மத்திய இலண்டன் பகுதியில் 3 ஜூன் 2017 அன்று மூவரால் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரித்தானிய கோடைக்கால நேரப்படி 22:08 மணிக்கு இத்தாக்குதல் நடைபெற்றது. காவல் துறையினரால் தாக்குதல்தாரிகள் மூவரும் கொல்லப்பட்டனர்.[1]
தாக்குதல்
இலண்டன் பாலத்தில் சென்ற வெள்ளை நிற வாகனம் பாதசாரிகளின் மேல் மோதியது. அதிலிருந்த தீவிரவாதிகள் மூவர் பரோ சந்தைப் பகுதியில் கத்தியுடன் ஓடி இது அல்லாவுக்காக எனக் கோஷமிட்டபடி பாதசாரிகளைக் குத்தினர்.[2][3][4] இத்தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டனர் 48 பேர் காயமடைந்தனர். இலண்டன் காவல்துறை இலண்டன் பாலம் மற்றும் பரோ சந்தைப் பகுதியில் நடந்த இரு தாக்குதல் நிகழ்வுகளையும் தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்டோர்
எழுவர் கொல்லப்பட்டனர், 48 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் ஆஸ்திரேலியர் ஒருவரும் இரு நியூஸிலாந்துக்காரரும் நான்கு பிரான்ஸ் நாட்டினரும் அடங்குவர்.[5][6][7]
தாக்குதல்தாரிகள்
மூன்று தாக்குதல்தாரிகளையும் காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதல்தாரிகள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.[8]