண்காணிப்பு பருப்பொருள் கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகக்-கடத்தி வடிகட்டியானது, அலையும் அடிக்கோட்டைக் குறைக்க உதவுகிறது மற்றும் குறை-கடத்தி வடிகட்டி 50 அல்லது 60 ஹெர்ட்ஸ் அளவுக்கு சக்திக் கோட்டு ஒலியைக் குறைக்க உதவுகிறது; (பல நாடுகளிலும் சக்திக் கோட்டு வலைப்பின்னல் விசையெண் 50 முதல் 60 ஹெர்ட்ஸ் வரை வேறுபடுகிறது). நோய் கண்டறியும் முறைமையில், அதிகக்-கடத்தி வடிகட்டி 0.05 ஹெர்ட்ஸ் அளவில் அமைக்கப்படுகிறது; இது எஸ்டி பகுதிகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட உதவுகிறது. குறை-கடத்தி வடிகட்டி 40,100 அல்லது 150 ஹெர்ட்ஸ் விசையெண்ணுக்கு அமைக்கப்படுகிறது. இதன் விளைவாக, நோய் கண்டறியும் முறைமையைவிடக் கண்காணிப்பு முறைமையில் ஈசிஜியின் வெளிப்பாட்டுத் திரை மேலும் வடிகட்டுதலுக்கு உள்ளாகிறது; இதன் செல்லும் அலைவரிசை குறுகலாக உள்ளதுதான் காரணம்.[12] மின் திறத் தடங்கள்![]() இதய மின் துடிப்பு இயலில், லீட் (மின் திறத் தடம்) என்னும் வார்த்தையானது நோயாளியுடன் இணைக்கப்படும் மின்முனைகள், அல்லது சரியாகச் சொல்வதென்றால், (lid என்று உச்சரிக்கப்படும்) இரண்டு மின் முனைகளுக்கு இடையிலான மின் வலியளவைக் குறிப்பதாகும். மின் முனைகள் பொதுவாகப் பசையுடன் கூடிய வட்டமான ஒட்டுவான்-போன்ற ஒரு பொருளால் நோயாளியின் உடலுடன் பொருத்தப்படுகின்றன (மின் முனையானது இந்த வட்டத்தின் நடுவில் புதைக்கப்பட்டிருக்கும்). இது கம்பிகளின் பிடிக் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.[13] இதயத்திலிருந்து பல வகையான சமிக்ஞைகளை உருவாக்க ஈசிஜி மின் திறத் தடங்கள் மின் முனைகளைப் பல்வேறு சேர்மானங்களில் பயன்படுத்துகின்றன. மின்முனைகளை வைத்தல்12 மின்திற தட ஈசிஜியில் பத்து மின் முனைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பின் வருமாறு பெயரிடப்பட்டு நோயாளியின் உடல் மீது பொருத்தப்படுகின்றன:[14][15] ![]() ![]()
அவயவ மின் திறத் தடங்கள்5 மற்றும் 12 மின் திறத்தடங்கள் இரண்டின் வடிவாக்கத்திலும், மின் திறத் தடங்கள் I, II, III ஆகியவை அவயவ மின் திறத் தடங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த சமிக்ஞைகளை அனுப்பும் மின் திறத் தடங்கள் அவயவங்களில்-ஒவ்வொரு கையிலும் ஒன்றும் இடது காலில் ஒன்றுமாகப் பொருத்தப்படுகின்றன.[17][18][19] இந்த மின் திறத் தடங்கள் ஐந்தோவென் முக்கோணம் எனப்படும் மும்முனைகளை உருவாக்குகின்றன.[20]
ஒருமுனை காந்த மற்றும் அதற்கெதிரான இருமுனை காந்த மின் திறத்தடங்கள்இரண்டு வகையான மின்திறத் தடங்கள் உள்ளன: ஒரு முனை காந்தம் மற்றும் இரு முனை காந்தம் . இரு முனை காந்த மின்திறத் தடங்களில் ஒன்று நேர்மறையாகவும் மற்றொன்று எதிர்மறையாகவும் இருக்கின்றன.[21] 12-மின்திற தட ஈசிஜியில், அவயவ மின் திறத் தடங்கள் (I, II மற்றும் III) இருமுனை காந்த மின்திறத் தடங்களாக உள்ளன. மின் வலியளவு அளக்கப்படுவதால், ஒருமுனை காந்தத்திலும் இரு துருவங்கள் உண்டு; எனினும் எதிர்மறை முனை என்பது பல்வேறு மின்முனைகளிலிருந்து வரும் சமிக்ஞைகள் சேர்ந்த ஒரு துருவமாகும் (வில்சனின் சென்ட்ரல் டெர்மினல்).[22] 12-மின் திறத் தட ஈசிஜியில் அவயவ மின்திறத் தடங்களை மட்டும் அல்லாமல் அனைத்து மின்திறத் தடங்களும் (ஏவிஆர், ஏவிஆல், ஏவிஎஃப், வி1, வி2, வி3, வி4, வி5 மற்றும் வி6) ஒரு முனை காந்தமுடையவையே. மின்முனைகள், ஆர்ஏ, எல்ஏ மற்றும் எல்எல் ஆகியவை ஓர் எளிய எதிர்ப்பண்பு வலைப்பின்னல் வழியாக இணைக்கப்பட்டு வில்சனின் சென்ட்ரல் டெர்மினல் உருவாக்கப்படுகிறது. இதனால், உடலில் சரிநேராக அளிக்கப்படும் சராசரியான ஆற்றலின் சாத்தியத்தை முடிவிலி (அதாவது பூஜ்யம் என்பதான) நிலைக்குத் தோராயமாக்குகிறது. அதிகரித்த ஆற்றல் உள்ள அவயவ மின் திறத்தடங்கள்மின் திறத் தடங்கள் ஏவிஆர், ஏவிஎல் மற்றும் ஏவிஎஃப் ஆகியவை அதிகரித்த ஆற்றல் உள்ள அவயவ மின் திறத் தடங்கள் அவயவ மின் திறத்தடங்கள் I, II மற்றும் III ஆகியவை ஒரே மூன்று மின்முனைகளிலிருந்து பெறப்படுகின்றன. எனினும், அவை வெவ்வேறு கோணங்களிலிருந்து (அல்லது நோய் கடத்தி உயிரிகளுக்காக) இதயத்தை நோக்குகின்றன; ஏனெனில் இந்த மின் திறத் தடங்களுக்கான எதிர்மறை மின்முனை என்பது வில்சன் சென்ட்ரல் டெர்மினலின் மாற்றப்பட்ட வடிவமே ஆகும். இது எதிர்மறை மின்முனையைப் பூஜ்யமாக்கி நேர்மறை மின்முனையை "புத்தாய்வு செய்யும் மின்முனை" அல்லது ஒருமுனை காந்த மின் திறத் தடம் ஆவதற்கு அனுமதிக்கிறது. ஐந்தோவேனின் விதி யின் கூற்றான I + (-II) + III = 0 என்பதால் இது சாத்தியமாகிறது. இந்த சரியீட்டை I + III = II என்றும் எழுதலாம். இது இந்த முறையில்(I - II + III =0 என்பதற்குப் பதிலாக) எழுதப்பட்டதற்குக் காரணம் ஐந்தொவேன், மின் திறத் தடம் IIன் காந்த சக்தியை ஐந்தொவேன் முக்கோணத்தில் மாற்றியமைத்தார், இது அவர் க்யூஆர்எஸ் பல்கூட்டுத்தொகுதியை செங்குத்தாகக் காண விழைந்ததன் காரணமாய் இருக்கலாம். அதிகரித்த ஆற்றல் உள்ள அவயவ மின் திறத்தடங்கள் ஏவிஆர், ஏவிஎல், ஏவிஎஃப் மற்றும் முன்மார்பகத்தில் பொருத்தப்படும் மின் திறத் தடங்கள் வி1, வி2, வி3, வி4, வி5 மற்றும் வி6 ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வில்சன் சென்ட்ரல் டெர்மினல் வழி வகுத்தது.
அதிகரித்த ஆற்றல் உள்ள அவயவ மின்திறத் தடங்களான ஏவிஆர், ஏவிஎல் மற்றும் ஏவிஎஃப் ஆகியவை இந்த முறையில் பெருக்கப்படுகின்றன; ஏனெனில் வில்சன் சென்ட்ரல் டெர்மினல் எதிர்மறை மின்முனையாக இருக்கும் பொழுது இந்த சமிக்ஞைகள் பயன்பட முடியாத அளவிற்கு மிகவும் சிறியதாக உள்ளன. மின்திறத் தடங்கள் I, II மற்றும் III ஆகியவற்றுடன் சேர்ந்து, அதிகரித்த ஆற்றல் உள்ள அவயவ மின் திறத்தடங்கள் ஏவிஆர், ஏவிஎல் மற்றும் ஏவிஎஃப் ஆகியவை அறுகோண அச்சின் குறிப்பீட்டுப் பட்டியல் என்பதன் அடித்தளமாக அமைகின்றன; இது இதயத்தின் முன்பக்க தள மின்சார அச்சைக் கணக்கிடப் பயன்படுகிறது. முன்மார்பு மின்திறத் தடங்கள்முன்மார்பு மின்திறத் தடங்களுக்கான (வி1, வி2, வி3, வி4, வி5, மற்றும் வி6) ஆகிய மின்முனைகள் இதயத்தில் நேரடியாக வைக்கப்படுகின்றன. அவை இதயத்திற்கு மிக அருகிலேயே இருப்பதால் அவற்றை அதிகரிக்கத் தேவையில்லை. வில்சனின் சென்ட்ரல் டெர்மினல் எதிர்மறை மின்முனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது; மற்றும் இந்த மின் திறத் தடங்கள் ஒரு முனை காந்த சக்தி உடையவையாகக் கருதப்படுகின்றன.(வில்சன் சென்ட்ரல் டெர்மினல் என்பது மூன்று அவயவ லீடுகளின் சராசரியே என்பதை நினைவில் கொள்க. இது உடலின் பொதுவான அல்லது சராசரியான ஆற்றலைத் தோராயமாக்குகிறது). முன்மார்பு மின்திறத் தடங்கள், கிடைநிலைத் தளம் எனப்படும் இதயத்தின் மின் இயக்கத்தை நோக்குகின்றன. கிடைநிலைத் தளத்தில் இதயத்தின் மின் அச்சு என்பதானது இஜட் அச்சு எனக் குறிப்பிடப்படுகிறது. அலைகளும் இடைவெளிகளும்![]() ![]() இதய சுழற்சியின் (இதயத்துடிப்பு) ஓர் உதாரண ஈசிஜி தடயமறிதல் என்பது ஒரு பி அலை, ஒரு க்யூஆர்எஸ் பல்கூட்டுத்தொகுதி, ஒரு டி அலை, மற்றும் ஒரு யு அலை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்; சாதாரணமாக, இது 50லிருந்து 75 சதவிகிதம் ஈசிஜிக்களில் தென்படும்.[23] இதய மின்துடிப்புப் பதிவியின் அடிப்படையான மின்னியக்க விசையளவு ஐஸோஎலெக்ட்ரிக் லைன் என்று குறிப்பிடப்படுகிறது. ஓர் உதாரண ஐஸோஎலெக்ட்ரிக் லைன் என்பது டி அலைக்குப் பின்னரும் அடுத்த பி அலைக்கு முன்னரும் உள்ள தடமறியும் பகுதியாக அளவிடப்படுகிறது.
தொடக்கத்தில் நான்கு வளை நிலைகள் இருந்தன; ஆனால் ஆரம்ப காலப் பெருக்குவான்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கைப் பொருட்களைக் கணித முறைமை செய்த பிறகு, ஐந்து வளை நிலைகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தடயமறிதலைக் கண்டறிய ஐந்தொவென், பி, க்யூ, ஆர், எஸ் மற்றும் டி என்னும் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தார்; இவை திருத்தப்படாத பதிவுகளான ஏ, பி, சி மற்றும் டியின் மீதாக எழுதப்பட்டன.[24] ஈகேஜியின் உடற்கூறு நோயியல் அறிகுறிகள்
மருந்தக மின் திறத் தடக் குழுக்கள்மொத்தமாக 12 மின் திறத் தடங்கள் உள்ளன; இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கில் இதயத்தின் மின் இயக்கத்தைப் பதிவு செய்கின்றன; இவை தீவிர மகுட உரு தமனியின் குருதி ஊட்டக்குறைவு அல்லது காயத்தைக் கண்டறிவதற்காக இதயத்தின் வெவ்வேறு அமைப்பியலோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. இதயத்தின் ஒரே கூற்றை கண்காணிக்கும் இரண்டு மின் திறத் தடங்கள் ஒட்டியுள்ளவை என்று கூறப்படுகின்றன. (பார்க்க:நிறக் குறியீட்டுள்ள அட்டை). ![]()
இவற்றைத் தவிர, ஒன்றுக்கொன்று அருகில் உள்ள முன் மார்பக மின்திறத் தடங்களும் ஒட்டியுள்ளவை என்று கருதப்படுகின்றன. உதாரணமாக, வி4 முன்புற மின்திறத் தடமாகவும் வி5 பக்கவாட்டு மின்திறத் தடமாகவும் இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதால் அவை ஒட்டியுள்ளவையாகின்றன. ஏவிஆர் மின்திறத் தடம் இதயத்தின் இடது மேலறையின் குறிப்பிட்ட கோணம் எதையும் காட்டுவதில்லை. சொல்லப் போனால், அது வலது தோளிலிருந்து அதன் கோணத்தில் அது இதய மேலறையின் வலது அறையின் இதய உள்ளுறைச் சுவரின் உட்பக்கத்தை நோக்குகிறது. அச்சு![]() இதயத்தின் மின்சார அச்சு என்பது அதன் முன் பகுதியிலான இதயத்தின் காந்தமகற்றலின் முன்னலையின் பொதுவான திசை (அல்லது சராசரி மின் நோய் கடத்தி உயிரிகள்) என்பவற்றைக் குறிப்பிடும். பொதுவாக இது வலது தோளிலிருந்து இடது கால் வழித் திசையில் செல்வதாக அமைந்திருக்கும்; -30°லிருந்து +90° வரையிலும் சாதாரண நிலையாகக் கருதப்பட்டாலும், அது பன்னிரண்டு அச்சுக் குறிப்பீட்டு முறைமையைக் கொண்டு இடது கீழ்க் கால்வட்டத்திற்கு ஒத்திருப்பதாக இருக்கும்;
வலது கட்டுக் கிளை அடைப்பு அமைப்பில், வலது அல்லது இடது அச்சு விலக்கம் மின் துடிப்புகளின் பகுதி அடைப்பு என்பதைக் குறிக்கும். இதய மின்துடிப்புப் பதிவியின் வேறுபாடு பண்புஇதய மின்துடிப்புப் பதிவியின் வேறுபாடு என்பது ஓர் ஈசிஜி அலைமுறைக்கும் அதற்கு அடுத்ததற்கும் உள்ள மாறுபாடு அளவீடாகும். பல ஈசிஜி மின்முனைகளை இதயத்தில் பொருத்திப் பின்னர் அந்த மின்முனைகளைலிருந்து வரும் சமிக்ஞைகளின் அலைமுறை வடிவியல் அளவைக் கணக்கிட்டு இந்த வேறுபாடு கண்டறியப்படலாம். இத்தகைய ஈசிஜி வேறுபாடுகள், பெரும்பாலும், ஆபத்தான இதய லயக் கேடு விளைவதற்கு முற்பட்டுத் தோன்றும் என அண்மைக் கால ஆராய்ச்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. பின்புலம்ஒவ்வொரு வருடமும் யுனைடட் ஸ்டேட்ஸ் நாட்டில் திடீர் இதயஸ்தம்ப மரணம் (எஸ்சிடி) அடைபவர்கள் 350,000 பேர்; இவர்களில் இருபது சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் தீவிர இதய நோய்க்கான எந்தவிதமான அறிகுறிகளும் வெளிப்படையாக இல்லாதவர்கள். பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் இதய லயக் கேடு எனப்படும் ஆபத்தான இதய நோயை முன்னறிவிக்கக் கூடிய ஈசிஜி வடிவங்களை நம்பகத்தன்மை கொண்ட முறையில் அடையாளம் காணும் வழிமுறைகளை முயற்சித்து வருகின்றனர். இந்த முறைமைகள் கண்டு பிடிக்கப்படுகையில், ஆபத்தான இதயத் தாளங்களை முன்கூட்டியே அறிந்து அவை மரணத்தில் விளைவதற்கு முன்பாகவே அவற்றைச் சரி செய்வதற்காக, இதற்கான கருவிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிதற்போது மேற்கொள்ளப்பட்டு[25] வரும் ஆராய்ச்சிகள், ஆர்-அலை மற்றும் டி-அலை ஆகிய இரண்டிலுமான ஈசிஜியின் வேறுபாட்டில் உள்ள ஒரு படிப்படியான பெருக்கம், இதயக் கீழறை குறு நடுக்கம் என்னும் நிலையை முன்னறிவிப்பதாகக் கூறுகின்றன. மகுட உருதமனி நோய் கொண்டுள்ளவர்களில் உடற்பயிற்சியின் காரணமாக, டி-அலை வேறுபாடு அதிகரிக்கிறது; ஆனால், சாதாரண நோயாளிகளில் இதன் தாக்கம் காணப்படுவதில்லை. மற்ற சோதனை முடிவுகள், தற்போது கிடைக்கப் பெறும் பிற ஆதாரங்களுடன் அவற்றை இணைத்துக் காண்கையில், ஆர்-அலை மற்றும் டி-அலை வேறுபாடு இரண்டிற்கும் நோய் வருவதை உரைக்கும் தன்மை உள்ளதாகத் தெரிவிக்கின்றன. எதிர்காலப் பயன்பாடுகள்எதிர்காலத்தில், வருங்காலத்தில் பல தரப்பு மக்களும் பயனுறும் வகையில் ஈசிஜியை மேலும் எளிதாக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்போதைய தொழில் நுட்பம், தாற்காலிகமான மற்றும் நிரந்தரமான இதய மின்முனைகளை பல்வேறுபட்ட உடலியற் பகுதிகளில் பன்மையாகப் பொருத்துவதற்கு இடமளிக்கிறது; இதனால், இவை தோல் அல்லது இதயக் கூண்டு ஆகியவற்றின் இடையூறின்றிச் செயல்படும் திறன் கொண்டுள்ளன. ஒரு தேர்ந்த பார்வையாளருக்கு விரல் ரேகைப்பதிவுகளைப் போலவே, ஈசிஜிக்களும் வேறுபட்டுத் தெரியும். இதய லயக் கேடு நோய்க்கு முன்னறிவிப்பு செய்யும் விதமாக ஈசிஜியின் வேறுபாடுகளை மருந்தக ஆதாரத்திற்கு கூடுதல் சான்றாகக் கொள்வதற்கும், ஈசிஜியின் வேறுபாடுகளைக் கண்டறியும் செயற்பாட்டை விளக்குவதற்காகவும் இத்தகைய வடிவமைப்புகள் மற்றும் எண் பகுப்பாய்வுகளைச் செயற்படுத்துதல் உதவும். இதய மின் துடிப்புப் பதிவி என்பது அடிப்படையாக மேல் விளக்கம் அளிக்கும் ஒரு கருவிதான்; ஆனால், இது இடையூடுகளையும் அனுமதிக்கின்றது (பார்க்க இடையூடும் இதயவியல்). விரைவில் ஒரு நாள், இதன் வேறுபாடுகளைக் கண்டறியவும், அவற்றை அளவிடவும் உள்வைப்புக் கருவிகள் நிரலாக்கப்படலாம். இத்தகைய கருவிகள், பீடா-அடைப்பிகள் எனப்படும் மருந்துகள் வழி வேகஸ் நரம்பைத் தூண்டி விடுவதன் மூலமோ, அவசியமானால் இதயக் குறு நடுக்க நீக்கம் செய்வதன் மூலமோ, இதய லயக் கேடு நோயை அழிக்கத்தக்க ஆற்றல் கொண்டிருக்கலாம்.[26] மேலும் பார்க்கமேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia