இருநிக்கோட்டினிக்கு அமிலம்
இருநிக்கோட்டினிக்கு அமிலம் (Dinicotinic acid) என்பது C7H5NO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிரிடின்-3,5-இருகார்பாக்சிலிக்கு அமிலம் என்ற பெயராலும் இந்த பல்லினவளையக் கரிமச் சேர்மம் அறியப்படுகிறது. குறிப்பாக இச்சேர்மம் ஒரு பல்லின அரோமாட்டிக்கு சேர்மம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அறியப்பட்டுள்ள பல்வேறு பிரிடின் இருகார்பாக்சிலிக்கு அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். பிரிடின் வளையத்தின் 3,5 ஆம் நிலைகளில் கார்பாக்சி குழு இணைந்திருப்பது இதன் கட்டமைப்பாகும். தயாரிப்புபிரிடீன்-2,3,5,6-டெட்ராகார்பாக்சிலிக்கு அமிலம் அல்லது பிரிடின்-2,3,5-முக்கார்பாக்சிலிக்கு அமிலம் எனப்படும் கார்போயிருநிக்கோட்டினிக் அமிலத்தை சூடுபடுத்தினால் இருநிக்கோட்டினிக்கு அமிலம் உருவாகும்.[1][2] பண்புகள்இருநிக்கோட்டினிக்கு அமிலம் நீர் மற்றும் ஈதரில் குறைவாக கரையக்கூடியதாகும். இதன் உருகுநிலையான 323 பாகை செல்சியசு என்பது பிரிடின்யிருகார்பாக்சிலிக்க்கு அமிலங்களில் ஓர் அதிமான உருகுநிலையாக உள்ளது. சூடாக்கும்போது, இது கார்பாக்சில் நீக்கமடைந்து நிக்கோட்டினிக்கு அமிலமாகச் சிதைகிறது:[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia