இரங்தில்லியாங் 1 வேர்ப்பாலம்

இரங்தில்லியாங் 1 வேர்ப்பாலம்

இரங்தில்லியாங் 1 வேர்ப்பாலம் (Rangthylliang 1 Root Bridge) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் சிரபுஞ்சி பகுதியில் அமைந்துள்ளது. 50 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மிக நீளமான வேர்ப்பாலமாக இது கருதப்படுகிறது.[1][2] பாலம் தரையிலிருந்து 30 மீ உயரத்தில் அமைந்துள்ளது. பாலத்திற்கு இரங்தில்லியாங் கிராமத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கிராமத்தில்தான் அதிக அளவிலான வேற்ப்பாலங்கள் உள்ளன.[1] மேலும் இக்கிராமத்தில் மலையேற்றமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3] இரங்தில்லியாங் 1 வேர்ப்பாலம் மிகவும் பிரபலமாகி வருகிறது, தி அட்லாண்டிக் என்ற இதழில் இப்பாலம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.[1] வேர்ப்பாலங்களைப் பார்வையிடுவதற்கான மலையேற்றம் இரங்திலியாங் கிராமத்தில் தொடங்கி மவ்கிர்நாட்டு கிராமத்தில் முடிவடைகிறது.[4] இப்பாதையில் கிட்டத்தட்ட 16 வேற்ப்பாலங்கள் இருப்பதாகவும் அறியப்படுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Rogers, Patrick A. (2015-09-14). "evenfewergoats: The Undiscovered Living Root Bridges of Meghalaya Part 2: Bridges Near Pynursla". evenfewergoats. Retrieved 2021-10-20.
  2. Binayak, Poonam (2017-07-17). "India's Amazing Living Root Bridges Will Blow Your Mind". Culture Trip. Retrieved 2021-10-20.
  3. "The Root Bridges of Cherrapunji". Atlas Obscura (in ஆங்கிலம்). Retrieved 2021-10-20.
  4. "EKH Living Root Bridges – Meghalaya Tourism" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-10-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya