இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 (HAMA) இந்திய நாடாளுமன்றத்தில் 1956ஆம் ஆண்டில் இந்து சமயச் சட்டங்களின் ஒரு பகுதியாக இயற்றப்பட்டது. இந்த நேரத்தில் இயற்றப்பட்ட பிற இந்து சமயச் சட்டங்கள் 1955 இந்து திருமண சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 மற்றும் இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 ஆகியவை அடங்கும். இச்சட்டங்கள் அனைத்தும் ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு நிறைவேற்றியது. 1956 ஆம் ஆண்டின் இந்து சமயக் குழந்தைகளை தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம், ஒரு வயது வந்த இந்து சமயத்தவரால் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான சட்டப்பூர்வ செயல்முறைகள், சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் பராமரிப்புகள் குறித்து விளக்குவதாகும். தகுதிகள்
இந்தச் சட்டத்தின் கீழ் இந்துக்களுக்கும், இந்துக்கள் என்ற குடையின் கீழ் வரும் சீக்கியர், சமணர் மற்றும் பௌத்தர்கள் அனைவருக்கும் பொருந்தும். இதில் பின்வருவன அடங்கும்: பெற்றோர் இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் அல்லது சீக்கியர்களின் என்ற சட்டப்பூர்வ அல்லது முறைகேடான குழந்தை;பெற்றோர் இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் அல்லது சீக்கியர்களால் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை (முறையான அல்லது முறைகேடான ஒரு குழந்தை);கைவிடப்பட்ட குழந்தை, அறியப்படாத பெற்றோரின் முறையான அல்லது முறைகேடான ஒரு இந்து, பௌத்தர், சமணர் அல்லது சீக்கியர்களால் வளர்க்கப்பட்டது. மற்றும் இந்து, பௌத்த, சமணர் அல்லது சீக்கிய மதத்திற்கு மாறியவர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அல்லது யூதர்கள் இந்த வரையறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் இயற்றப்படும் நாளுக்கு முன் நடந்த தத்தெடுப்புகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. எவ்வாறாயினும். சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நடந்த எந்தவொரு திருமணத்திற்கும் இது பொருந்தும். மேலும் மனைவி இந்துவாக இல்லாவிட்டால், நவீன இந்து சட்டத்தின் கீழ் இந்தச் சட்டத்தின் கீழ் கணவர் அவருக்குப் பராமரிப்பு வழங்கக் கடமைப்பட்டிருக்க மாட்டார்.[2] தத்தெடுப்புகள் முறைகள்யார், யாரைத் தத்தெடுக்க முடியும்?இந்தச் சட்டத்தின் கீழ் இந்துக்கள் மட்டுமே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தத்தெடுக்கலாம். இவற்றில் முதலாவது, தத்தெடுப்பவருக்கு (இந்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் ஒரு இந்து என்று பொருள்படும்) சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று வலியுறுத்துகிறது. அடுத்ததாக, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பொருளாதாரத் திறன் இருக்க வேண்டும். மூன்றாவதாக குழந்தை தத்தெடுப்பதற்கு திறன் கொண்டிருக்க வேண்டும். கடைசியாக தத்தெடுப்பு செல்லுபடியாகும் வகையில் மற்ற அனைத்து விவரக்குறிப்புகளுடன் (கீழே குறிப்பிட்டுள்ளபடி) இணங்க வேண்டும்.[3] ஆண்கள் தங்கள் மனைவி அல்லது தங்கள் மனைவிகள் அனைவரின் சம்மதம் இருந்தால் மட்டுமே ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அல்லது இறந்துவிட்டால், மனைவி துறவறம் பூண்டால், அல்லது மனைவி இந்துவாக வாழ மறுத்தால் ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். திருமணமாகாத ஆண்கள் வயதுக்கு வராத ஆண்/பெண் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இருப்பினும், ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க வேண்டுமானால், அந்த ஆணுக்கு இருபத்தி ஒரு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிறைவு அடைந்திருக்க் இருக்க வேண்டும்.[4] திருமணமாகாத இந்து பெண்கள் மட்டுமே சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க முடியும். திருமணமான ஒரு பெண் தன் கணவனால் தத்தெடுப்பதற்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். ஒரு திருமணமான பெண்ணின் கணவன் ஒரு குழந்தையைத் தத்தெடுத்தால் அவள் தாயாக கருதப்பட வேண்டும்..[4] குழந்தை தத்தெடுக்கப்பட்டு, குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தால், மூத்த மனைவி தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் சட்டப்பூர்வ தாயாக வகைப்படுத்தப்படுவார்.[5] யாரை தத்தெடுக்க முடியும்?தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தை இந்து பிரிவின் கீழ் வர வேண்டும் மற்றும் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். தத்தெடுக்கப்படும் குழந்தை பதினைந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதாக இருக்க முடியாது. தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் அதே பாலினத்தைச் சேர்ந்த குழந்தை இன்னும் வீட்டில் வசிக்கவில்லை என்றால் மட்டுமே தத்தெடுப்பு நிகழும். குறிப்பாக, ஒரு மகனைத் தத்தெடுக்க வேண்டும் என்றால், வளர்ப்புத் தந்தை அல்லது தாய் இன்னும் வீட்டில் வசிக்கும் முறையான அல்லது வளர்ப்பு மகன் இருக்கக்கூடாது..[4] தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் சட்டரீதியான உரிமைகள்தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து, குழந்தை புதிதாக தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் சட்டப்பூர்வ பாதுகாவலரின் கீழ் வரும். இதனால் அந்தக் குடும்ப உறவுகளின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கலாம்..[4] பராமரிப்பு1956 இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் 18வது பிரிவின்படி, தத்தெடுக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்தவர்களே பராமரிக்க வேண்டும். தத்தெடுத்தவரின் மனைவி வேறு மதத்திற்கு மாறினால் அல்லது விபச்சாரம் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால், தத்துக் குழந்தையைக் கொடூரமாக நடத்தியிருந்தால் அல்லது தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவளுடைய பராமரிப்பை ரத்து செய்ய முடியும்.ref name="vakilno1.com"/> மறைந்த கணவரால் மனைவி விதவையாகி விட்டால், அவளைக் காப்பாற்றுவது மாமனாரின் கடமை. விதவை மனைவிக்கு வேறு வழிகள் இல்லை என்றால் மட்டுமே இந்த சட்டப்பூர்வ கடமை நடைமுறைக்கு வரும். அவளுக்குச் சொந்தமாக நிலம் அல்லது வருமானம் இருந்தால், அவள் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், மாமனார் அவளுக்கான கடமையிலிருந்து விடுபடுகிறார். கூடுதலாக, விதவை மறுமணம் செய்து கொண்டால், அவரது மறைந்த கணவரின் மாமனார் இந்தச் சட்டத்திற்குச் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படமாட்டார்.ref name="vakilno1.com"/> ந,ந,ஈ,தி தத்தெடுத்தல்ந,ந,ஈ,தி தத்தெடுத்தல் (LGBT adoption) என்பது அகனள், உகவர், இருபால், திருநங்கைகள் ( நங்கை, நம்பி, ஈரர், திருனர் ) ஆகிய சமூக மக்களால் குழந்தைகளை தத்தெடுப்பது ஆகும். இது ஒரே பாலின தம்பதியினரின் மற்ற பாலினத்தவரின் உயிரியல் ரீதியிலான குழந்தைகளை தத்தெடுத்தல், அல்லது ஒரு ந,ந,ஈ,தி நபர் தனியாக தத்தெடுத்தல் ஆகிய ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். இருபத்தேழு நாடுகளிலும் மற்றும் சார்பு பிரதேசங்களிலும் ஒரே பாலின தம்பதிகளால் மேற்கொள்ளப்படும் தத்தடுத்தல் என்பது சட்டப்பூர்வமானது ஆகும். மேலும் ஐந்து நாடுகளில் ஒரே பாலின தம்பதிகள் மறு தாரக் குழந்தைகளை தத்தெடுப்பது சட்டபூர்வமானதாக உள்ளது. இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia