இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம், (Security Printing and Minting Corporation of India Limited) (SPMCIL) என்பது இந்திய அரசின் நிறுவனமாகும். மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் செயல்படும் இந்நிறுவனம் பணத் தாள்கள், வங்கி பண முறி தாள்கள் (bank notes), நாணயங்கள், நீதிமன்ற சார்பற்ற வில்லை, அஞ்சல் வில்லைகள் மற்றும் அரசு சார்பான ஆவணத் தாள்களை அச்சிடுகிறது.[1]இந்திய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. நான்கு காகித அச்சகங்களும், நான்கு நாணயச்சாலைகளும், ஒரு காகித ஆலைகளும் கூடிய ஒன்பது அலகுகளை இக்கழகம் கொண்டுள்ளது. [2] அலகுகள்அச்சகங்கள்இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் நான்கு அச்சகங்களை கொண்டுள்ளது. பணத் தாள்கள், (Currency Note Press) (CNP), வங்கி முறி தாள்கள் (Bank Note Press) (BNP), அரசு ஆவணங்கள் மற்றும் முத்திரை தாள்கள் அச்சிடும் அச்சகங்கள் கொண்டுள்ளது[3] பணத்தாள் அச்சிடும் அச்சக ஆலை 1928 ஆம் ஆண்டில் நாசிக்கில் நிறுவப்பட்டது.[4] பணத்தாள் அச்சிடும் அச்சகம், மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாசிக்கிலும், வங்கி பண முறி தாள்கள் மைசூர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தேவாஸ் நகரத்தில் உள்ளது. இவ்வலகுகள் இந்திய பணத் தாள்களை அச்சிடுகிறது. [5] மேலும் அச்சகத்திற்கு தேவையான மை (ink உற்பத்தி செய்கிறது. [6] மேலும் பயண ஆவணங்கள் (travel documents) அஞ்சல் வில்லைகள் மற்றும் இந்திய அரசுக்கு தேவையான மற்ற ஆவணங்களை உற்பத்தி செய்கிறது. [3][7] நாணயச்சாலைகள்இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் , மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மற்றும் நொய்டாவில் இந்திய நாணயங்களை அச்சிடும் ஆலைகளைக் கொண்டுள்ளது.[3] இவ்வலகுகள் நாணயங்களை வெளியிடுவதுடன், இந்திய அரசு வழங்கும் உலோக விருதுகள் மற்றும் பட்டயங்களையும் உருவாக்கிறது.[8] காகித ஆலைகள்இந்திய அரசின் பாதுகாப்பு தாள்கள் உற்பத்தி செய்யும் காகித ஆலை, மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோசங்கபாத் நகரத்தில் 1968 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த அச்சகம் பணத் தாள்கள், வங்கி பண முறி தாள்கள் மற்றும் நீதிமன்றம் சார்பற்ற முத்திரை வில்லைகள் தயாரிக்க பயன்படும் காகிதங்கள் உற்பத்தி செய்கிறது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia