இருமல்இருமல் (ⓘ) (cough) என்பது உடனடியாகவும் தொடர்ந்தும் நிகழும் காப்பு மறிவினை ஆகும். இருமல் மூச்சுயிர்ப்பு வழித்தடத்தில் உள்ள பாய்மங்கள், எரிச்சலூட்டிகள், அயற்பொருட்கள், நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது. இருமல் மறிவினையில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை மூச்சிழுப்புக் கட்டம், குரல்வளையின் முகப்பு மூடிய நிலையில் வேகமாக அமையும் மூச்சுவிடுதல் கட்டம், அடுது குரல்வளை திறந்து நுரையீரலில் இருந்து காற்றுவீச்சு வெளியேற்றக் கட்டம் என்பனவாகும். இப்போது வழக்கமாக இருமலுக்கே உரிய ஓசை எழும்பும்.[1] இருமல் இயக்கு செயலாகவோ தன்னியல்பு செயலாகவோ அமையலாம். அடிக்கடி இருமுதல் நோயின் அறிகுறியாகும். பல நச்சுயிரிகளும் குச்சுயிரிகளும் படிமலர்ச்சிக் கண்ணோட்டத்தில், ஓம்புயிரியை இருமச் செய்து நன்மை அடைகின்றன. இருமும்போது நோய் புது ஓம்புயிரிகளுக்குப் பரவுகிறது. பல்வேளைகளில், ஒழுகற்ற இருமல் மூச்சுக் குழல் தொற்றால் ஏற்படுகிறது. இது புகைத்தல், காற்று மாசுறல், மூச்சு வழித்தட அடைப்பு,[1] ஈளைநோய், இரைப்பை உணவுக்குழல் மறிவினை, மூக்கில் சொட்டு மருந்துவிடல், நாட்பட்ட மூச்சுக்குழல் அழற்சி, நுரையீரல் புற்று, இதய அடைப்பு, மருந்துகள் ஆகியவற்றாலும் கூட ஏற்படலாம். நோயை ஆற்ற நோயின் முதலைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்; எடுத்துகாட்டாக, புகைத்தலைத் தவிர்த்தல் அல்லது மருந்துகளைத் தவிர்த்தல் வழியும் இருமல் அடங்கலாம். கோடைன், டெக்சுட்ரோமெதார்பன் போன்ற இருமல் அடக்கிகளால் அவ்வளவாக பயன் ஏதும் கிடைப்பதில்லை. மற்ற சிகிச்சைகள் மூச்சுவழி அழற்சியைத் தணித்தலாகவோ கோழை அகற்றலாகவோ அமையலாம். இது இயற்கையான காப்பு மறிவினை என்பதால், காப்புதரும் இருமலை அடக்குதல் சிதைவு தரும் விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.[2] நோய் விளக்கம்கடுமை நிலைகள்பல்வேறான நோய்க் காரணிகள்தொற்றுகள்மூச்சுவழி எதிர்வினை நோய்இரைப்பை உணவுக்குழல் மறிவினைகாற்று மாசுறல்அயற்பொருள்குருதிக்குழல் சுருக்கம் மாற்றும் நொதி அடக்கிகள்உளவழி இருமல்நரம்புவழி இருமல்பிறநோய்சார் உடலியக்கவியல்![]() நலமானவரில் இருமல் காப்பு மறிவினையாகும். இது பல உளவியல் காரணிகள்லாஇல் ஏற்படலாம்.[3] இந்த மறிவினை இருவகை ஏற்பு (உள்வரும்) நரம்புகளால் ஏற்படுகிறது; இவற்றில் ஒருவகை நரம்புக் காப்புறை உள்ள வேகமாகத் தகவமையும் புலன் ஏற்பிகளாகும்; மற்றொருவகை நரம்புக் காப்புறையற்ற நுறையீரல் முடிவுறும் சி வகை நாரிழைகள் ஆகும். என்றாலும், காப்புறையற்ற சி வகை நாரிழைகள் (அதன் ஐந்து உறுப்புகளால்) உடலியக்கவியல்படி, தற்காப்பு மறிவினையாக இருமலை உருவாக்குகின்றனவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை: இத்தூண்டல் அசோ அசானிக் (asso-assonic) மறிவினையால் உயிர்க்கலங்களில் குறுனைநீக்கம் செய்யலாம் அல்லது வீக்கத்தை உருவாக்க, அது வேகமாக தகவமையும் புலன் ஏற்பிகளைத் தூண்டலாம். நோயறிதல் அணுகுமுறைஇருமல் வகை நோயறிதலுக்கு உதவுகிறது. மூச்சிழுத்தபடி கக்கும் ஒலியுள்ள இருமல் கக்குவான் இருமலாகும். பல காரணங்களால் இருமலோடு சிறிதளவு குருதிக்கசிவு ஏற்படலாம். ஆனால், கூடுதலான குருதிக்கசிவு இருந்தால் மூச்சுக்குழல் அழற்சியோ மூச்சுப் பிரிகுழல் விரிநோயோ, என்புருக்கி நோயோ, கடும்நுரையீரல் புற்றோ ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.[4] மேலும் சரியான நோயறிதலுக்கு ஆய்வக முறைகளையும் x-கதிர்களையும், நுரையீரல் செயல்திறனறி கருவியையும் பயன்படுத்தலாம்.[3] வகைபாடுஇருமலை அதன் நேர நீட்டிப்பு, பான்மை, தரம், தாக்கும் பருவம் அல்லது நேரம் ஆகியவற்றை வைத்து பிரித்து வகைபடுத்தலாம்.[3] இருமலின் நேர நீட்டிப்பு மூன்றுவாரங்களுக்கும் குறைவாக இருந்தால் உடனடிக் கடுமையானது எனவும் மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை இருந்தால் மிகக் கடுமையானது எனவும் எட்டு வாரங்களுக்கு மேலும் நீடித்தல் நாட்பட்டது எனவும் கூறப்படும்.[3] இருமல் உலர் இருமலாகவோ கூழைவரும் இருமலாகவோ அமையலாம். இருமல் இர்வில் மட்டுமோ (இது இரவு இருமல் எனப்படும்) அல்லது இரவிலும் பகலிலுமோ அல்லது பகலில் மட்டுமோ ஏற்படலாம்.[3] பன்முகப் பான்மைகள் அமைந்த இருமல்கள் நிலவுகின்றன. இவ்வகைகள் வளர்ந்தவரில் நோயறிதலுக்கு பயன்படாவிட்டாலும், குழந்தைகளுக்கு நன்கு பயன்படுகின்றன.[3] குரைத்தலைப் போன்ற இருமல் குரூப் (croup) வகை இருமலின் பொது அடையாளமாகும்,[5] staccato இருமல் கிளாமிடியா நுண்ணுயிரித் தொற்றிய நுரையீரல் அழற்சியைக் குறிக்கும்.[6] பண்டுவம் (சிகிச்சை)குழந்தைகளின் இருமலைக் குறைக்க அல்லது தவிர்க்க, இருமல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துப் பின்னரே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகளில் 50% நேர்வுகளில் சிகிச்சை தராமலே 10 நாட்களிலும் 90% நேர்வுகளில் 25 நாட்களிலும் இருமல் நின்றுவிடுகிறது.[7] அமெரிக்கக் குழந்தையியல் கல்விக்கழகம், இருமல் மருந்தின் பயன்பாடு இருமலை நிறுத்துவதற்கான சான்றுகள் இல்லை எனக் கூறுகிறது.[3] குறைந்துவரும் இருமலுக்குத் தேன் டைபீனோஐதிரமைனைத் தருவதை விடவும் ஏதுமே தராமல் இருப்பதையும் விடவும் நல்லதாக அமைதலுக்கு சான்றுகள் உண்டு.[8] என்றாலும், இது டெக்சுட்ரோமெதார்பனைவிட சிறந்ததல்ல.[8] குழந்தைகள் நாட்பட்ட குச்சுயிரித் தாக்குதலால் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சியால் விளையும் கடும் இருமலை நுண்ணுயிரித் தடுப்பு மருந்துகளையோ அல்லது இயக்க ஊக்கி மருந்துகளாகிய புறணிவகைப் (கார்ட்டிகோ) பருவகங்களை முகர்வதன் வழியாகவோ தடுத்து நிறுத்தலாம்.[3] கொள்ளைநோயியல்அமெரிக்காவில் இருமலுக்காக பலர் தொடக்க் நலவாழ்வு மருத்துவரைப் பர்க்கின்றனர்.[3] பிற விலங்குகளில்கடற்பாலூட்டிகளாகிய டோல்பின்கள் இருமுவதில்லை.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia