ஈராக்டைல் அடிப்பேட்டு
ஈராக்டைல் அடிப்பேட்டு (Dioctyl adipate) என்பது CH2CH2CO2C8H17 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். டையாக்டைல் அடிப்பேட்டு என்றும் இது அழைக்கப்படுகிறது. நிறமற்று எண்ணெய் போன்ற நீர்மமாக காணப்படுகிறது. இத்துடன் 2-எத்தில்யெக்சனால், டெக்கனால், ஐசோடெக்கனால் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தொடர்புடைய ஈரெசுத்தர்கள் தயாரிக்கப்பட்டாலும் இது ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3] பிசு(2-எத்திலெக்சைல்) அடிப்பேட்டு சில நேரங்களில் தவறாக ஈராக்டைல் அடிப்பேட்டு என்று அழைக்கப்படுகிறது. பிசு(2-எத்திலெக்சைல்) அடிப்பேட்டிற்கும் (CAS # 103-23-1) DOA என்ற சுருக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நச்சுத்தன்மைஅடிப்பிக் அமிலத்தின் எசுத்தர்கள் விலங்கு மாதிரிகளில் குறைந்த கடுமையான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இதனுடன் தொடர்புடைய எத்தில் எக்சனோயேட்டின் எலிக்கான உயிர்கொல்லும் அளவு 900 மி.கி/கி.கி என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia