இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் 1978ஆம் ஆண்டு உருவான பல்கலைக்கழக சட்டத்தின் 16 ஆம் விதியின் கீழ் இயங்குகிறது. கல்விக்கான அரச பொது நிதி ஒதுக்கீடுகளை உயர் கல்வி நிறுவனங்களுக்குப் பங்கிடுவதும், உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களை குறித்த முறைமைக்கு ஏற்ப வழி நடத்துவதும் பல்கலைக்கழகங்களில் பட்டப்பயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வதுமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும். இலக்கம் 20, வார்டு இடத்தில் இதன் பணியகம் அமைந்துள்ளது. நோக்கம்உள்நாட்டு உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைமையின் உயர்தரத்தை உறுதிப்படுத்தலும், அனைத்துலக கல்வித் தரத்திற்கு ஏற்ப உருவாக்குவதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நோக்கம் ஆகும். செயல் திட்டம்இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். பணிகள்ஆணைக்குழுவின் முதன்மைச் செயற்பாடுகள்:
ஆணைக்குழு உறுப்பினர்கள்இதன் உறுப்பினர்கள் தலைவரால் நியமிக்கப்படுவர்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்தேசிய பல்கலைக்கழகங்கள்
உயர் கல்வி நிறுவகங்கள்
மேலதிக இணைப்புமேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள் |
Portal di Ensiklopedia Dunia