உடன்பாட்டு வினை எதிர்மறை வினைஉடன்பாட்டு வினை, எதிர்மறை வினை என்பன இலக்கணத்தில் பொருள் முரணிய வினைவகைகளாகும். உடன்பாட்டு வினைஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலைதான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது.[1] எடுத்துகாட்டு
போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம். எதிர்மறை வினைஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது. எடுத்துகாட்டு
என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.
இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம். கூடுதல் குறிப்புசுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும். வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும். பெயரெச்சம்
இத்தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும். எதிர்மறைப் பெயரெச்சம்
வினையெச்சம்
இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன. எதிர்மறை வினையெச்சம்
எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia