இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை
இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ) (Insurance Regulatory and Development Authority of India (IRDA), சட்டபூர்வமான தலைமை அமைப்பாகும். இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் முக்கிய பணியாகும். இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்படுத்தும் சட்டம், 1999இன் படி இவ்வமைப்பு செயல்படுகிறது. [2][3][4] ஐஏர்டிஏ அமைப்பின் தலைமயகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.[5] காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26விழுக்காட்டிலிருந்து 49விழுக்காடாக உயர்த்த ஐஆர்டிஏ பாடுபடுகிறது.[6][7].[8] நோக்கம்காப்பீட்டு நிறுவனங்களில் காப்புறுதி கட்டணம் செலுத்திய பாலிசிதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்கும் உரிமைகள் வழங்கவும், கண்காணிக்கவும் ஐஆர்டிஏ செயல்படுகிறது. அமைப்புகாப்பீடு மேம்பாட்டு மற்றும் வளர்ச்சி முகமை, பத்து உறுப்பினர்கள் கொண்ட தலைமை அமைப்பாகும்.[9]
அனைத்து உறுப்பினர்களும் இந்திய நடுவண் அரசால் நியமிக்கப்படுகின்றனர்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia