இளஞ்சிவப்புக் காய்ப்புழு
இளஞ்சிவப்பு காய்ப்புழு (Pectinophora gossypiella) பருத்திச் செடியில் அதன் காயைத் தாக்கும் ஒரு புழுவாகும். இதன் அந்துப்பூச்சிகள் சிறிய, மெல்லிய, சாம்பல் நிறத்தில் இறக்கையுடன் இருக்கும். இதன் இளவுயிரி எட்டு இணைக் கால்களுடன் மங்கிய வெண்ணிறத்துடன் இருக்கும். [1] இதன் முதுகில் இளஞ்சிவப்பு பட்டை அமைந்திருக்கும். இளவுயிரி அரை அங்குலம் நீளம் வரை வளரும். பெண் அந்துப்பூச்சிகள் குவியல் குவியலான முட்டைகளைப் பூ மொட்டுக்கள், பூக்கள், காய்கள் ஆகியவற்றின் மேல் இடும். முட்டையிலிருந்து இளவுயிரி உணவுக்காக பஞ்சூடாக விதைகளை தாக்கும்போது பஞ்சு கறை படிந்து, பஞ்சின் தரம் குறையும். பருத்திக்கயின் பொதி நாரிழைக்கும் விதை பருத்தி விதை எண்ணெய்க்கும் பயன்படுவதால் இருவகைச் சேதங்கள் ஏற்படுகின்றன. காயின் சுற்றியுள்ள காப்புறையைளழிப்பதால் பிற பூச்சிகளும் பூஞ்சயும் எளிதாக தாக்க வழி ஏற்படுகிறது. இது ஆசியாவிற்குச் சொந்தமானது, ஆனால் தற்பொழுது உலகின் பருத்தி வளரும் பகுதிகளில் பெரும்பாலான நாடுகளில் ஊடுருவி இனமாக மாறிவிட்டது. இது 1920 களில் தென்னமெரிக்காவின் பருத்தி விளையும் பகுதிகளில் பரவியது. இது தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் பருத்தியைப் பெரிதும் தாக்கும் பூச்சியாகும்.[2] 2018 இல் ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத் துறை[3] மபந்திருத்த பீட்டி பருத்தியை அறிமுகப்படுத்தல், சூழலில் மலடாக்கிய ஆண் அந்துப் புச்சிகளை பரவவிடுதால் ஆகிய இருவகை கூட்டுமுறைகளால் ஐக்கிய அமெரிக்காவில் இந்நோயை நீக்கியதாக அறிவித்தது.[4]
அடிக்குறிப்புகள்
பொது மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia