இரத்தப் புற்றுநோய்
இரத்தப் புற்றுநோய் அல்லது குருதிவெண் புற்று (Leukemia) அல்லது leukaemia /luːˈkiːmiːə/ எனவும் [1] loo-KEE-mee-ə எனவும் பலுக்கும் வெண்குருதிக் கலப்புற்று இரத்தப் புற்றுவகைகளில் ஒரு குழுவாகும். இது எலும்புநல்லியில் தோன்றி இயல்பற்ற பலவகை இரத்த உயிர்க்கலங்களை உருவாக்குகிறது.[9] இந்த இரத்த உயிர்க்கலங்கள் முழுவளர்ச்சி அடையாததால் முந்துநிலை உயிர்க்கலங்கள் அல்லது முகைகள் அல்லது வெண்புற்று உயிர்க்கலங்கள் எனப்படுகின்றன.[2] குருதிக் கசிவு, கன்றிய கீறல், சோர்வு, காய்ச்சல், தொற்று இடர் வாய்ப்பு கூடுதல்னஆகியன நோய் அறிகுறிகளாக அமைகின்றன.[2] இயல்பான உயிர்க்கல்ங்கல் இல்லாமையால் இந்த நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன.[2] நோயறிதல் குருதி ஓர்வுகள், எலும்புநல்லி இழையப் பகுப்பாய்வு ஆகிய மருத்துவ ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.[2] வெண் குருதிக்கலப் புற்றுக்கான காரணம் அறியப்படவில்லை.[5] மரபுக் காரணிகளும் சுற்றுச்சூழல் காரணிகளும் சேர்ந்து செயல்படுவதாகக் கருதப்படுகிறது.[5] இடர்க்காரணிகளாக, புகைபிடித்தல், மிண்னணுவாக்கக் கதிர்வீச்சு,பென்க்சீன் போன்ற சில வேதிமங்கள், முந்துநிலை வேதிம மருத்துவம், டவுன் நோய்த்தொகை ஆகியன கருதப்படுகின்றன.[3][5] இப்புற்றுக்கான குடும்ப மரபுள்ளவர்களில் உயர்நோயிடர் அமையும்.[3] இவற்றில் நான்கு முதன்மை வகைகளும் சில அரியவகைகளும் அமைகின்றன. நான்கு முதன்மை வகைகளாவன, கடும் நிணநீர்முகை வெண்குருதிப் புற்று, கடும் நிணநீரக வெண்குருதிப் புற்று, நாட்பட்ட நிணநீர்மமுகை வெண்குருதிப் புற்று, நாட்பட்ட நிணநீரக வெண்குருதிப் புற்று என்பனவாகும்.[3][10] குருதி, எலும்புநல்லி, நிணநீர் மண்டலத்தைத் தாக்கும் புற்றுகளின் பெருங்குழுவில் குருதிவெண்புற்றுகளும் நிணநீர் இழையப் புற்றுகளும் அமைகின்றன. இப்பெருங்குழு சார்ந்த புற்றுகள் குருதியாக்க, நிணநீரக இழையப் புற்றுகள் எனப்படுகிறது.[11][12] நோயாற்றல் வேதிம மருத்துவம், கதிர்வீச்சு மருத்துவம்மிலக்குசார் மருத்துவம், எலும்புநல்லி பதிலியாக்கம் போன்ற முறைகளின் தேவைப்படும் சேர்மானவழிகளில் செய்யப்படுகிறது. மேலும் ஆதரவும் அக்கறையும் மிகுந்த கவனிப்பும் கூடுதல்லாகத் தேவைப்படுகிறது.[3][6] சில வகை வெண் குருதிக்கலப் புற்றுகளை மிகவும் கவனமாகக் காத்திருந்து கையாலப்பட வேண்டியனவாக உள்ளன.[3] நோய்வகையையும் அகவையையும் பொறுத்தே நோயாற்றலில் வெற்றி கிடைக்கிறது. வளரும் நாடுகளில் நோயாற்றல் நல்லமுறையில் மேம்பட்டுள்ளன.[10] அமெரிக்காவில், 5 அகவைக்கும் குறைந்த சிறுவர்களின் பிழைப்பு வீதம் 65% ஆக உள்ளது.[4] முதல்தர நாடுகளில் 15 அகவைக்கும் குறைந்த சிறுவர்களின் பிழைப்பு வீதம் இந்நோயின் வகையைப் பொறுத்து 60% , ஏன் 90% அளவினும் கூடுதலாக உள்ளது.[13] ஐந்தாண்டுகளில் நோய் திரும்ப வராத கடும் வெண் குருதிக்கலப் புற்று வந்த சிறுவர்களில் நோய் பிறகு எப்போதுமே மீள வாய்ப்பில்லை.[13] 2015 ஆம் ஆண்டில் குருதிவெண்புற்று உலகளவில் 2.3 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டு, அவர்களில் 353,500 பேர் இறந்துவிட்டனர்.[7][8] 2012 ஆம் ஆண்டில் புதிதாக இந்நோய் 352,000 பேருக்கு ஏற்பட்டது.[10] இந்நோய் சிறுவர்களிலேயே பரவலாக ஏற்படுகிறது; இவர்களி நான்கில் மூன்று பகுதியினருக்கு கடும் நிணநீர்முகை குறுதிப் புற்ரே பெரிதும் தாக்குகிறது.[3] அகவை முதிந்தவரில் நாட்பட்ட நிணநீர்ம குருதி வெண்புற்றும் கடும் எலும்புநல்லியக குருதி வெண்புற்றுமே பரவலாக அமைய, அனைத்துவகை வெண்குருதிக்கலப் புற்றும் சேர்ந்து 90% பேரைத் தாக்குகிறது.[3][14] இந்நோய் வளர்ந்த நாடுகளிலேயே பரவலாக ஏற்படுகிறது.[10] சொற்பிறப்பியல்விர்ச்சோவ் ஒருவரின் குருதிப் பதக்கூற்றில் இயல்புக்கு மாறாக அமைந்த கூடுதலான எண்ணிக்கையில் உள்ள வெண்குருதிக் கலங்களைக் கண்டார்; இந்நிலையை இவர் Leukämie எனச் செருமானிய மொழியில் குறிப்பிட்டார்; இவர் இந்தச் செருமானியச் சொல்லை leukos (λευκός), பொருள் "வெண்மை", haima (αἷμα), பொருள் "குருதி" எனும் இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவாக்கினார்.[15] வரலாறு![]() வெண் குருதிக்கலப் புற்று 1827 இல் உடற்கூற்றியலாளரும் அறுவை மருத்துவருமான ஆல்பிரெடு ஆர்மாந்து உலூயிசு மரீ வெல்பியூவால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. நோயியலாளர் விர்ச்சோவால் 1845 இல் மேலும் முழுமையான விவரம் தரப்பட்டது. விர்ச்சோவின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து,நோயியலாளர் பிரான்சு எர்னெசுட்டு கிறித்தியான் நியூமன் வெண் குருதிக்கலப் புற்று நோயாளியின் எலும்புநல்லி இயல்பான சிவப்பு நிறத்துகுப் பதிலாக " அழுக்குப் பசுமஞ்சள் நிறத்தில்" இருப்பதைக் கண்டுபிடித்தார்ரிந்தக் கண்டுபிடிப்பால் நியூமன் வெண் குருதிக்கலப் புற்று நோயாளியின் இயல்புக்கு மாறான குருதிநிலைக்கு எலும்புநல்லி சிக்கலே காரணம் எனும் முடிவுக்கு வந்தார்.[16] வெண் குருதிக்கலப் புற்று 1900 இல் இருந்து தனிநோயாக அல்லாமல் நோய்க்குழுவாகக் கருதப்படலானது. பூசுட்டன் நகரைச் சார்ந்த் நோயியலாளர் சிட்னி பார்பெர் 1947 இல் பழைய செய்முறைகளின்வழி, சிறாரின் கடும் வெண் குருதிக்கலப் புற்று நோயைப் போலிக் அமில பாவனையுடாக ஆற்றலாம் என நம்பினார். இம்முறையில் கடும் வெண் குருதிக்கலப் புற்று நோயுள்ள பல சிறுவர்களின் எலும்புநல்லி அறிகுறைகள் மேம்படுவதைக் கண்ணுற்றார்; ஆனால், அவர்களின் புற்றுநோய் ஆறாமல் உள்ளதையும் அறிந்தார்ரிதனால், மேலும் பல செய்முறைகல் மேற்கொள்ளப்படலாயின.[17] கடும் வெண் குருதிக்கலப் புற்று நோயாற்ற, 1962 இல் ஆய்வாளர்கள் எமில் பிரீய்ரீக்கும். எமில் மூன்றாம் பிரீயும் வேதிம மருத்துவம் சார்ந்த சேர்மான முறையைப் பயன்படுத்தி முயன்றனர். சிலர் இம்முறையில் வெற்றியோடு நோயாற்றப்பட்டு நெடுநாள் உயிர்வாழ்ந்தனர்.[18] வகைப்பாடுபொது வகைப்பாடு
இரத்தப் புற்று நோய் என்பது மருந்தகமுறையிலும் நோயியல் முறையிலும், பல வகைப்பட்ட பெரும் நோய்க்குழுமங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இதில் முதல் வகைபாடாக, கடும் வகை (acute), நாள்பட்ட வகை (chronic) என இருவகைகள் அமைகின்றன: :[19]
மேலும், எந்தவகைக் குருதிக்கலங்கள் தாக்கமுறுகின்றன என்பதைப் பொறுத்து இவ்வகை புற்றுநோய்கள் அவற்றின் துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இது வெண் குருதிக்கலப் புற்றுகளை நிணரீர்முகை வெண்குருதிக்கலப் புற்றுகள் என்றும் எலும்புநல்லியக அல்லது எலும்புநல்லியாக்க வெண்குருதிக்கலப் புற்றுகள் என்றும் பிரிக்க வகைசெய்கிறது.[19]
சிறப்பு வகைகள்
முந்துநிலை வெண் குருதிக்கலப் புற்று
நோய்க்குறிகளும் அறிகுறிகளும்![]() சிறுவர்களில் அமையும் மிகப் பொதுவான அறிகுறிகளாக, காயக்கீறல், வெளிர்தோல், காய்ச்சல், மண்ணீரல் அல்லது கல்லீரல் பெருவீக்கம் காணப்படுகின்றன.[39] எலும்பு நல்லியின் இயல்பு உயிர்க்கலங்களை அகற்றி அவற்றின் இடத்தில் முதிராத வெள்ளை குருதி உயிர்க்கலங்களை நிரப்புவதால், எலும்புநல்லி சிதைவடைகிறது. இதனால் குருதி உறைவதற்குத் தேவையான குருதித் தட்டங்கள் குறைகின்றன. இதனால், இரத்தப்புற்று நோய் நோயாளிகளுக்கு எளிதில் காயம் ஏற்பட்டு, குருதிப் பெருக்கும் மிகுதியாக உண்டாகலாம் அல்லது ஊசி முனைக் குத்தல் குருதிப் பெருக்குகள் உருவாகலாம்.[40] நோயீனிகளுடன் போராடும் வெண்குருதிக் கலங்கள் அடக்கப்படலாம்; அல்லது செயலிழப்புக்கு ஆட்ப்டுத்தப்படலாம். இதனால் ஒரு நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு ஒர் எளிய தொற்றுடன் கூடப் போராட முடியாமல் போகலாம்; அல்லது உடலின் மற்றவகை உயிர்க்கலங்கள் தாக்கப் படலாம்.இப்புற்று நோய், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை செயலற்றதாகச் செய்து விடுவதால், சில நோயாளிகள் தொண்டை அழற்சி, வாய்ப் புண்கள் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற தொற்று நோய்களி தொடங்கி, உயிருக்கே கேடுதரும் நிமோனியா எனப்படும் குளிர்காய்ச்சல், தற்செயலாக ஏர்படும் வாய்ப்பைப் பொறுத்து உருவாகும் தொற்று நோய்கள் வரை பலவற்றிற்கும் அடிக்கடி ஆளாகிறார்கள்.[41] இறுதியாக, சிவப்புக் குருதிக் கலங்களின் குறைபாடு அனிமியா எனப்படும் குருதிச் சோகையை விளைவித்து, டிஸ்பெனியா, பல்லோர் போன்ற நோய்களை ஏற்படுத்தும். சில நோயாளிகள் வேறு சில அறிகுறிகளையும் அடைவதுண்டு.[42] இவை காய்ச்சல், குளிர், இரவில் வியர்த்தல், காலுறுப்புகளின் நலிவு, களைப்பாக உணர்தல், குளிர்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்வர். சிலருக்கு குமட்டல் ஏற்படலாம்; மேலும், மண்ணீரல், கல்லீரல் ஆகியவர்றின் பெருக்கத்தால் அல்லது வீக்கத்தால் வஇறுநிரம்பிய உணர்வைப் பெறலாம். இது எதிர்பாராத எடையிழப்பை ஏற்படுத்தலாம். நோயால் தாக்கமுறும் முந்துநிலை உயிக்கலங்கள் ஒன்றுசேர்ந்து, கல்லிரலிலும் நிணநீர் முடிச்சுகளிலும் வீக்கம் ஏற்பட்டு, குமட்டல் உணர்ச்சி விளையலாம்.[43] புற்று நோய் குருதிக் கலங்கள் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி விட்டால், பிறகு நரம்பியல் தொடர்பான (மிகவும் குறிப்பாக தலைவலி போன்ற) அறிகுறிகள் ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி, வலிப்புகள், புலன்மரத்தல், போன்ற இயல்பற்ற நரம்பியல் அறிகுறிகள் மூளைத்தண்டு அழுத்தத்தால் ஏர்படலாம். இரத்தப்புற்று நோய் தொடர்பான அறிகுறிகள் அனைத்துமே மற்ற நோய்களுக்கும் ஏற்படுபவையே.இதனால், மருத்துவ ஆய்வக ஓர்வுகளின் மூலமே இரத்தப்புற்று நோய்களைக் கண்டறிதல் வேண்டும். லுகேமியா என்ற சொல்லுக்கு வெள்ளைக் குருதி என்று பொருள். இது குருதிப்புற்று நோயாளிகளில் மருத்துவம் பெறுவதற்கு முன்னால் மிக அதிகமான அளவில் வெள்ளைக் குருதிக் கலங்களைப் பெற்றிருப்பதால் இப்பெயர் பெற்றது.ஒரு குருதிப் பதக்கூறை நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்கும்போது, அதில் மிக அதிகமான எண்ணிக்கையில் வெள்ளைக் குருதிக்கலங்கள் இருப்பது தெரிய வரும். பெரும்பாலும் இந்த மிகையான எண்ணிக்கையில் உள்ள வெள்ளைக் குருதிக்கலங்கள் முதிராதவையாகவும், செயலற்றவையாகவுமே இருக்கும். இவ்வாறு அமையும் கூடுதலான வெள்ளைக் குருதிக் கலங்கள், பிற உயிர்க்கலங்களுடன் இடைவினை புரிவதால், குருதி எண்ணிக்கையில் தீங்கான சமனின்மையை விளைவித்துவிடும்.[சான்று தேவை] சில செய்முறையாளர்கள் வெண் குருதிக்கலப் புற்றின் நோயறிதலின்போது குருதிக்கலங்களை எண்ணியபோது, அப்படியொன்றும் உயரளவில் வெண்குருதிக்கலங்கள் இல்லாமையைக் கண்டுள்ளனர். மிக அருகியதான இந்நிலை அலூக்கேமியா அல்லது அல்வெண் குருதிப் புற்று எனப்படும். அந்நிலையிலும் இயல்பான குருதியாக்கத்தைக் குலைக்கும் புற்றாக்க வெண் குருதிக்கலங்கள் எலும்புநல்லியில் அமைந்திருந்தன;ஆனால், அவை குருதியோட்டத்தில் கலக்காமல் எலும்புநல்லியில் மட்டுமே இருந்தன. அலூக்கேமியா உள்ளவர் ஒருவரின் குருதியில் எப்போதும் வெண் குருதிக்கலங்கள் இயல்பாகவோ அல்லது குறைவாகவோ தாம் அமையும். அலூக்கேமியா நிலை, குருதிப் புற்றின் நான்கு பெரும்வகைகளிலுமே ஏற்படலாம். குறிப்பாக, முடிக்கல வெண் குருதிக்கலப் புற்றில் ஏற்படும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.[44] நோயறிதல்![]() வழக்கமாக நோயறிதல் பலமுறை மீள மீளச் செய்யும் முழுக்குருதிக்கல எண்ணிக்கைகள்சார்ந்த ஓர்வையும் எலும்புநல்லி கூராய்வையும் பொறுத்தும் நோய் அறிகுறிகளின் நோக்கீடுகளைச் சார்ந்தும் அமைகிறது. சிலவேளைகளில், குருதி ஓர்வுகள் வெண்குருதிப்புற்றின் தொடக்கநிலைகளிலும் மீள்நிகழ்வின்ன் போதும் நோயாளியின் வெண்குருதிப் புற்றின் இருப்பைத் தெளிவாகக் காட்டுவதில்லை. எனவே, சில சூழல்களில் சிலவகை வெண்குருதிப்புற்றைக் கன்டுபிடிக்க நிணநீர்க்கணு இழையச் சிதைவு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.[45] நோயறிதலுக்குப் பிறகு, கல்லீரல், கிறுநீரகச் சிதைவுகளையும் வேதிம மருத்துவத்தின் விளைவுகளையும் அறிய, குருதி வேதியியல் ஓர்வுகளைப் பயன்படுத்தலாம். வெண்குருதிப்புற்று உருவாக்கிய பிற சிதைவுகளை அறியவேண்டிய நிலைமைக இருந்தால், மருத்துவர்கள் புதிர்க்கதிர் ஓர்வு, காந்த ஒத்திசைவு குறுக்கீட்டளவி அல்லது மீயொலி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இந்த ஓர்வுகளும் ஆய்வுகளும் உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்ட சிதைவுகளை மிகத் தெளிவாகக் காட்டும்; புதிர்க்கதிர் ஓர்வு எலும்புச் சிதைவுகளையும் காந்த ஒத்திசைவுக் குறுக்கீட்டளவி ஆய்வு மூளை, சிறுநீரகம், மண்ணீரல் சிதைவுகளையும் மீயொலி ஆய்வு கல்லீரல் சிதைவுகளையும் தெளிவாகக் காட்டும். மார்பக நிணநீர்க்கணுக்களை ஆய கணினி முப்பருமான வரைவியல் ஆய்வு மேற்கொள்லப்படலாம். ஆனால், இந்த ஆய்வு அவ்வளவாக நடப்பில் மேற்கொள்ளப்படுவதில்லை.[46] ஒருவருக்கு வெண்குருதிப்புற்று நோயறிய இம்முறைகளைப் பயன்படுத்தியும் பல அறிகுறிகள் குழப்பந்தரு நிலையிலும் பிறநோய்களுக்கு உரியனவாகவும் அமைவதால், பலருக்கு நோயறிய முடியாதநிலை அமைகிறது. இதனால், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இந்நோய் உள்லவர்களில் ஐந்தில் ஒஎரு பங்கு நோயாளிகளின் நோயறியவியலாமல் போக்கிறது என மதிப்பிடு செய்துள்ளது.[44] காரணங்கள்பல்வேறுவகை வெண்குருதிப்புற்றுகள் எதற்குமான அறியப்பட்ட தனிக் காரணம் எதுவுமில்லை. அறிந்த சில காரணங்களும் பொதுவாக தனியர் எவராலும் கட்டுக்குள் கொண்டுவர இயலாதவை என்பதாடு அவை சிலவகை புற்றுகளுக்கே பொருந்துவனவாக அமைகின்றன.[47] பெரும்பாலான வெண்குருதிப் புற்றுகளுக்கான காரணம் ஏதும் இதுவரை அறியப்படவில்லை. பல்வேறு வெண்குருதிப் புற்றுகளுக்கு பல்வேரு காரணங்களேஉள்ளன.[48] பிற புற்றுகளைப் போலவே, வெண்குருதிப் புற்றும் மரபனில் உள்ள உடலவகை உயிர்க்கல சடுதிமாற்றங்களாலேயே ஏற்படுகின்றன. சில சடுதிமாற்றங்கள் புற்றாக்கிகளை முனைப்போடு இயக்குவதாலோ அல்லது புற்றடக்கும் மரபீனிகளைச் செயலறச் செய்வதாலோ உயிர்க்கல இறப்பு நிகழ்வை குலைத்தோ அல்லது உயிர்க்கலப் பிரிவாலோ வேறுபடுத்தலாலோ வெண்குருதிப் புற்றை கிளர்த்துகின்றன. தானாகவே தோன்றும் அல்லது மின்னணுவாக்கக் கதிர்வீச்க்கு ஆட்பட்டோ அல்லது புற்றாக்கப் பொருள்களுக்கு ஆட்பட்டோ தோன்றும் சடுதிமாற்றங்களாலும் வெண்குருதிப் புற்று உருவாகலாம்.[49] அகவை முதிர்ந்தவருக்கான கரணங்களாக, இயற்கையான அல்லது செயற்கையான மின்னணுவாக்கக் கதிர்வீச்சு, மாந்த டி-நிணநீர்க்கல நச்சுரியித் தொற்றுக்கள், சில வேதிமங்கள், குறிப்பாக பென்சைன் போன்றவை அல்லது முன்பிருந்த புற்று நோய் இழையங்களுக்காக அளிக்கப்பட்ட கார அமிலமாக்கும் வேதி மருத்துவம் ஆகியவை அடங்கும்.[50][50][51][51][52][52] அகவை முதிர்ந்தவரில் புகையிலைப் பயன்பாடு, கடும் எலும்புநல்லி வெண்குருதிப் புற்றை வளர்க்கும் இடரைச் சற்றே உயர்த்தும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.[50][50] சில பாறைநெய்(பெட்ரோ) வேதிமங்களும் முடிச் சாயங்களும் சிலவகை வெண்குருதிப் புற்றுகளை உருவாக்குவதை புற்றுநேர்வு ஆய்வுகள் காட்டுகின்றன.னௌணவு எவ்வகையிலும் புற்றாக்கத்தை உருவாக்குவதில்லை. கூடுதலாக காய்கறிகளை உட்கொள்ளுதல், ஓரளவுக்குப் புற்றில் இருந்தான பாதுகாப்பு வலயத்தை உருவாக்குகிறது.[47] நச்சுயிரிகளோடு சிலவகை வெண்குருதிப் புற்றுகள் தொடர்பு கொண்டுள்ளன. எடுத்துகாட்டாக, மாந்த டி- நிணநீர்மவக நச்சுயிரி(HTLV-1) அகவை முதிர்நிலை டி- உயிர்க்கல வெண்குருதிப் புற்றை உருவாக்குகிறது.[53] சில நேர்வுகளில், கருத்தரித்த வெண்குருதிப் புற்றுள்ள தாயிடம் இருந்து வென்குருதிப் புற்று குழந்தைகளுக்குக் கடத்தப்படுவது அறிவிக்கப்பட்டுள்ளது.[50] அண்டவணுக்களைத் தூண்டும் மருந்துகளை உட்கொண்ட தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிற குழந்தைகளை விட இரட்டிப்பாக வெண்குருதிப் புற்று உருவாகிறது.[54] கதிர்வீச்சுஅணுக்கரு உலை நேர்ச்சிகள்(விபத்துகள்) வெளியிடும் எலும்பணுகி எனப்படும் சுட்டிரான்சியம்-90 (Sr-90) கதிர்வீச்சு விலங்குகளில் எலும்புப் புற்றுக்கும் வெண்குருதிப் புற்றுக்குமான இடரை மிகுவிப்பதால் இந்நிலை மாந்தருக்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது.[55] மரபியல் நிலைமைகள்சிலர் வெண்குருதிப்புற்று உருவாவதற்கான மரபியல் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளனர். இம்மரபியல் நிலைமையை குடும்ப வரலாற்றின்வழியும் இரட்டைப் பிறப்பினர் ஆய்வுவழியும் அறியலாம்.[50] இவ்வாறு தாக்கமுறும் நபர்கள் தனி மரபனையோ பல மரபன்களையோ தமக்குள் பொதுவாகப் பெற்றிருக்கலாம். சில நேர்வுகளில், குடும்பங்களுக்குள் ஒரு நபரைப் போலவே பிற குடும்ப உறுப்பினருக்கும் ஒரேவகை வெண்குருதிப்புற்று ஏற்படலாம்; வேறு சில குடும்பங்களில், தாக்கமுறும் நபருக்கு வரும் புற்றில் இருந்து வேறுபட்ட பலவகை வெண்குருதிப்புற்றுகளோ அல்லது அவை சார்ந்த வேறு குருதிப்புற்றுகளோ ஏற்படலாம்.[50] மரபியல் சிக்கல்களோடு, குறுமவக இயல்பின்மைகள் அல்லது குறிப்பிட்ட பிற மரபியல் நிலைமைகளைக் கொண்டவர்கள், வெண்குருதிப்புற்றுக்கு மேலும் கூடுதலான இடர்நேரும் வாய்ப்புள்ளவர்களாக அமைகின்றனர்.[51] எடுத்துகாட்டாக, டவுன் நோய்த்தொகை உள்ளவர்கள் கடும் வென்குருதிப்புற்று உருவாவதற்குக் கணிசமான உயரிடர் வாய்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்குக் குறிப்பாக கடும் எலும்புநல்லி வெண்குருதிப்புற்று ஏற்படலாம். பாங்கோனி சோகை உள்ளவர்களுக்குக் கடும் எலும்புநல்லி வெண்குருதிப்புற்று உருவாவதற்கான இடர்க்காரணி அமைகிறது.[50] SPRED1 மரபனோடு தொடர்புள்ள மரபியல் ஏற்பாடு சிறுவருக்கு வெண்குருதிப்புற்றை உருவாக்குகிறது.[56] நாட்பட்ட எலும்புநல்லி வெண்குருதிப்புற்று பிலடெல்பியா குறுமவகத்தோடு உறவுள்ளதாக அமைகிறது; இந்நோயுள்ள 95% பேர் பிலடெல்பியா சடுதிமாற்றத்திக் கொண்டுள்ளனர். என்றாலும், இந்நிலைமை பிற வெண்குருதிப்புற்றுகளிலும் காணப்பட்டுள்ளது.[57][58][59][60] மின்னணுவாக்கமுறாத கதிர்வீச்சுமின்னணுவாக்கமுறாத்ஹ கதிர்வீச்சு வெண்குருதிப்புற்றை உருவாக்குகிறதா இல்லையா என்பது பற்றிய ஆய்வு பல பத்தாண்டுகளாகவே நடந்துவருகிறது. பன்னாட்டுப் புற்றாய்வு நிறுவனப் பணிக்குழு மின்னாக்கம், மினசெலுத்தம், மின்பகிர்மான அமைப்புகள் உருவாக்கும் நிலைமின், மீத்தாழ் அலைவெண் மின்காந்த ஆற்றல் சார்ந்த தரவுகளை மீள்பார்வையிட்டது.[61] அவர்கள் மீத்தாழ் அலைவெண் மின்காந்தப் புலங்களின் உயர்செறிவு சில நேர்வுகளில் சிறுவர்களுக்கு வெண்குருதிப்புற்றை உருவாக்குதலுக்கான சான்றுகள் மிகவும் அருகியே அமைகின்றன எனும் முடிவுக்கு வந்துள்ளனர்.[61] வெண்குருதிப்புற்றுக்கோ பிறவகைப் புற்றுகளுக்கோ அகவை முதிர்ந்தவர்கள் ஆட்பட எவ்வகை சான்றுகளும் இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர்.[61] இத்தகைய மீத்தாழ் அலைவெண் மின்காந்தப் புலங்களுக்கு ஆட்படும் சூழல் மிக அருகியே நடப்பில் அமைவதால், , உலக நலவார்வு நிறுவனம் அத்தகையய மீத்தாழ் அலைவெண் ஆட்பாடு காரணமாகக் பின்னர் கண்டறியப்பட்டாலும் கூட அந்நிலைமை உலகளாவியநிலையில் ஓராண்டுக்கு 100 முதல் 2400 வரையிலான நேர்வுகளே அமையும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இது மொத்த புற்றாக்க நேர்வுகளில் 0.2 முதல் 4.9 ஆகவே அமைந்திருக்கும் எனவும் சுறுவர்களுக்கான வெண்குருதிப்புற்றாக்க நேர்வுகளில் 0.03 முதல் 0.9% ஆகவே அமையும் எனவும் கூறியுள்ளது.[62] நோயாற்றுதல்வெண்குருதிப்புற்று நோயின் பல வகைகளுக்கு மருந்து வழியே மருத்துவம் அளிக்கப்படுகிறது. சில வகைகளுக்கு கதிர்வீச்சு மருத்துவமும் அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் எலும்புநல்லி மாற்றறுவையும் நோயாற்றப் பயன்படுகிறது. கடும் நிணநீர்முகை வெண்குருதிப் புற்றுநோய்கடும் நிணநீர்முகை வெண்குருதிப் புற்றின் மேலாண்மை எலும்புநல்லிக் கட்டுபாட்டிலும் முற்றுடல் நோயைத் தீர்ப்பதிலும் நெறிப்படுத்தப்படுகிறது. கூடுதலாக, வெண்க்ருதிப் புற்றைத் தவிர்க்கும் மருத்துவம் வெண்குருதிக்கலங்கள் உடலின் பிற களங்களை அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்; குறிப்பாக, மைய நரம்பு மண்டலத்தை அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எடுத்துகாட்டாக, அடிமுதுகு முள்ளெலும்புத் துளைகளை ஒவ்வொரு மாதமும் இட்டு வெண்குருதிக் கலங்கள் பரவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பொதுவாக இவ்வகை புற்றுக்கான மருத்துவம் பின்வரும் பல கட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது:
நாட்பட்ட நிணநீர்ம வெண்குருதிப் புற்றுநோய்(சிஎல்எல்)மருத்துவம் செய்ய முடிவெடுத்தல்குருதியியலாளர்கள் நாட்பட்ட நிணநீர்க்கல வெண்குருதிப்புற்றை நோயாற்ற முனையும்போது நோய்க்கட்டம், தனியருக்கு நோய் விளைவித்துள்ல அறிகுறிகள் இரண்டையும் கருதுகின்றனர்ரிந்நோய்க்கு ஆளாகும் பெருவாரியான மக்கள் தாழ்நிலை நோய்க்கட்டத்திலேயே விளங்குகின்றனர். இவர்களை நோயை ஆற்றுதல் அரியத்ஹாகவே உள்ளது. மிகவும் முதிர்நிலைச் சிக்கல்களைக் கொண்ட தனியர்களே நோயை ஆற்று மருத்துவத்தால் நல்ல பலன்களப் பெறுகின்றன. பொதுவாக, மருத்துவம் செய்ய வேண்டியதற்கான சுட்டிகளாக பின்வருவன அமைகின்றன:[சான்று தேவை]
நோயாற்றும் அணுகுமுறைபெரும்பாலான நாட்பட்ட நிணநீர்க்கலப் புற்றுகளை முற்றிலுமாக நோயாற்றல் அரிதாகவே உள்ளது; எனவே, நோயை முழுமையாக ஆற்றுவதை விட, பல ஆண்டுகள் வரை நோயைத் தணிப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கான முதன்மை வேதிம மருத்துவம் அதன் பன்முகச் சேர்மானங்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. நோயாற்ற, குளோராம்புசில்(chlorambucil) அல்லது சைக்ளோபாசுப்பாமைடு(cyclophosphamide) தருவதோடு உடன் பிஎர்டுனிசோன்(prednisone) அல்லது பிரெடினிசோலோன்(prednisolone) போன்ற இயக்க ஊக்கி நீர்மங்கள் ஆகியனவும் தரப்படுகின்றன.ஈயக்க ஊக்கி நீர்மங்களின்(corticosteroid) பயன்பாடு, இப்புற்று சார்ந்த, சில தானே நோயெதிர்க்கும் நோய்களை அடக்கிவைக்கும் கூடுதல் நன்மைகளைத் தருகிறது. இத்தகைய தானே நோயை எதிர்க்கும் நோய்களில் தன் நோயெதிர்ப்புக் குருதிச்சிதைவுச் சோகை அல்லது கரண்மிலி குருதித் தட்டக்குறை அடங்கும். எதிர்ப்புதரும் நேர்வுகளில், தனி முகமை மருத்துவ முறைகள் பயன்படுகின்றன. இதற்குப் புளூடாரபைன்(fludarabine),[65] பென்ட்டோசுட்டேட்டின்(pentostatin), அல்லது கிளாடிரிபைன்(cladribine) போன்னுட்கருவன் வகை மருந்துகள் வெற்றிகரமாகத் தரப்படுகின்றன. நல்ல உடல்கூறுள்ள இளையோருக்கு முற்றிலுமாக நோயகற்ற, மாற்று மரபன்வழி அல்லது தன்னின ஒட்டுவழி எலும்புநல்லி மாற்றறுவை அல்லது பதிலீடு மேற்கொள்ளப்படுகிறது.[66] கடும் எலும்புநல்லியக வெண்குருதிப் புற்றுநோய் (ஏஎம்எல்)கடும் எலும்புநல்லி வெண்குருதிப்புற்று நோயாற்ற பல்வேறு புற்றெதிர்ப்பு மருந்துகள் நல்ல விளைவுகளை ஈட்டுகின்றன. நோயாற்றுதல் நோயாளியின் அகவையைப் பொறுத்தும் ஆட்பட்டுள்ள நோய்வகைகளைப் பொறுத்தும் மாறுகிறது. ஒட்டுமொத்தத்தில்லிதற்கான நோயாற்றும் செயல்நெறியாக, எலும்பு நல்லியை அல்லது முற்றுடல் நலத்தை நோக்கியதாக அமைகிறது. நோயோடு மைய நரம்பு மண்டலம் உள்ள்டங்கினால், அதற்கான சிரப்பு நோயாற்றும் முறைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.[67] பொதுவாக, தொடக்கநிலை வேதிம மருத்துவத்தின் தூண்டல் கட்டத்தில் பெரும்பாலான புற்றுநோய் மருத்துவர்கள் பல மருந்து சேர்மான முறையையே நம்பியுள்ளனர்.ஈத்தகைய பல மருந்துச் சேர்மான முறை வழக்கமாக தொடக்கநிலை நோய்த்தணிப்புக்கு உதவுவதோடு குறைவான இடருள்ள நோய்த் தடுப்புக்கும் உதவுகிறது. நோய் மீளாமல் இருக்க, திரள்நிலை, பேணுதல் மருத்துவ முறைகல் கடைபிடிக்கப்படுகின்றன.திரள்நிலை மருத்துவம் தூண்டல்முறை வேதிம மருத்துவத்தையே மீண்டும் தொடர்கிறது அல்லது கூடுதல் மருந்துகளைப் பயன்படுத்தி வேதிம மருத்துவத்தை செறிவாக்குகிறது. மாறாக, பேணுதல்முறை மருத்துவம் I தூண்டல் கட்டத்தில் தரப்பட்ட மருந்தளவுகளை விடக் குறைவாகவே பயன்படுத்துகிறது.[68] நாட்பட்ட எலும்புநல்லி வெண்குருதிப் புற்றுநோய்(சிஎம்எல்)நாட்பட்ட எலும்புநல்லியக வெண்குருதிப்புற்றுகளுக்கான பலவகை நோயாற்ரல் முறைகள் உள்ளன; ஆனால், புதிதாக நோயறியப் பட்டவர்களுக்குப் பின்பற்றப்ப்படும் செந்தர நோயாற்றல் முறையாக, இமாட்டினிபு(imatinib) (கிளீவெக்) தருதலே அமைகிறது.[69] பெரும்பாலான புற்றுத்தடுப்பு மருந்துகளோடு ஒப்பிடும்போது, இம்முறையில் அரிய பக்க விளைவுகலே ஏற்படுவதோடு இதை வீட்டிலேயே வாய்வழியாகவும் உட்கொள்ளலாம். இம்முறை குறைந்தது ஐந்தாண்டுகள் வரை 90% மக்களுக்கு நோயத் தணிக்க அல்லது கட்டுபாட்டுக்குள் வைக்க உதவுகிறது,[69] இதனால், இந்நோயை எளிதாக நெடுங்காலத்துக்குச் சமாளிக்க கூடியதாக அமைகிறது. மேலும் முன்னேறிய, கட்டுபாடற்ற நிலையில், இமாட்டினிபு மருந்தைத் தாங்கவியலாத போதும் அல்லது நிலையாக நோயை அகற்ற விழையும் போதும், மாற்றுமரபியல் எலும்புநல்லிப் பதிலீட்டுமுறையைப் பின்பற்றலாம். இந்தச் செயல்முறையின்போது உயரளவு வேதிம மருத்துவமும் கதிர்வீச்சு மருத்துவமும் மேற்கொண்டு, பின்னரே, தகுந்த கொடையாளிவழி கிடைக்கும் எலும்புநல்லியையும் உட்செலுத்தலாம். Approximately 30% of people die from this procedure.[69] முடிக்கல வெண்குருதிப்புற்றுகள்நோயாற்ற முடிவெடுத்தல் அறிகுறி ஏதும் இல்லாத முடிக்கல வெண்குருதிப் புற்றுளவர்களுக்கு வழக்கமாக மருத்துவம் உடனடியாக மேற்கொள்வதில்லை. கணிசமாக அன்றாட வாழ்வைக் குலைக்கும் குறைந்த குருதிக்கல எண்ணிக்கை( தொற்றோடு போராடும் பன்முனை வெண்குருதிக்கலங்களின் எண்ணிக்கை 1.0 அளவினும் குறைதல்), அடிக்கடி தொற்றுக்கு ஆட்படல், விளக்கவியலாத காயங்கள், சோகை, அயர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.[70] உகந்த நோயாற்றுதல் அணுகுமுறை மருத்துவம் தேவைப்படும் நோயாளிகள் வழக்கமாக ஒரு வார காலத்திற்கு ஒவ்வொரு நாளும் கிளாடிரிபைன் மருந்து உட்செலுத்தப்படலாம் அல்லது தோலுக்கு அடியில் ஒரு ஊசிவழி உட்செலுத்தப்படலாம்; அல்லது ஆறு மாதங்களுக்கு, ஒவ்வொரு நான்கு வார கால இடைவெளியிலும் பெண்டோசுட்டாட்டின் குருதிகுழல் வழியாகச் செலுத்தலாம். பெரும்பான்மையானவர்களில், ஒரு முறை இந்த மருத்துவத்துக்கு ஆட்படுவதே நீண்ட காலத்திற்கு நோயைக் குறைத்து விடுகிறத.[71] மற்ற மருத்துவங்களில், ரிடுக்சிமாப் மருந்தை உட்செலுத்துதல் அல்லது தானே இண்டர்ஃபெரான்-ஆல்ஃபா ஊசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவை உள்ளடங்கும். குறைந்த அளவு நோயாளிகளில், மண்ணீரலை அகற்றுதலும் பலனளிக்கலாம். மற்ற நோய்த்தணிப்பு முறைகள் முதலில் பின்பற்றபடுவதில்லை, காரணம் அவை வெற்றி பெறும் வீதம், கிளாடிரிபைன் அல்லது பெண்டோசுட்டாட்டினை விடக் குறைவாகவே உள்ளது.[72] டி- உயிர்க்கல முந்துநிலை நிணநீர்ம வெண்குருதிப் புற்றுநோய் (டி-பிஎல்எல்)மிகவும் அரிதானதும், முனைப்பானதும் சராசரியாக ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாகவே உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ள இவ்வகை வெண்குருதிப் புற்றுநோயாளிகளில் பெர்ம்பாலானவருக்கு உடனடி மருத்துவம் தேவைப்படும்.[73] இந்நோய்க்கு மருத்துவம் செய்வது மிகக் கடினம். காரணம் தற்போது கிடைக்கப் பெறும் பெரும்பான்மையான வேதிம மருத்துவ மருந்துகளுக்கு இது சரியாகத் துலங்கி, நோயாற்றுவதில்லை.[73]. குறிப்பிட்ட நோயாளிகளுக்கு பல வகையான நோயாற்றுதல் முறைகள் குறைந்த அளவு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன: பியூரைன் அனலாகஸ் (பெண்டோஸ்டாடின், ஃப்ளூடார்பைன், க்ளாட்ரிபைன்), குளோராம்புசில்) போன்ற பல வகைக் கூட்டு வேதியியல் மருத்துவங்களான (சைக்ளோஃபாஸ்ஃபமைட், டாக்சோருபிசின், விங்க்ரிஸ்டைன், ப்ரிட்னிசோன், (சிஹெச்ஓபி)வகையும் சைக்ளோஃபாஸ்ஃபாமைட், விங்க்ரிஸ்டைன், ப்ரிட்னிசோன் (சிஓபி) வகையும் (விங்க்ரிஸ்டைன், டாக்சோருபிசின், ப்ரிட்னிசோன், எடோபிசைட், சைக்ளோஃபாஸ்ஃபாமைட், ப்ளெயோமைசின்) (விஏபிஈசி-பி) வகையும் கையாளப்படுகின்றன;. முன்னர் கூறப்பட்ட கூட்டு வேதிம முறைமைகளை விட வெற்றிகரமாக ஆலெம்டுஜுமாப் (காம்பத்) என்னும் வெள்ளை கலங்களைத் தாக்கும் ஓர் ஒற்றைக்கல நோயெதிர்ப்புப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.[73] வேதிம மருத்துவத்துக்குச் சிறந்த முறையில் துலங்கி, நோயாற்றப்படும் நோயாளிகளில் சிலர் தங்கள் பயனைத் திரட்டிக் கொள்ள தண்டுவட மாற்று அறுவைக்கும் ஆட்படுவதுண்டு.[73] இளையோர் எலும்புநல்லி ஒற்றைக்கல வெண்குருதிப் புற்றுகள்இளையோர் எலும்புநல்லி ஒற்றைக்கல வெண்குருதிப் புற்று நோயாற்ற, மண்ணீரல் அகற்றலும் வேதிம மருத்துவமும் எலும்புநல்லி மாறறறுவையும் மேற்கொள்ளப்படுகின்றன.[74] பற்கள்பல்மருத்துவத்துக்கு முன் நோயாளியின் உடலியல் மருத்துவரைக் கலந்துகொள்ளவேண்டும். பல்மருத்துவம் வேதிம, கதிர்வீச்சு மருத்துவத்துக்கு முன்னரே மேற்கொள்ளப்படல் வேண்டும். நோயில் இருந்து மீன்டவர்களுக்கு இயல்பான பல்மருத்துவ முறையைக் கையாளலாம்.[75] முன்கணிப்புமருத்துவ வெற்றி நோயாளி அகவையையும் வெண்குருதிப் புற்றின் வகையைப் பொறுத்தும் அமைக்கிறது. வள்ர்ந்த உலகில் விளைவுகள் நன்றாக உள்ளன.[10] ஐக்கிய அமெரிக்காவில் சராசரி ஐந்தாண்டு பிழைப்பு வீதம் 65% ஆக அமைகிறது.[4] 15 அகவைக்கும் குறைந்த சிறுவர்களில் சராசரி ஐந்தாண்டு பிழைப்பு வீதம் 60 முதல் 85% அளவுக்கும் கூடுதலாக வெண்குருதிப் புற்றுவகையைப் பொறுத்தமைக்கிறது.[13] கடும் வெண்குருதிப்புற்றில் இருந்து ஐந்தாண்டுகள் வரை விடுபட்டு இருந்த சிறுவர்களுக்கு இப்புற்றுநோய் மீள்வதில்லை.[13] வெற்றி விளைவுகள் கடுமையானதா அல்லது நாட்பட்டதா என்பதையும் குறிப்பிட்ட இயல்பிகந்த வெண்குருதிக் கலங்களின் வகையையும் நிலவும் சோகையின் முனைப்பையும் சார்ந்துள்ளன; மேலும், வெற்றி விளைவுகள் குருதித் தட்டக்குறை, நோயின் இடமாறல்நிலை,இழைய இயல்பின்மையின் அளவு, நிணநீர்க்கல, எலும்புநல்லி ஊடுறுவல், மருத்துவமுறைகளை அணுக இயலுமை, உடல்நலக் குழுவின் திறமை ஆகியவற்றையும் பொறுத்துள்ளன. பாரிய பட்டறிவுள்ள பெரிய மருத்துவமனைகளில் செய்யப்படும் மருத்துவம் நல்ல வெற்றிவிளைவுகளைத் தருகிறது.[76] நோய்ப்பரவல்![]() 0-7 8-13 14–22 23–29 30–34 35–39 40–46 47–64 65–85 86–132 உலகளவில் 2010 இல் தோராயமாக 281,500 பேர் வெண்குருதிப் புற்றால் இறந்துள்ளனர்.[77]> 2000 ஆம் ஆண்டில் தோராயமாக 256,000 பேர் சிறுவர்களும் அகவை முதிர்ந்தவர்களும் ஏதாவதொரு வெண் குருதிப் புற்று நோய்க்கு ஆபட்டனர். இவர்களில் 209,000 இறந்துவிட்டனர்.[78] இது அந்த ஆண்டில் புற்றால் இறந்த 7 மில்லியன் பேரில் 3% ஆகும்.அனைத்து நோய்களாலும் இறந்தவர்களில் 0.35% ஆகும்.[78] உடலின் 16 வேறுபட்ட களங்களில் இறந்தவரை ஒப்பிடுகையில் வெண்குருதிப் புற்று அனைத்து புதுக்கணிகவகை இறப்புகளில் 12 ஆவதாகவும் அனைத்துப் புற்று சார்ந்த இரப்புகளில் 11 ஆவதாகவும் அமைகிறது.[78] வெண் குருதிப்புற்று வளர்ந்த நாடுகளில் மிகப் பரவலாக ஏர்படுகிறது.[79] ஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்காவில் 245,000 பேர் ஏதாவதொரு வெண்குருதிப் புற்றால் இறந்துள்ளனர். இவர்களில் மீள நோயுற்றவர்களும் முற்றிலும் நலமடைந்தவர்களும் அடங்குவர்றீறப்பு வீதம் 1975 முதல் 2011 வரை ஒவ்வோராண்டும் 0.7% வீத அளிவில் தொடர்ந்து சிறுவர்களில் ஏற்பட்டுள்ளது.[80] இங்கு 2008 ஆம் ஆண்டில் தோராயமாக 44,270 பேருக்கு புதிய புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.[81] இத்தொகை எளிய அடிப்படைக் உயிர்க்கலவகையையும் தோல் புறணிப் புற்றுவகையையும் சேர்க்காமல் பிற புற்றுவகைகளில் 2.9% ஆகவும் அனைத்துக் குருதிப் புற்றுகளிலும் 30.4% ஆகவும் அமைகிறது.[82] சிறுவர்களைத் தாக்கும் புற்று வடிவங்க்ளில், மூன்றில் ஒரு பங்கு கடும் நிணநீர்முகை வெண்குருதிப்புற்றே மிகப் பரவலாக அமைகிறது.[81] குழந்தைகளைப் பன்னிரண்டு மாதங்களில் தாக்கும் இரண்டாவதான புற்றாகவும் அதர்கும் மேல் அகவைமுதிர் சிறுவர்களில் மிகப் பரவலாக அமையும் புற்றாகவும் வெண்குருதிப்புற்றே அமைகிறது.[83] சிறுமிகளை விட இது ஆண்சிறுவர்கலையே பெரிதும் தாக்குகிறது; கருப்பு அமெரிக்கச் சிறுவர்களை விட வெள்ளை அமெரிக்கச் சுறுவர்களையே இது கூடுதலாகத் தாக்குகிறது.[83] அகவை முதிர்ந்தவர்களில் புற்று நோய் கண்டறியப்பட்டவர்களில் 3 சதம் மட்டுமே வெண்குருதிப் புற்றுநோய் கொண்டுள்ளனர்.ஆனால், புற்று நோய் அகவை முதிர்ந்தவர்களிடம் அதிகமாக உள்ளது என்பதால், வெண்குருதிப் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 90 சதத்திற்கும் மேல் அகவை முதிர்ந்தவர்கள்தாம்.[81] ஐக்கிய அமெரிக்காவில் இனம் ஓர் இடர்க்காரணியாக உள்ளது. 20 அகவைக்கு குறைவான இசுபேனிக்குகளே வெண்குருதிப்புற்றால் தாக்கமுறும் உயர் இடர்கொண்ட வெள்லை மக்களாக உள்ளனர்;ளஆப்பிரிக்க இனத்தவர்கலை விட அமெரிக்கத் தாயக இனத்தவரும் ஆசிய அமெரிக்கரும் அலாசுக்கா தாயக இனத்தவரும் இப்புற்றால் தாக்கமுறும் உயர் இடரைப் பெற்றுள்ளனர்.[84] பெண்களைவிட ஆண்களே வெண்குருதிப்புற்று நோய்க்கு பேரளவில் ஆட்படுவதோடு நோயால் இறந்துவிடுகின்றனர். 30% அளவுக்கும் கூடுதலான ஆண்களே பெண்களை விட வெண்குருதிப் புற்றுக்கு ஆட்படுகின்றனர்a.[85] ஐக்கிய இராச்சியம்ஐக்கிய இராச்சியத்தில் ஒட்டுமொத்தமாக, வெண்குருதிப் புற்று 11 ஆவதாக மிகவும் பரவலாக இறக்கும் புற்றாகும்( 2011 இல் 8,600 பேர் இந்நோயால் இறந்ததாகக் கண்டறியப்பட்டது); அனைத்துவகைப் புற்றுகளாலும் மிகப் பரவலாக இறந்தவர்கள் 9 ஆவதாக அமைகின்றனர்(2012 இல் 4,800 பேர் இவ்வகையில் இறந்துள்ளனர்).[86] சமூகமும் பண்பாடும்சுசான் சோந்தாகு கூற்றுப்படி, இருபதாம் நுற்றாண்டு புனைகதைகள் குருதி வெண்புற்றைக் காதல்புனைவுக்குப் பேரளவில் உருக்கமான நிகழ்ச்சிகளை அமைக்கப் பயன்படுத்துகின்றனர். இந்நோயுள்ள இளைஞர் அகாலத்திலேயே வெள்ளந்தியாக இன்பியல் முடைவை அடையும் தூய நோயாக இதைப் படம்பிடிக்கின்றனர், எனவே,என்புருக்கி நோய்க்குப் பின் பயன்படுத்தும் பண்பாட்டு வாரிசாக அமைகிறது. இதற்கு முன் இத்தொற்றுநோய் கண்டறியாதபோது என்புருக்கி நோயே இந்தகனவுலகை ஆட்கொண்டிருந்தது.[87] குருதிவென் புற்றுக் கனவுலகப் புதினமாக 1970 ஆம் ஆண்டைய காதல்கதை எனும் புதினம் விளங்கிஅது.[88] அமெரிக்காவில் இந்நோய்க்கு ஓர் ஆண்டில் 5.4 பில்லியன் டாலர்கள் செலவாகிறது.[89] ஆராய்ச்சிகுருதி வெண்புற்றுக்கான காரணங்கள், நோய்நிலவல், நோயறிதல், நோயாற்றல், நோய் முன்கணித்தல் தொடர்பாக கணிசமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தொடர்ந்து எப்போதுமே நூற்றுக் கணக்கான மருத்துவ ஆய்வுகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.[90] இவ்வகையிலான ஆய்வுகள் திறனுள்ள நோயாற்றல் முறைமைகள், நோயாற்றலுக்கான இன்னும் சிறந்த முறைமைகள், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழிகள் அல்லது நோயின் கடுமையைக் குறைப்பதற்கான உகந்த கவனிப்பு, நோயாற்றிய பின்னான கவனிப்பு எனப் பல பிரிவுகளிலும் கவனம் செலுத்துகின்றன.[சான்று தேவை] பொதுவாக, குருதி வெண்புற்று ஆராய்ச்சிகள் மருத்துவமனை/செயல்முறை ஆராய்ச்சிகள், அடிப்படை ஆராய்ச்சிகள் என இருவகைப்படும். மருத்துவமனை/செயல்முறை ஆராய்ச்சிகள் பொதுவாக உடனடியாக பயன்கொள்ளும் வகையில் வரையறுத்து புது மருந்தகளைக் கையாளுவதற்கேற்ப நோயாய்வில் கவனத்தைக் குவிக்கின்றன. மாறாக,காடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள் நெடுநோக்கிலேயே நோயாய்வை மேற்கொள்கின்றன. இவை ஒரு குறிப்பிட்ட புற்றாக்கி, ஆய்வக நிலைமைகளில் குருதிப் புற்று மாற்றங்களை எப்படி தனி உயிர்க்கலங்களில் உருவாக்குகின்றன அல்லது நோய் வளர்ச்சியின்போது குருதிப் புற்றுக் கலங்களில் எப்படிப்பட்ட மரபன்மாற்றங்களைப் புற்றாக்கிகள் விளைவிக்கின்றன என்பன போன்ற ஆய்வுகளை மேற்கொள்கின்றன. இந்த இரண்டாம் வகை ஆராய்ச்சிகள் பொதுவாக, நோயைத் தீர்ப்பதற்கான உடனடி நடைமுறைப் பயன்பாடுகளை நோக்கியமைவதில்லை.[91] நடப்பில் மரபன் மருத்துவ முறை தற்போது நோயாற்ர மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற ஓர் அணுகுமுறையில் மரபனைத் தீருத்திய டி-உயிர்க்கலங்கள் புற்றுக்கலங்களைத் தாக்கியழிக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை உயிர்க்கலங்கள் புற்று எதிர்ப்பொருள் ஏற்பி டி-உயிர்கலங்கள் அல்லது கார் (CAR) டி-உயிர்க்கலங்கள் எனப்படுகின்றன. 2011 இல், அதாவது மருத்துவம் மேற்கொண்ட ஓராண்டுக்குப் பிறகு, மிக முன்னேறிய நாட்பட்ட நிணநீர்க்கல குருதிவெண் புற்றுள்ள மூவரில் இருவர் புற்று நோயற்றிருத்தல் அறிவிக்கப்பட்டது;[92] அதேபோல, 2013 இல் கடும் நிணநீர்க்கல குருதிவெண் புற்றுள்ள ஐவரில் மூவர் ஐந்து மதங்களில் முதல் இரண்டாண்டு வரை புற்றுநீக்கம் பெற்றிருதமை அறிவிக்கப்பட்டது.[93] இதற்குப் பிறகு நிகழ்த்திய பலவகைக் கார் டி-உயிர்க்கலவகை ஆய்வுகள் வெற்றியோடு மேற்கொள்ளப்பட்டன.[94] 2018 ஆம் ஆண்டில் இரண்டு கார் டி-உயிர்க்கல மருத்துவங்களுக்கு உணவு, மருந்து ஆட்சித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. கார்-டி உயிர்க்கல மருத்துவம் கணிசமான பக்க விளைவுகளையும் [95] கார்-டி உயிர்க்கலங்களின் இலக்காக அமையும் எதிர்ப்பொருள் இழப்பையும் விளைவிக்கிறது. இது பொதுவாக நோயை மீட்டுவிடும் இயங்கமைப்பாகிறது.[94] Tபலவக வெண் குருதிக்கலப் புற்றுகளை உருவாக்கும் முகிழ்நிலை உயிர்க்கலங்களின் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.[96] கருத்தரித்தல்குருதி வெண்புற்று கருத்தரிப்பின்போது மிக அருகியே, குறிப்பாக 10,000 பேரில் ஒருவருக்கே ஏற்படுகிறது.[97] இந்நிலையில் நோயாற்றும் முறை குருதி வெண்புற்றின் வகையைப் பொறுத்தே அமைகிறது. கருத்தரிப்பில் அமையும் அனைத்துக் குருதி வெண்புற்ருகளுமே பெரும்பாலும் கடுமையான வகையினவாகவே உள்ளன.[98] கருவழிவையும் பிறவிநிலைக் குறைபாடுகலையும் தவிர்க்க, கடும் வெண்குருதிப் புற்றுக்கு உடனடியான, முனைப்புமிக்க நோயாற்றல் நுட்பத்தை வழக்கமாகக் கையாளவேண்டும்; இதற்குச் சிறப்பாக, வளர்ச்சிக் கூருணர்வு மிக்க முதல் மும்மாதப் பருவத்தில் வேதிம மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.[97] நாட்பட்ட எலும்புநல்லியக வெண்குருதிப் புற்றை இன்ட்டெர்பெரான் ஆல்பா வகை இசைமங்களைத் தந்து கருத்தரிப்பின் எந்தப் பருவத்திலும் காப்பாக நோயாற்றலாம்.[97] கருத்தரிப்பில் மிக அருகியே வரும் நாட்பட்ட நிணநீர்க்கல வெண்குருதிப் புற்றை நோயாற்றுதலை கருத்தரிப்பின் இறுதிக் கட்டம் வ்வரையும் கூட ஒத்திப்போடலாம்.[97][98] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia