இரணகள்ளி, அல்லது மலைக்கள்ளி, இது கள்ளி வகை தாவரம் ஆகும்.[1]Goethe plant,[2][3] இதன் இலைகள் மூலிகை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக சிறுநீரகக் கற்கைளை கரைத்து, வெளியேற்றும் குணம் இரணகள்ளி இலைகளுக்கு உள்ளது.[4]இது சுமார் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் கொண்டது.[5] இதன் இலைகள் தடிமனாகவும், நீள் வட்டமாகவும், வளைந்தாகவும், விளிம்புகள் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இதன் தண்டுகள் சதைப்பற்றுடன் உருளை வடிவத்தில் காணப்படும். இதில் ஆண்டு முழுவதும் பூக்கள் வளரும்.[6]
இத்தாவரம் மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்டது. மேலும் இக்கள்ளிச் செடிகள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையாக வளர்கிறது. வெப்பமண்டல பசுமைமாறா மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் மலை காடுகளில் உள்ள பாறைகளின் தளங்களைப் பற்றி வளர்கிறது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் , பெர்முடா, மக்ரோனேசியா , மஸ்கரேன்ஸ் , பிரேசில் , சுரினாம் , கலபகோஸ் தீவுகள், மெலனேசியா , பாலினேசியா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . [1] [8] ஹவாய் போன்ற பலவற்றில் , இது ஒரு களையாக கருதப்படுகிறது.[7][8][9]
மருத்துவ குணங்கள்
சிறுநீரகக் கற்களை உடனடியாக கரைக்க, இரணகள்ளி இலையை அதிகாலையில், வெறும் வயிற்றில் ஒரு இலை வீதம் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆறாத புண்களுக்கு இரணகள்ளி இலையை மை போல் அரைத்து, ஆறாத புண்கள் மேல் வெற்றிலை வைத்து கட்டிவந்தால், விரைவில் புண்கள் ஆறும்.
இரணகள்ளி இலையை சாற்றாக பிழிந்து அதன் சாற்றை கால் ஆணி, மரு, பாலுண்ணிகள் உள்ள இடங்களில் இரவில் தடவி வைத்து, பின் காலையில் கழுவி விடவேண்டும்.
தோல் சார்ந்த நோய்களுக்கு இரணகள்ளி செடியின் வேருடன் (500 மில்லி கிராம்) தேங்காய் எண்ணை (400 மி கி), கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்), நீரடிமுத்து (20 கிராம்), கசகசா (5 கிராம்) சேர்த்து இடித்து சாறாக்கி அடுப்பில் கொதிக்க வைத்து சுண்டிய பின் வடிகட்டி, நாள்தோறும் காலையில் தலை முதல் கால் வரை பூசி அரை மணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் தேய்த்து குளித்தால், குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர் போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
ரணகள்ளி இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும்.
காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும்.
குறிப்பு: இரணகள்ளி இலைகளைப் பயன்படுத்தும் காலத்தில் பாலும், பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன், முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.[10]
↑Ali Esmail Al Snafi, " The Chemical Constituents and Pharmacological Effects of Bryophyllum calycinum. A review , International Journal of Pharma Sciences and Research (IJPSR), vol. 4, n o 12,2013
↑Kamboj Anjoo, Ajay Kumar Saluja," Microscopical and Preliminary Phytochemical Studies on Aerial Part (Leaves and Stem) of Bryophyllum pinnatum Kurz." PHCOG J., Vol. 2, n° 9, 2010, p. 254–9
↑பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
POWO என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை