இந்தியப் பஞ்சாபில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் சந்தைவிழாக்களும்![]() ![]() பஞ்சாபில் ஆண்டு முழுமைக்கும் பல சந்தை விழாக்களும் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன: [1] சந்தைவிழாக்கள்ரவுசா சரீஃப் உர்சுரவுசா சரீஃப் உர்சு[1] சூபி துறவி சேக் அகமது பரூக்கி சிரின்டி நினைவாகக் கொண்டாடப்படுகின்றது. இவர் கவாஜா பாகி பில்லாவின் சீடர். இந்த சந்தைவிழா பதேகர் சாகிபில் பதேகர் சாகிபு- பாசி நெடுஞ்சாலையில் கூடுகின்றது.[2] ஜோர் மேளா![]() ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாள் சகீதி ஜோர் மேளா பதேகர் சாகிபு குருத்துவாராவில் நடைபெறுகின்றது. இது பதேசிங் மற்றும் சாகிப்சாதா சோர்வார் சிங் நினைவாகக் கொண்டாடப்படுகின்றது. பேரணிகள் நடத்தப்பட்டும் சீக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும் கொண்டாடப்படுகின்றது.[1][3] பட்டிண்டா விரசத் மேளாபட்டிண்டா விளையாட்டரங்கில் அமைக்கப்படும் செயப்பால் கருவுரு சிற்றூரில் மரபார்ந்த பஞ்சாபி பண்பாடு காட்சிப்படுத்தப்படுகின்றது.[1] இந்த சந்தையின்போது குருத்துவாரா ஆஜி ரத்தனிலிருந்து செய்பால்நகர் கருவுரு சிற்றூர் வரை பாரம்பரிய நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.[4] வைசாக்கிவைசாக்கியின்போது பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளூர் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.[1] மேளா மாகிமுக்த்சரில் மூன்று நாள் மேளா மாகி நடத்தப்படுகின்றது.[1] பாபா சேக் பரீது ஆக்மன்12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூபித் துறவி பாபா பரீது பரித்கோட்டிற்கு வருகை புரிந்துள்ளதை நினைவு கூரும் வண்ணம் இந்த சந்தை நடத்தப்படுகின்றது. தில்லா பாபா பரீது குருத்துவாராவில் நடைபெறுகின்றது. பண்பாட்டுக் கலை, விளையாட்டுநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.[1] இந்த சந்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 19இலிருந்து 23க்குள்ளான காலத்தில் நடத்தப்படுகின்றது. ஆன்மீக துவக்கதைக் கொண்டிருந்தாலும் தற்போது அனைத்து பண்பாட்டு, இலக்கிய, அறிவார்ந்த, விளையாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கி இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மெய்யான சூபி தத்துவப்படி, இந்த சந்தை மனிதநேயத்தையும் சமூக இணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் எதிரொளிக்கின்றது. [5] இளவேனில் பட்டவிழா![]() வசந்தத்தின்போது பல இடங்களில் உள்ளூர் சந்தைகள் நடத்தப்படுகின்றன. கபுர்த்தலா முன்னாள் இராச்சியத்தின் அரசர், மகாராசா சகசீத் சிங், வசந்த பஞ்சமி சந்தையைத் துவக்கினார். 1917இல் துவங்கிய இதன் 90ஆவது ஆண்டுவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது. சாலாமார் பாக்கில் நடக்கும் இந்த சந்தைக்கு மக்கள் மஞ்சள் ஆடைகளையும் தலைப்பாகைகளையும் அணிந்து வருகின்றனர்.[6] ஓசியார்பூரில், பாபா பண்டாரியின் போலியில் நடக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் சிறுவரும் கலந்து கொள்கின்றனர்; ஈகையாளர் தரம்வீர் அக்கிகத் ராய் சமாதியில் வழிபடுகின்றனர்.[6] பஞ்சாபில் வசந்தம் மக்கள் தங்களுக்கு விருப்பமான சமயத்தை பின்பற்றும் உரிமைக்காக உயிரை விட்ட அக்கிகத் ராயுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.[1] பாபா பண்டாரியின் போலியில் நடக்கும் சந்தையில் பட்டங்கள் பறக்கவிடுவதும் அதற்கானப் போட்டிகளை நடத்துவதும் வழமையாக உள்ளது. திருவிழாக்கள்கிலா ராய்ப்பூர் விளையாட்டுத் திருவிழாஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில், கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா நடைபெறுகின்றது. காளைகள், நாய்கள், ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளின ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.[1] இந்த விளையாட்டுத் திருவிழாவில் பத்து இலட்சத்திற்கும் (மில்லியன்) கூடுதலானவர்கள் கலந்து கொள்கின்றனர். இது பஞ்சாபி பண்பாட்டை இந்தியாவிற்கும் வெளியாட்டினருக்கும் காட்சிப்படுத்தும் முதன்மையான திருவிழாவாக மாறியுள்ளது. உலகெங்கிருந்தும் கிலா ராய்ப்பூர் சிற்றூருக்கு வருகை புரிகின்றனர். ஒவ்வொரு பெப்ரவரியிலும் 4000 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். டிராக்டர் போன்ற பண்ணை இயந்திரங்கள் ஒருவர் மீது ஏறுதல், காளை பூட்டிய வண்டிகளின் பந்தயம், குதிரை மீதான வித்தைகள், மற்றும் வலிமையைக் காட்டும் பல வினோத செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. [7] பாட்டியாலா பாரம்பரிய விழா2003ஆம் ஆண்டிலிருந்து பட்டியாலாவின் கிலா முபாரக் வளாகத்தில் பத்து நாட்களுக்கு இந்த விழா நடைபெறுகின்றது. கைவினைப் பொருட்களின் கண்காட்சி, இந்திய செவ்வியல் இசைக் கச்சேரிகள் ( வாய்ப்பாட்டும் இசைக்கருவிகளும்), நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.[1] கிலா முபாரக்கில் உள்ள தர்பார் கூடத்தில் சரவிளக்குகள், வரலாற்று ஆயுதங்கள், பட்டியாலா மற்றும் பிரித்தனிய அரச வம்சத்தின் அழகான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[8] சீஷ் மகால் கலை அருங்காட்சியகத்தில் பட்டியாலா, கபூர்தலா, காங்க்ரா, இராசத்தானின் பல அரிதான சிற்றுரு ஓவியங்களின் தொகுப்பு சேகரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் பஞ்சாபி நாட்டார் கலை, திபெத்திய பொருட்கள், நுண்ணிய தந்த, பச்சைக்கல் கலைப்பொருட்கள், மிக அழகான சர விளக்குகள், கண்ணாடி அறைகலன்கள், பட்டியாலா அரியணை, பொகீமியன் கண்ணாடியில் செய்த சோபாக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துக்கும் சிகரமாக மிகப்பெரிய பளிங்கிலான இரண்டடுக்கு நீரூற்று உள்ளது.[8] சீஷ் மகாலில் உள்ள பதக்கங்களின் கண்காட்சியில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பதக்கங்களும் பதவி அலங்காரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. 3200 பதக்கங்கள் கொண்ட இந்த தொகுப்பை மகாராசா பூபிந்தர் சிங் சேகரித்துள்ளார். அவரது மகன் மகாராசா யாதவிந்திர சிங் இத்தொகுப்பினை பஞ்சாபி மக்களுக்கு அர்பணித்துள்ளார். இந்த தொகுப்பில் பிரித்தானியாவின் விக்டோரியா சிலுவை, பிரான்சின் லெஜியன் டெ ஆனர், செருமனியின் இரும்புச் சிலுவை ஆகியன உள்ளன. மிகப் பழமையானது போர்த்துகலிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது; இது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வரலாற்று மற்றும் பழமையானது என்ற சிறப்புக்களை கடந்து இவற்றிலுள்ள கற்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பும் அளவிடற்கரியது.[8] சீஷ் மகாலில் உள்ள இயற்கை வரலாற்று காட்சியகத்தில் அடைக்கப்பட்ட விலங்குகளும் பறவைகளும் உள்ளன; இவற்றை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் புகழ்பெற்ற ஆங்கில தோற்பாவைக் கலைஞர் பாடம் செய்துள்ளார்.[8] உரூப்நகர் பாரம்பரிய விழாஉள்ளூரில் சூபி இசை, பாங்கரா கலைஞர்கள், பிற பஞ்சாபிக் கலைஞர்களை ஊக்குவிக்க இந்த விழா நடத்தப்படுகின்றது.[1] [9] கபூர்தலா பாரம்பரிய விழாகபுர்த்தலா பாரம்பரிய அறக்கட்டளையும் கலை, பண்பாட்டு பாரம்பரியதிற்கான இந்திய தேசிய அறக்கட்டளையும் இணைந்து பஞ்சாபு மாநில அரசின் ஆதரவோடு பாபா ஜஸ்ஸா சிங் அலுவாலியா பாரம்பரிய விழாவை நடத்துகின்றது. இந்த விழா ஜகசித் அரண்மனையில் நடைபெறுகின்றது.[1][9][10] அமிர்தசரசு பாரம்பரிய விழாஇந்த விழாவில் பாங்கரா, கித்தா, கட்கா நடனங்களும் குதிரை, ஆனைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு நிகழ்ச்சிகளில் சபாத் கீர்த்தன்கள், நாடகங்கள், இசை மற்றும் நடனங்கள் நிகழ்த்தப்பெறுகின்றன.[1][9][11] அரிவல்லப் சங்கீத விழாஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 27க்கும் 30க்கும் இடையில் ஏற்பாடு செய்யப்படும் இந்த இசை விழா சுவாமி அரிவல்லப்பின் நினைவாக நடத்தப்படுகின்றது.[1] இந்த இசைவிழாவை இந்திய அரசு தேசிய இசை விழாவாக அங்கீகரித்துள்ளது.[12] திசம்பர் 28, 2014இல் அரி வல்லபிற்கு 139 ண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த விழா ஜலந்தர் நகரத்தில் தேவி தலாப் மந்திரில் நடைபெறுகின்றது.[13] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia