இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகம்
இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் (Rani Lakshmi Bai Central Agricultural University) என்பது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக் கழகம் இந்தியப் நாடாளுமன்றம் இயற்றிய, இராணி இலட்சுமி பாய் மத்திய விவசாய பல்கலைக்கழக சட்டம்-2014 மூலம் தோற்றுவிக்கப்பட்டது.[1] இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்வி ஆண்டு ஜூலை 2014 முதல் தொடங்கியது. பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பருவங்கள் கொண்ட பருவ முறையைப் பின்பற்றுகிறது.[2][3] வரலாறுபுந்தேல்கண்ட் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரிடம் இப்பகுதியில் விவசாய பல்கலைக்கழகம் அமைக்க ஜூலை 2009 மனுவினை நேரில் வழங்கினர். இதன் தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முதல் சட்டம் 28 டிசம்பர் 2011 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தெளிவுபடுத்தல், மறு அறிமுகம், குழுவின் அறிக்கை மற்றும் வேளாண் ஆராய்ச்சித் துறையின் பதிலுக்குப் பிறகு, "இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகச் சட்டம்" இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு மார்ச் 5, 2014 அன்று வெளியிடப்பட்டது.[4] வளாகம்ஆரம்பக் காலத்தில் பல்கலைக்கழகம் தற்காலிகமாக ஜான்சியில் உள்ள இந்தியப் புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல்பட்டது.[3] கல்விபல்கலைக்கழகம் 2014-2015 கல்வியாண்டிலிருந்து வேளாண்மையில் இளங்கலை அறிவியல் படிப்பினைத் தொடங்கியுள்ளது.[3] பல்கலைக்கழகத்தின் தலைமையகம் ஜான்சியில் புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர், டாமோ, டாடியா, பன்னா, சாகர் மற்றும் திகம்கர் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பண்டா, சித்ரகூட், ஹமிர்பூர், ஜலான், ஜான்சி, லலித்பூர் மற்றும் மஹோபா உள்ளிட்ட ஏழு மாவட்டகள் இப்பல்கலைக்கழ்க ஆளுமையின் கீழ் வருகின்றன. . இப்பல்கலைக்கழகம் வெவ்வேறு உறுப்புக் கல்லூரிகளை இப்பகுதியில் நிறுவியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் விவசாயக் கல்லூரி, தோட்டக்கலை மற்றும் வனவியல் கல்லூரியும் மத்தியப் பிரதேசத்தில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி, மீன்வளக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia