இதயத்தை திருடாதே என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 14 பிப்ரவரி 2020 முதல் 3 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பிந்து நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் குமார் நடிக்கின்றார். இந்த தொடரின் முதல் பருவத்தின் கதை கரு கலர்ஸ் மராத்தி தொடரான 'ஜிவ் ஜலா ஏடே பிசா' என்ற தொடரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[2] இத்தொடர் 3 சூலை 2022 அன்று 1097 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
இந்த தொடர் கும்பகோணத்தில் அரசியல் ரீதியாக போட்டிபோடும் இரு அரசியல்வாதிகளான வானவராயன் மற்றும் தாட்சாயிணி. பதவிவெறி ஆட்டத்திற்கு இடையில் மாட்டிக்கொண்ட சிவா மற்றும் சஹானா ஆகிய இருவரின் காதல் கதையை விபரிக்கின்றது.
எம்.எல்.ஏ-வான தாட்சாயிணி யின் அடியாள். படிக்காத முரடன். ஆனாலும் நல்லவன். சஹானாவின் கணவன். (பருவம் 1)
சஹானாவின் முன்னாள் கணவன், ஐஸ்வர்யா ஜூனியரின் தந்தை மற்றும் அரசியல்வாதி. (பருவம் 2)
பிந்து - சஹானா
நன்கு படித்தவள் கலைகள் பல அறிந்தவள், புத்திசாலி, அழகானவள் மற்றும் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரின் மகள். வாழ்க்கையில் பெரும் லட்சியங்களோடு பயணித்துவருகின்றாள். சிவாவின் மனைவி. (பருவம் 1)
சிவாவின் முன்னாள் மனைவி, ஐஸ்வர்யா ஜூனியரின் தாய் மற்றும் தொழில் அதிபர் . (பருவம் 2)
ஆலியா - ஐஸ்வர்யா ஜூனியர் (பருவம் 2)
சஹானா மற்றும் சிவாவின் மகள்
மௌனிகா தேவி - மித்ரா (பருவம் 2)
பருவம் 1
தாட்சாயினி குடும்பத்தினர்
நிலானி - தாட்சாயிணி (தொடரில் இறந்துவிட்டார்)
சிவாவைத் தன் சுயலாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் அரசியல்வாதி. சிவாவால் கொல்லப்பட்டார்.
சாம் - சேதுபதி (தொடரில் இறந்துவிட்டார்)
தாட்சாயினியின் மகன், ஐஸ்வர்யாவின் கணவர். சிவாவால் கொல்லப்பட்டார்.
இந்த தொடர் பிப்ரவரி 14, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.