இந்தியா தொலைநோக்கு 2020 (India Vision 2020) என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்பத் தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவால் (TIFAC) வெளியிடப்பட்ட ஒருஆவண அறிக்கையாகும். இவ்வறிக்கை டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் தலைமையில் 500 வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்பட்டுள்ளது.[1] இத்தொலைநோக்குப் பார்வை குறித்து "இந்தியா 2020 :புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு" என்ற நூலில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மற்றும் டாக்டர் ய.சு.ராஜன் என அழைக்கப்படும் யக்ஞசுவாமி சுந்தரராஜன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.
இத்திட்டம் குறித்து கலாம் கூறுகையில் இந்திய நாடு வளர்ந்த நாடாக மாறுவதற்கு குறிப்பிடத்தக்க ஐந்து துறைகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்கிறார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்குாிய நிலை மற்றும் அதற்குாிய திறன் மேம்பாடு, இயற்கை வளம், மனிதவளம் மற்றும் மனிதவளத்தின் இணைந்த செயல்பாடு ஆகியவை இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக மாற்றுவதற்கு முதன்மையிடம் பெறுகின்றன.[2]
கலாமின் தொலைநோக்கு
- வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி: தற்போதைய வேளாண் விளைச்சல் மற்றும் உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்குதல்.
- நம்பகமான மின்சார சக்தி கொண்ட உள்கட்டமைப்பு: நகர்ப்புற வசதிகளுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்துதல் மற்றும் சூாிய சக்தி நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல்.
- கல்வி மற்றும் சுகாதார நிலை: மக்களுக்கு கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிணை உறுதிபடுத்துதல்
- தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழி்ல்நுட்பம்: தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் வாயிலாக பின்தங்கிய பகுதிகளுக்கு கல்வியறிவு சுகாதாரம் சார்ந்த சேவையை வழங்குதல்
- தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வியூகம்: அணு தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்து வியூகம் வகுத்தல்
- வறுமை மற்றும் வேலையின்மையைக் குறைத்தல்: ஊடகம் மற்றும் சமூக வலை தளங்களின் வாயிலாக சமூக குழுக்களுக்கு கல்வியறிவு வழங்குதல்.
- இந்திய உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக இந்திய நாணய மதிப்பு விகிதத்தை மேம்படுத்துதல்.
பயன்கள்
- நகர்ப்புறம் - கிராமப்புறம் என்ற வேறுபாடுகளைக் களைந்து நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைவதற்கான முயற்சிகளை எடுத்தல்.
- ஆற்றல் மற்றும் தரமான நீர் ஆகியவை போதுமான அளவு சமமாகக் கிடைக்க உறுதி செய்தல்.
- விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறை ஆகியவை இணைந்து இணக்கமாக செயல்படுதல்.
- நல்ல மதிப்பீட்டு முறையிலான கல்வி சமூக பொருளாதார பாகுபாடு காரணமாக எந்த ஒரு மனிதர்களுக்கும் மறுக்கப்படக் கூடாது.
- உலக அளவில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.
- வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத தன்மையை நிலைநாட்டுவதற்கு அரசு முன்வருதல்.
- வறுமையை ஒழித்தல், கல்வியறிவின்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் களையப்படுதல்.
- பாதுகாப்பான நிலையில் பயங்கரவாதத்திற்கு அஞ்சாமல் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வழிகளில் வளர்ச்சி்ப்பாதையை நோக்கி செல்லுதல்.
- நல்ல தலைமையின் கீழ் வாழுகின்ற எண்ணத்தை உருவாக்கி மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தருதல்.
மேற்கோள்கள்
வெளியிணைப்பு