இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம்இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Agricultural Statistics Research Institute) என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்) கீழ் உள்ள ஆய்வு நிறுவனமாகும். இது விவசாய சோதனைகளை வடிவமைப்பதற்கும் விவசாயத்தில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் புதிய நுட்பங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ளஇந்திய வேளாண் வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் விலங்கு மற்றும் தாவர இனப்பெருக்கத்திற்கான புள்ளிவிவர நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றது. தோற்றம் மற்றும் வரலாறு1930ஆம் ஆண்டில், வேளாண் ஆராய்ச்சி குழு, மாநில வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் சோதனைகளைத் திட்டமிடுவதற்கும், சோதனை தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், முடிவுகளின் விளக்கம் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை உருவாக்குவது குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஒரு புள்ளிவிவர அலகு ஒன்றைத் தொடங்கியது. இலெசுலி கோல்மனின் பரிந்துரையின் பேரில் இந்த பிரிவு நிறுவப்பட்டது. [1] ![]() இந்த அலகு 1940 முதல், இலண்டன் ஜெர்சி நெய்மனிடம் புள்ளிவிவர கல்வி கற்ற நிபுணர் முனைவர் பி.வி.சுகாத்மே தலைமையில் செயல்பட்டது. ஆரம்பக்காலத்தில் முதன்மை உணவுப் பயிர்களின் விளைச்சல் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கான நம்பகமான முறைகள் குறித்துச் செயல்பட்டது. மாதிரி மற்றும் புள்ளிவிவரங்களில் மேலும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இது 1945இல் ஒரு புள்ளிவிவரக் கிளை நிறுவனமாக மாறியது. வேளாண் புள்ளிவிவரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மையமாக இந்த கிளை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. 1949ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ஐசிஏஆர்) புள்ளிவிவர பிரிவு என்று பெயரிடப்பட்டது. 1952ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) நிபுணர்களான முனைவர் பிராங்க் யேட்ஸ் மற்றும் முனைவர் டி.ஜே.பின்னி ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் விரிவாக்கப்பட்டு, 1955இல் பூசா வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 2 ஜூலை 1959 அன்று இது வேளாண் ஆராய்ச்சி புள்ளிவிவர நிறுவனம் (IARS) என மறுபெயரிடப்பட்டது. 1964ஆம் ஆண்டில், புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ஐஏஆர்ஐ) முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 1964ஆம் ஆண்டில், ஐபிஎம் 1620 மாடல்- II மின்னணுக் கணினி கொண்ட ஒரு சில நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. 1970ஆம் ஆண்டில், இது ஐ.சி.ஏ.ஆரின் கீழ் ஒரு முழு நிறுவனமாக மாறியது மற்றும் 1 ஜனவரி 1978இல் இந்திய வேளாண் புள்ளிவிவர ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஏ.எஸ்.ஆர்.ஐ) எனப் பெயர் மாற்றப்பட்டது. 1977ஆம் ஆண்டில், ஒரு புதிய கட்டிடத்தில் மூன்றாம் தலைமுறை கணினி பரோஸ் பி -4700 அமைப்பு நிறுவப்பட்டது. 1991-95 ஆம் ஆண்டில், பழைய கணினிகள் புதிய பிணைய கணினி அமைப்புகளால் மாற்றப்பட்டன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia