இரண்டாம் யோசப்பு இசுமித்து
இரண்டாம் யோசப்பு இசுமித்து அல்லது யோசப்பு இசுமித்து, இளையவர் (Joseph Smith, Jr., ஜோசஃப் ஸ்மித், ஜூனியர், திசம்பர் 23, 1805 – சூன் 27, 1844) அமெரிக்க சமயத் தலைவரும் பின்னாள் புனிதர் இயக்கம் அல்லது மொர்மனியம் என்ற சமயத்தின் நிறுவுனரும் ஆவார். தமது 24ஆம் அகவையில் மோர்மொன் நூலை பதிப்பித்து அடுத்த பதினான்கு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சீடர்களைப் பெற்றார். பல நகரங்களையும் கோவில்களையும் நிறுவி தமது சமயத்தை நிலைநிறுத்தினார். பின்னாள் புனிதர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரை ஓர் இறைவாக்கினராகக் கருதுகின்றனர். மோர்மொன் நூல்யோசஃப் இசுமித்தின் கூற்றுப்படி, அவர் 17 அகவையினராக இருக்கும் போது தான் மொரோனி எனப்படும் தேவதூதரை சந்தித்தார்.[1]. மொரோனி இசுமித்திடம் தங்கத்தகடுகளில் எழுதப்பட்டுள்ள மிகவும் பழைமையான நூல் ஒன்றினைப் பற்றியும் அது ஓர் குன்றில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சில ஆண்டுகள் கழித்து இந்த தகடுகளைத் தான் பெற்றதாகக் கூறி அதன் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் இன்று மோர்மொன் நூல் எனப்படும் புனித நூலாக மொழிபெயர்த்தார். மார்ட்டின் ஹாரிசு என்பவருக்கு தான் அவரது தொப்பியிலிருந்து படிக்கும் வாசகங்களை எழுதுமாறு பணித்தார். தங்கத் தகடுகளுடன் முக்காலமுணரும் கற்களை அவரது தொப்பியில் இட்டுள்ளதாகவும் அதன் மகிமையால் எழுத்துக்கள் தொப்பியில் தோன்றி ஆங்கிலமாக மாறும் எனவும் கூறினார். ஹாரிசு இந்தப் பக்கங்களை எடுத்துச் சென்று தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை எடுத்துரைத்தார். அவரது மனைவி நம்பாது அடுத்த நாளில் யோசப்பை சோதிக்குமாறு பணித்தார். ஹாரிசு அடுத்தநாள் சென்று தான் முந்தைய நாள் பக்கங்களை தொலைத்து விட்டதாகவும் வேண்டுமானால் திரும்பவும் நகலெடுக்க உதவுவதாகவும் கூறினார். யோசப்பு பொய் கூறுவதானால் இம்முறை நகலும் நேற்றைய படியும் வெவேறாக இருக்குமென்பது அவரது சோதனை. யோசப்பு தான் தனியாக வழிபட விரும்புவதாகக் கூறினார். பின்னர் ஹாரிசிடம் யோசப் கடவுள் மிகவும் கோபப்பட்டதாகவும் இனி தங்கத்தகடுகளிலிருந்து மொழிபெயர்க்க உதவ மாட்டேன் என்றதாகவும் கூறினார். ஆனால் வேறு தகடுகளைத் தருவதாகவும் அதனை யோசப் மட்டுமே காண முடியும் என்றும் கூறியதாகவும் அதன் உள்ளடக்கமும் அதே கதையைக் கொண்டிருக்கும்;ஆனால் வேறு மொழிநடையில் இருக்கும் என்றார். இதையொட்டியே மோர்மொன் நூல் எழுதப்பட்டது. மேசேவும் ஆபிரகாமும்ஜூன் 1830இல் இசுமித்து தான் மோசேவை ஒரு காட்சியில் கண்டதாகவும் அதில் உலக முடிவைப்பற்றியும் மனிதப்படைப்பைப்பற்றியும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் விளக்கம் பெற்றதாகவும் கூறினார்.[2] இக்காட்சியின் அடிப்படையில் இசுமித்து விவிலியத்தை மொழிபெயர்க்க தொடங்கினார். இம்மொழிபெயர்ப்பினை 1833இல் நிறைவு செய்ததாக இவர் அறிவித்தாலும், இவரின் இறப்பு வரை இது அச்சிடப்படவில்லை.[3] இசுமித்து செய்த பல மாற்றங்கள் விவிலிய மூல நூலுக்கு ஒத்திருக்கவில்லை. இவர் விவிலியம் காலப்போக்கில் மனிதர்களால் மாற்றப்பட்டுவிட்டதாகவும், அதனால் அதன் உணமைத்தன்மை கெட்டு விட்டதாகவும், இவரின் மொழிபெயர்ப்பே கடவுளால் தூண்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.[4] இவர் செய்த பல மாற்றங்கள் முரண்பாடுகளை சரி செய்யவோ அல்லது சிறிய விளக்கங்கள் தருவதாகவோ இருந்தாலும், பிற மாற்றங்கள் "இழந்த" பகுதிகள் என மூல நூலில் இல்லாத பெரிய உரைகளையும் விவிலியத்தில் சேர்த்திருத்தது.[5] எடுத்துக்காட்டாக தொடக்க நூலின் படைப்பு விவரிப்பு இவரின் மொழிபெயர்ப்பின் மூன்று மடங்கு பெரிதாயிருந்தது. இதுவே பிற்காலத்தில் மோசேயின் புத்தகம் என அழைக்கப்படது[6] விவிலியத்தில் சில வரிகளே உள்ள நோவாவின் மூதாதையரான ஏனோக்கின் கதை இவரின் மொழிபெயர்ப்பில் பல பக்கங்களுக்கு உள்ளது.[7] இவரின் மொழிபெயர்ப்பு பழைய ஏற்பாட்டை கிறித்தியலுக்கு உட்படுத்தும் முயற்சியாக அமைந்திருந்தது.[8] 1835ஆம் ஆண்டு இவர் ஒரு வழிப்போக்கரிடமிருந்து தனது திருச்சபையினர் சிலரை சில சுவடிகளை வாங்கச்செய்தார். அடுத்த பல ஆண்டுகளாக, ஸ்மித், இந்த சுருள்களில் கூறப்பட்டுள்ளவைகளாக தான் எண்ணியதை மொழிபெயர்த்து 1842இல் ஆபிரகாமின் புத்தகம் என்னும் பெயரில் வெளியிட்டார்.[9] இப்புத்தகம் ஆபிரகாம் நிறுவிய நாட்டினைப்பற்றியும் வானியல், அண்டவியல், வம்ச பட்டியல் மற்றும் குருத்துவம் பற்றியும் உலகப்படைப்பின் மற்றுமொரு வகையான விவரிப்பையும் கொண்டுள்ளது.[10] மோர்மொன் திருச்சபைஏப்ரல் 6, 1830 அன்று அவர் பின்னாள் புனிதர்களின் இயேசு கிறித்துவின் திருச்சபையை நிறுவினார். இது பரவலாக மோர்மொன் திருச்சபை எனப்படுகிறது. யோசப் கடவுள் தன்னிடம் ஓர் இறைவாக்கினராக இருந்து தன்னிடம் கற்றவைகளை மக்களிடம் பரப்புமாறு கூறியதாக்க் கூறினார். பல மில்லியன் மக்கள் அவரது திருச்சபையில் இணைந்தனர். இந்தத் திருச்சபை இன்றும் இயங்கி வருகிறது. யோசப் ஸ்மித் கூறிய கூற்றுக்களை சிலர் விரும்பவில்லை. மற்ற திருச்சபைகள் பகுதி உண்மையையே உரைப்பதாகக் கூறினார். மேலும் பல மனைவிகளை மணம் புரிவதை ஆதரித்தார். இதனால் இவர் மீது பலர் பகைமை பாராட்டினர். இறப்புசூன் 7, 1844இல் ஸ்மித்தின் செயல்களால் வெறுப்படைந்த இவரின் சமயத்தினர் சிலர் இல்லினாய் மாநிலத்தின் நாவூ என்னுமிடத்தில் நாவூ புறங்காட்டி என்ற செய்தித்தாளினை மொர்மனியத்தினை மறுசேரமைக்கும் கருத்துகளோடு வெளியிட்டனர்.[11] இந்த செய்தித்தாளில் ஸ்மித் தங்களது மனைவியரைக் கவர்ந்ததாக சிலர் கூறுகின்றனர் போன்ற பல விசமச் செய்திகளை பரப்பினர். இதனால் வெகுண்ட ஸ்மித் செய்தித்தாள் வெளியிட்ட அச்சு இயந்திரத்தை அழித்து அந்நகரத்திலும் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தார். இதனால் உள்நாட்டுப் போர் விளைவிக்க முயன்றதாக ஸ்மித் கைது செய்யப்பட்டார். இல்லினாயன் கார்த்தேஜ் சிறையில் அடைபட்டிருக்கும் தருவாயில் சூன் 27, 1844 அன்று சிறையினுள் புகுந்த சில இவரின் பகைவர்கள் இவரையும் இவரது தமையனார் ஐரும்மையும் சுட்டுக்கொன்றனர். சான்றுகோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இரண்டாம் யோசப்பு இசுமித்து
|
Portal di Ensiklopedia Dunia