உடல் நிறை குறியீட்டெண்![]() உடல் பொருண்மைச் சுட்டெண் (Body mass index) ( உபொசு (BMI)) அல்லது குவெட்டெலெட் சுட்டெண் ஒரு தனியரின் எடைக்கும் உயரத்துக்கும் இடையில் அமையும் விகித மதிப்பாகும். உபொசு(BMI) என்பது மாந்த உடல் பொருண்மையை உடலுயரத்தின் இருபடி மதிப்பால் வகுக்கும்போது கிடைக்கும் மதிப்பாகும். இந்த மதிப்பு கிகி/மீ2 அலகில் வெளியிடப்படுகிறது. இங்கு பொருண்மை கிலோகிராம்களிலும் உயரம் மீட்டர்களிலும் அமைகிறது. உபொசு தேசிய நலவாழ்வு நிறுவனத்தின் தேசிய இதய, நுரையீரல், குருதி நிறுவன(NHLBI) அட்டவணை அல்லது பட்டியலில் இருந்து பெறப்படுகிறது. இந்த பட்டியல் பல்வேறு உபொசு வகையினங்களை நிறங்களாலோ அல்லது பொருண்மைக்கும் உயரத்துக்கும் இடையில் அமையும் சார்பின் சம மதிப்புக் கோடுகளாலோ அல்லது வரைவுகளாலோ உபொசு மதிப்பைக் கணக்கிட்டுத் தருகிறது. எடுத்துகாட்டாக, ஐக்கிய அரசில் (இராச்சியத்தில்) மக்கள் எடையை கல்(அலகு) எடையிலும் உயரத்தை அடிகளிலும் அங்குலங்களிலும் அளந்தறிவர். இழையப் பொருண்மையையும்(தசை,கொழுப்பு, எலும்பு) உயரத்தையும் சார்ந்து ஒரு தனியரை விரிந்த நிலையில் தாழெடை, இயல்பெடை, மிகையெடை, மீயெடை வாய்ந்துள்ள நிலையை வகைபடுத்த உபொசு ஏந்தான குத்துமதிப்பாகும். அகவை முதிர்ந்தோருக்கான உபொசு வகைபாடுகளாக, தாழெடை (18.5 கிகி/மீ2 அளவுக்கும் கீழ்), இயல்பெடை (18.5 முதல் 24.9 வரை), மிகையெடை (25 முதல் 29.9 வரை), மீயெடை (30 முதல் அதற்கு மேல்) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன.[1] குழுக்கள் சார்ந்த புள்ளியியல் அளவாக அல்லாமல், தனியரின் உடல்நலத்தை முன்கணிக்கப் பயன்படுத்தும்போது, உபொசு வயிற்று மீயெடையும் உயர் தசைப் பொருண்மையும் குட்டை உருவமும் உள்ள தனியருக்கு மாற்றுமுறைகளைவிடச் சில வரம்புகளைக் கொண்டுளளது. உபொசு மதிப்பு 20-25 நெடுக்கத்தை விடக் கூடுதலாக அமையும்போது, அந்த நெடுக்கத்தில் இருந்து உயர உயர, அனைத்து நேர்வு இறப்புவீதம் கூடுகிறது.[2]
வரலாறு![]() "சமூக இயற்பியல்" உருவாக்கத்தின்போது பெல்ஜிய கல்வியாளரான (வானியலாளர், புள்ளியியலாளர், சமூகவியலாளர்) அடோல்ஃப் குவெட்டெலெட் என்பவரால் உடல் பொருண்மைச் சுட்டெண்1830 ஆம் ஆண்டுக்கும் 1850 ஆம் ஆண்டுக்கும் இடையே கண்டுபிடிக்கப்பட்டது.[3] உபொசு(BMI) என்பது மாந்த உடல் பொருண்மையை உடலுயரத்தின் இருபடி மதிப்பால் வகுக்கும்போது கிடைக்கும் மதிப்பாகும் என்பதை நாட்பட்ட நோய்கள் இதழின் 1972 ஆம் ஆண்டு பதிப்பில் ஆன்செல் கீசும் அவரது குழுவினரும் வெளியிட்டனர். இவர்கள தாம் இச்சுட்டெண்ணுக்கு உடல் பொருண்மைச் சுட்டெண் (உபொசு) எனும் சொல் தொடரை உருவாக்கினர்.இந்தக் கட்டுரையில் கீசு உபொசு பொதுமான நிறைவை அளிக்காவிட்டாலும், சார்பு மீயெடையக் காட்டுவதில் பிற சார்பு பொருண்மைச் சுட்டெண்ணை விட சிறந்தது என வாதிட்டார்.[4][5][6] மேலை உலகச் சமூகங்களில் மீயெடையினர் உயர்வதால் உடல் கொழுப்புச் சுட்டெண் பற்றிய ஆர்வம் உருவாகியது. கீசு உபொசு மக்கள்தொகைக்கு உகந்ததாக இருந்தாலும் தனியருக்குப் பயன்படுத்தும்போது உகந்ததாக்க இலையென்பதைத் தெளிவாகவே மதிப்பிட்டார்ரென்றாலும், அதன் எளிமையினால், உபொசு முதனிலை நோயறிய பரவலாகப் பயன்படலானது.[7] மேலும், இடுப்புச் சுற்றளவு போன்ற கூடுதல் தகவல் மிகவும் பயன்மிக்கதாக அமைந்தது.[8] உபொசு மதிப்பு கிகி/மீ2 அலகில் வெளியிடப்படுகிறது. இங்கு பொருண்மை கிலோகிராம்களிலும் உயரம் மீட்டர்களிலும் அமைகிறது. பொருண்மை பவுண்டுகளிலும் உயரம் அங்குலங்களிலும் பயன்படுத்தினால், 703 (kg/m2)/(lb/in2) எனும் மாற்றல் காரணியால் பெருக்கப்படுகிறது. உபொசு பயன்பாட்டில் வழக்கமாக அலகுகள் ஏதும் பயன்படுத்துவதில்லை. இத்தகையவ்ருக்கான உபொசு பரிந்துரைகள் as of 2014[update] பின்வருமாறு அமைகிறது: 18.5 to 24.9 kg/m2 உகந்தநிலை எடையையும் 18.5 கீழான எடை தாழெடையையும் 25 முதல் 29.9 வரையுள்ள எடைமிகையெடையையும் 30 அளவும் அதற்கு மேலான எடை மியடையையும் காட்டுகிறது.[7][8] ஒல்லியான ஆண் தடகள வீரர் உயர் தசை-கொழுப்பு விகிதத்தைப் பெற்றிருப்பார். எனவே, இவர்களது உபொசு மதிப்பு அவர்களது உடல்- கொழுப்பு நூற்றன்வீதத்தை விட உயர்ந்திருக்கும்.[8] வகைபாடுகள்பொதுவாக உபொசு ஒரு தனியரின் இயல்பான உயரத்துக்கு ஏற்ற உடல் எடையில் இருந்து எவ்வளவு வரை விலகியுள்ளது என்பதைச் சுட்டுகிறது. எடையின் மிகை அல்லது குறைவு உடலின் கொழுப்பைக்(கொழுப்பு இழையத்தைக்) காட்டுகிறது. என்றாலும், தசைமை போன்ற பிற காரணிகளும் கூட கனிசமாக உபொசு மதிப்பைத் தீர்மாக்கின்றன ( மிகையெடை குறித்த கீழ்வரும் விவாதத்தையும் காண்க).[9] உலக நலவாழ்வு நிறுவனம்(உநநி) அகவை முதிர்ந்தோரின் உபொசு மதிப்பு 18.5 அளவுக்கும் குறைவதை தாழெடையாகக் கருதுகிறது. இந்நிலைமை ஊட்டக்குறை, உண்ணல் ஒழுங்கின்மை, அல்லது பிற உடல்நலச் சிக்கல்கலாஇக் குறிக்கிறது. அதேவேளையில் உபொசு மதிப்பு 25 ஆகவோ அதற்கு மேலாகவோ உயர்தலை மிகையெடையாகக் கருதுகிறது. மேலும், 30 ஆகவோ அல்லது அதற்கு மேலாகவோ உபொசு மதிப்பு அமைவதை மீயெடையாகக் கருதுகிறது.[1] இந்த நெறிமுறையோடு உநநி(WHO) பன்னாட்டு உபொசு வரைமதிப்புகளாக (16, 17, 18.5, 25, 30, 35, 40) ஆகியவற்றையும், மேலும் கூடுதலான நான்கு ஆசிய இடர் வாய்ப்புள்ளனவாக (23, 27.5, 32.5 and 37.5) ஆகியவற்றையும் கொள்கிறது.இந்த உபொசு நெடுக்கங்கள் புள்ளியியல் வகைபாடுகளாக மட்டுமே சரியெனலாம்.
சிறுவரும் இளைஞரும்(அகவை 2 முதல் 20 வரை)![]() ![]() சிறுவருக்கும் இளைஞருக்கும் உபொசு வேறுபட்ட வகையில் பயன்படுத்தப்படுகிறது. இது அகவை முதிர்ந்தோருக்குக் கணக்கிடுவதைப் போலவே கணக்கிடப்பட்டு பிறகு அதே அகவைக்குரிய சிறுவருக்கும் இளைஞருக்குமான வகைமை மதிப்புகளுடன் ஒப்பிடப்படுகிறது. தாழெடை, மிகையெடையுள்ள பொது வாயில்மதிப்புகளுடன் ஒப்பிடாமல், உபொசு மதிப்புகள் ஒத்த அகவை, ஒத்த பாலினச் சிறுவருக்கான நூற்றுமான விகிதங்களோடு ஒப்பிடப்படுகிறது.[10] உபொசு மதிப்பு 5 ஆம் நூற்றுமான விகிதத்துக்கும் குறைவாக இருப்பது தாழெடையாகவும் உபொசு மதிப்பு 95 ஆம் நூற்றுமான விகிதத்துக்கும் மேலாக இருப்பது மீயெடையாகவும் கருதப்படுகிறது. உபொசு மதிப்பு 85 ஆம், 95 ஆம் நூற்றுமான விகிதங்களுக்கு இடையில் அமைவது மிகையெடையாகவும் கருதப்படுகிறது.[11] பிரித்தானியாவில் நடத்திய அண்மைய ஆய்வுகள், 12 முதல் 16 ஆம் அகவை நிரம்பிய பெண்சிறாரின் உபொசு மதிப்பு அதே அகவை நிரம்பிய ஆண்சிறாரைவிடச் சராசரியாக 1.0 kg/m2 வளவுக்கு உயர்ந்த உபொசு மதிப்புடன் உள்ளதைக் காட்டுகின்றன.[12] உலகளாவிய வேறுபாடுகள்இத்தகைய, நேரியல் அளவுகோலில் அமைந்த உலகளாவிய வ்வேருபாடுகளுக்கான பரிந்துரைகள் காலத்துக்குக் காலமும் நாட்டுக்கு நாடும் வேறுபடுவதால், உலகளாவிய கிடைநிலை அளக்கை சிக்கலானதாகிறது.உலக நலவாழ்வு நிறுவனம் மிகையெடைக்குக் குறிப்பிட்டுள்ள வரம்புப் புள்ளிகளுக்குக் குறைவான நிலை உபொசு மதிப்புகளான 25 கிகி/மீ2 அளவுக்கு இரண்டாம் வகைமை நீரிழிவு நோய், பெருந்தமனித் தடிப்பு இதயக் குருதிக்குழல் நோய்களுக்கான வரம்புநிலை இடர் பல்வேறு மக்கள்தொகைகளிடையே வெவ்வேறாக காணப்படுகிறது. இந்த வரம்புநிலை இடர் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மக்கள்தொகைகளுக்கு இடையிலும் உள்மக்கள்தொகைகளுக்கு இடையிலும் கனிசமாக வேறுபட்டு அமைகிறது.[13][14] ஆங்காங்குஆங்காங்கு மருத்துவ ஆணையம் பின்வரும் உபொசு மதிப்புகளைப் பரிந்துரைக்கிறது:[15]
யப்பான்யப்பான் மீயெடை ஆய்வுக் கழக 2000 ஆம் ஆண்டு ஆய்வு பின்வரும் உபொசு வகைபாட்டு பட்டியலைத் த்ஹருகிறது:[16][17][18]
சிங்கப்பூர்சிங்கப்பூரில், உபொசு மதிப்புகள் எடைக்குப் பதிலாக நலவாழ்வு இடர்களின் மீதான வலியுறுத்தலுடன் 2005 ஆம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டன. 18.5 முதல் 22.9 வரையிலான உபொசு கொண்ட அகவை முதிர்ந்தோர் இதய நோய்,மாரடைப்பு, நீரிழிவு நோய், போன்றன உருவாவதற்கான குறைந்த இடர் உள்ளவர்களாக இருக்கின்றனர். 23 முதல் 27.4 வரையிலான உபொசு கொண்ட அகவை முதிர்ந்தோர் இதய நோய்,மாரடைப்பு, நீரிழிவு நோய், போன்றன உருவாவதற்கான இடைநிலை இடர் உள்ளவர்களாகவும், 27.5 அளவும் அதற்கும் மேலான உபொசு கொண்டவர்கள் இதய நோய்,மாரடைப்பு, நீரிழிவு நோய், வளர்சிதைமாற்ற நோய்த்தொகை போன்றன உருவாவதற்கான உயர்நிலை இடர் வாய்ப்புள்ளவர்களாகவும் கருதப்படுகின்றனர்.[19]
ஐக்கிய அரசுஐக்கிய அரசின் தேசிய நலவாழ்வு, சிறப்புக் கவனிப்புக்கான நிறுவனம் இரண்டாம் நீரிழிவு நோயைத் தவிர்த்தலை வெள்ளையருக்கு உபொசு மதிப்பு 30 இலும் ஆப்பிரிக்கக் கறுப்பருக்கும் பிரித்தானிய ஆப்பிரிக்கக் கறுப்பருக்கும், பிரித்தானியத் தெற்காசியருக்கும் பிரித்தானியச் சீனருக்கும் 27.5 இலும் தொடங்கவேண்டும் என வரையறுத்துள்ளது.[20] இங்கிலாந்தில் 1.5 மில்லியன் மக்களில் பேரளவு பதக்கூறு எடுத்து செய்த புதிய ஆய்வில் நீரிழிவு நோய் தவிர்ப்புக்குக் கீழ்வரும் உபொசு மதிப்புகளில் சில இனக்குழுக்களுக்குத் தொடங்குதல் நலம்தருகிறது என அறியப்பட்டுள்ளது:[21][22]
ஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்கத் தேசிய நலவாழ்வு நிறுவனம் 1998 இல் உலக நலவாழ்வு நிறுவன வழிகாட்டுதல்களின்படி, அமெரிக்க உபொசு இயல்பெடை/மிகையெடருபொசு வரம்பு மதிப்புகளுக்கான அளவை 27.8(ஆண்கள்) 27.3(பெண்கள்) மதிப்புகளில் இருந்து உபொசு மதிப்பு 25 அளவுக்குக் குறைத்து வரையறுத்தது. இதனால், முன்பு நலநிலையிலும் மிகையெடையிலும் இருந்த 25 மில்லியன் அமெரிக்கர்கள் மறுவரையறைக்கு உட்பட்டனர்.[23][24] இது ஓரளவுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக மிகையெடை கண்டறிதல் உயர்ந்ததையும் அதேவேளையில் எடைக்குறைப்புப் பொருள்களின் விற்பனை உயர்ந்ததையும் விளக்குகிறது. உலக நலவாழ்வு நிறுவனம் தென்கிழக்கு ஆசியர் உடல் வகைமைக்கான இயல்பெடை/மிகையெடைசார் வரம்பு உபொசு மதிப்பை 23 அளவுக்குக் குறைக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், அந்நிறுவனம் பல்வேறு உடல்வகைமைகளுக்கு மருத்துவமனை ஆய்வுவழி எழும் புதிய திருத்தங்களைச் செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறது.[25] ஐக்கிய அமெரிக்காவில் 2007 இல் நடத்திய ஒரு கள அளக்கை, அப்போது 30 அளவும் அதற்கு மேலும் உள்ள நெடுக்கத்தில் 26% மீயெடையளவுக்கு 60% அமெரிக்கர் மிகையெட்டையுடனோ மீயெடையுடனோ இருந்தமையைக். 2014 ஆண்டளவில் 37.7% அகவைமுதிர்ந்தோர் ஐக்கிய அமெரிக்காவில் மீயெடையோடு, (இதில் 35.0% பேர் ஆண்களும் 40.4% பேர் பெண்களுமாக) இருந்துதுள்ளனர்; மூன்றாம் வகை மீயெடையினர் (40 அளவுக்கு மேல் உபொசு மதிப்புள்ளவர்) 7.7% பேர் ஆண்களும் 9.9% பேர் பெண்களும் ஆக இருந்தனர்.[26] ஐக்கிய அமெரிக்கத் தேசிய நலவாழ்வு, ஊட்டச்சத்து சார்ந்து 2015-2016 இல் நடத்திய ஆய்வு அளக்கை 71.6% அமெரிக்க ஆடவரும் பெண்டிரும் 25 அளவுக்கும் மேலான உபொசு மதிப்பு பெற்றிருந்ததைக் காட்டியது.[27] உபொசு மதிப்பு 3O அளவும் அதற்கு மேலும் உள்ள மீயெடையுள்ள அகவைமுதிர்ந்தோர் 39.8% ஆக அமைந்தனர்.
அகவை முதிர்ந்தோர் பேரிலான உயர்உபொசு விளைவுகள்உபொசு நெடுக்கங்கள் உடல் எடைக்கும் நோய்நிலைக்கும் இறப்புக்கும் இடையில் நிலவும் உறவுக்கு ஏற்பவே அமைகின்றன.மிகையெடை, மீயெடைத் தனியர்கள் கீழ்வரும் நோய்களுக்கு உயர் இடர் வாய்ந்தவர்களாக அமைகின்றனர்:[29]
மிகையெடை, மீயெடை உள்ள புகைபிடிக்காதவர்களுக்கு, இயல்பெடை உள்ளவர்களோடு ஒப்பிடுகையில், 51% அளவுக்கு இறப்புவீதம் கூடுகிறது.[32] பயன்பாடுகள்மக்கள் நலவாழ்வுபொதுவாக பொருண்மைக்கும் குழுக்களுக்கும் இடையிலான ஒட்டுறவைச் சுட்டும் முறையாகவே உபொசு மதிப்பு வழக்கமாக பயன்படுத்தபட்டாலும், இது கொழுப்பு இழையத்தை மதிப்பிடுவதில் குழப்பமான முறையாகவே அமைகிறது. உபொசு மதிப்பின் இருமைநிலை, பொதுவான கணக்கீட்டுக்குப் பயன்படுத்துவது எளிதாக அமைந்தாலும், இதில் இருந்து பெறப்படும் தரவுகள் துல்லியமும் பொருத்தப்பாடும் பொறுத்தவரையில் எவ்வளவு சரியானவை என்பதிலேயே அட்ங்கியுள்ளது. பொதுவாக, இந்தச் சுட்டெண்ணில் மிகச் சிறிய அளவுப் பிழையே ஏற்படும் வாய்ப்புள்ளதால், இயக்கமற்றநிலையில் வாழும் மிகையெடையுள்ள தனியரிடையிலான போக்குகளை உணர ஏற்றதாக உள்ளது.[33] உலக நலவாழ்வு நிறுவனம் இந்த உபொசு மதிப்புகளை 1980 களின் தொடக்க காலத்தில் இருந்து மீயெடைப் புள்ளியியல் பதிவுகளுக்கான செந்தரமாகப் பயன்படுத்தியது. இந்தப் பொது ஒட்டுறவு, மீயெடையும் பிற நிலைமைகளும் உள்ளவருக்கான ஏற்புமிக்க தரவுகளைத் தருவதால் மிகவும் பயன்மிகுந்ததாக உள்ளது. ஏனெனில் இது ஓரளவு துல்லியமான உருவகிப்பைக் கட்டியமைக்க பயன்படுத்தவும் அதில் இருந்து குறிப்பிட்ட அகவைக் குழுவுக்கானபரிந்துரைப்பு உணவு அளவைக் கணக்கிடவும் அறிவுறுத்தவும் உதவுகிறது. இதைப்போலவே, பெரும்பாலான சிறுவர்கள் மட்டுபட்ட இயக்கநிலையையே பெற்றிருப்பதால், இது சிறுவர்கள் வளர்ச்சிக்கும் மிகமிகப் பொருந்துகிறது.[34] இயக்கம் குறைந்த மக்களுக்கு நடத்திய குறுக்குவெட்டு ஆய்வு இவர்களின் உடல் செயல்பாட்டை ஊக்குவித்தால் அவர்களது உபொசு மதிப்புகளைக் குறைக்கலாம் என நிறுவியது. இதேபோல குறிப்பிட்ட அகவை மக்களின் ஆய்வுகளும் செயல்பாட்டு முடுக்கல் அல்லது ஊக்கிவிடல் உபொசு மதிப்பு மேலும் உயர்தலைத் தடுப்பதைக் காட்டியுள்ளன.[35] சட்டமியற்றல்பிரான்சிலும் இத்தாலியிலும் எசுப்பானியத்திலும் உபொசு மதிப்பு 18 அள்வுக்கும் குறைவானவர் நயப்புப் பணியிலும் கவர்ச்சி நடிப்பிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க, சட்டமியற்றப்பட்டுள்ளது.[36] இசுரவேலில் உபொசு மதிப்பு 18 அளவுக்கும் கீழான நிலலை சட்டப்படித் தடுக்கப்பட்டுள்ளது.[37] இது நயப்புப் பணியிலும் கவர்ச்சி ந்டிப்பிலும் ஈடுபடுபவர் சந்திக்கும் பசியிழப்பு நோயோடு மல்லுகட்ட உதவுகிறது. உடல்நல- உபொசு உறவுஅமெரிக்க மருத்துவக் கழக இதழில் 2005 இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு உபொசு மதிப்பால் வரையறுக்கப்பட்ட மிகையெடை மக்களின் இறப்புவீதம் இயல்பெடை மக்களின் இறப்புவீதத்தை ஒத்திருந்தமையைக் காட்டியது. ஆனால், தாழெடை, மீயெடை மக்களின் இறப்புவீதம் உயரளவில் அமைந்திருந்தது.[38] இலான்சுலெட் இதழில் 2009 இல் வெளியிடப்பட்ட, 900,000 அகவை முதிர்ந்தோரில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், உபொசு வால் வரையறுக்கப்பட்ட இயல்பெடை மக்களை விட மிகையெடை, தாழெடை உள்ளவர்களின் இறப்புவீதம் உயர்வாக இருப்பதைக் காட்டின. அவை உகந்தநிலை உபொசு நெடுக்கம் 22.5 முதல் 25 வரையில் உள்ளதாகவும் காட்டின.[39] தடகள வீரர்களின் சராசரி உபொசு மத்திப்பு பெண்களுக்கு 22.4 ஆகவும் ஆண்களுக்கு 23.6 ஆகவும் அமைந்துள்ளது.[40] ஊனீரில் உயர் காம்மா குளூட்டாமில் பெயர்நிலை பெப்டைடு நொதியுள்ள இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் உபொசு மதிப்பு அமைந்துள்ளது.[41] 250,000 பேர் கொண்ட மக்கள்தொகையில் செய்த 40 ஆய்வுகளின் பகுப்பாய்வு, உபொசு நெடுக்கம் 25 முதல் 29.9 மதிப்புள்ள மிகையெடை மக்களை விட இயல்பெடை உபொசு மதிப்புள்ள இதயக் குழல் நோயாளிகள் இறப்புவீத இடர் கூடுதலாக அமைகிறது.[42] ஓர் ஆய்வு, உபொசு மதிப்பு உடல் கொழுப்பு நூற்றன்வீதத்துடன் பொதுவாக ந்ன்கு ஒட்டுறவு கொண்டுள்ளதைக் காட்டுகிறது. மேலும், இது மீயெடை உலக முதல் காரணியான புகைத்தலையும் விஞ்சிவிட்டதையும் காட்டுகிறது. உடல் கொழுப்பு சார்ந்த மீயெடை வரையறைப்படி, 50% ஆண்களும் 62% பெண்களும் மீயெடையினராக அமைகின்றனர்; ஆனால், உபொசு மதிப்பின்படி, 21% ஆண்களும் 31% பெண்களும் மீயெடையினராக அமைகின்றனர். இந்நிலை உபொசு மதிப்பு மீயெடையினர் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடு செய்வத்ஹைக் காட்டுகிறது.[43] எட்டு ஆண்டு வரையிலான 11,000 பேரில் மேற்கொண்ட ஓர் 2010 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகள், மாரடைப்பு, கால்கை வலிப்பு, இறப்பு போண்ர இடர்வீததைக் கன்டறிய உபொசு மதிப்பு நல்ல முறையல்ளென்பதை வெளிப்படுத்துகின்றன. இதைவிட, இடுப்பு-உயர விகிதமே நல்லதாக அமைகிறது.[44] 13 ஆண்டு வரையிலான 60,000 பேரில் மேற்கொண்ட ஓர் 2011 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகள் இடுப்பு–இடை விகிதமே இதயக் குருதிக் குறை நோய் இறப்புவீதத்தை முன்கணிக்கும் நல்ல முறையாக அமைவதாகக் காட்டின.[45] வரம்புகள்தேசிய நலவாழ்வு, ஊட்டச்சத்து ஆய்வக கள அளக்கையின் 1994 ஆம் ஆண்டுத் தரவுகள். மேல் இடதிலும் கீழ் வலதிலும் அமைந்த கால்வட்டத் தரவுகள் உபொசு வரம்புகளை முன்மொழிகின்றன.[43] மருத்துவ நிறுவனமும்[46] புள்ளியியல் கழகமும்[47] உபொசு வரையறை மதிப்புகளின் வரம்புநிலைகளை எடுத்துகாட்டியுள்ளன. படியேற்ற அளவுகோல்உபொசு வாய்பாட்டின் பகுதியின் படியேற்ற எண்(exponent) தற்போக்கானது. உபொசு மதிப்பு எடையின் நேர்தகவிலும் உயரத்தின் இருபடி மதிப்பின் தலைகீழ் தகவிலும் அமைகிறது. பொருண்மை நேரியல் அளவுகளின் முப்படியில் உயர்வதால், தனியரின் உயரம், உடலுருவைப் பொறுத்தும் அதைச் சார்ந்த உடற்கூறைப் பொறுத்தும், கூடக்கூட உயரமான தனியரின் உபொசு மதிப்பு பெரிதாக அமைகிறது.[48] உபொசு மதிப்பு எடையின் நேர்தகவிலும் உயரத்தின் இருபடி மதிப்பின் தலைகீழ் தகவிலும் அமைவதால் உடல் அளவுகள்ஊயரத்தின் இருபடியில் உயரும்போது பொருண்மை உயரத்தின் முப்படியில் உயர்கிறது. எனவே உபொசு மதிப்பு அதே அளவில் இல்லாமல் இருமடங்காகிறது. இதனால், நிலவும் கொழுப்பு மட்டங்களோடு ஒப்பிடுகையில் உயரமானவர்கள் இயல்புமீறிய உயர் உபொசு மதிப்புகளைப் பெற்றுள்ளனர். ஒப்பீட்டளவில், எடைச் சுட்டெண் உயரத்தின் முப்படியாக அமையும் இயல்பான பொருண்மை அளவுகோலைச் சார்ந்துள்ளது .[49] என்றாலும், உயரமானவர் அனைவரும் குட்டையானவரில் இருந்து நேரடியாக அள்வு மாற்றம் பெற்றவர் அல்ல; ஆனால், முன்னவரின் உடற்சட்டகம் உயரத்துக்குத் தலைகீழான விகிதத்தில் குறுகுவதைக் காணலாம்.[50] கார்ல் இலாவீ " உபொசு மதிப்பு பட்டியல்கள் பெரிய மக்கள்தொகைகளின் உடற்பருமனையும் உடற்கொழுப்பையும் இனங்காண சிறந்து விளங்கினாலும், தனியர்களின் கொழுப்புத்தன்மையைத் தீர்மானிப்பதில் நம்பகத் தன்மை உள்ளவையல்ல" என எழுதுகிறார்.[51] அமெரிக்க ஐக்கிய நாட்டு அகவை முதிர்ந்தோரைப் பொறுத்தவரையில், ஆண்களுக்கான படியேற்ற நெடுக்கம் 1.92 இலிருந்து 1.96 வரையிலும் பெண்களுக்கான படியேற்ற நெடுக்கம் 1.45 இலிருந்து 1.95 வரையிலும் அமைகிறது.[52][53] புற உருவப் பான்மைகள்உபொசு மதிப்பு உடலின் பெருஞ்சட்டகத்தை10% மிகைமதீப்பிடு செய்வது போலவே உடலின் குறுஞ்சட்டகத்தைத் தாழ்மதிப்பீடு செய்கிறது. அதாவது, குறுஞ்சட்டக உடலினர் உகந்தநிலை மதிப்பை விடக் கூடுதலான கொழுப்பு பெற்றிருந்தும், இவரது உபொசு மதிப்பு இயல்பெடை சார்ந்த உபொசு மதிப்பில் வகைபடுத்தப்படுகிறது. மாறாக, பெருஞ்சட்டக உடலினர் குறைந்த உடற்கொழுப்பு நூற்றன்வீதத்தோடு நல்ல உடல்நலத்தோடு விளங்கினாலும், மிகையெடை உபொசு மதிப்பில் வகைப்படுத்தப்படுகிறது.[54] எடுத்துகாட்டாக, உயர/எடை அட்டவணை 1.78 மீ (5 அடி, 10 அங்) மாந்தனின் கருத்தியலான எடையை (உபொசு21.50) 68 கிகி(150 பவு.) எனத் தரலாம். ஆனால், அந்த மாந்தன் ஒல்லியான(குறுஞ்சட்டக) கட்டுகோப்புடைய நிலையில் அமையும்போது, 68 கிகி உள்ள மிகையெடை வாய்ந்தவனாக அமையும்போது, அவன் தன் எடையை 10% அளவுக்கு, அதாவது 61 கிகி (உபொசு19.4) அளவுக்குக் குறைக்கவேண்டி வரும்; இதற்கு மாறாக, அந்த மாந்தன் ஒல்லியான(பெருஞ்சட்டக) கட்டுகோப்புடைய நிலையில் உள்ளபோது அவன் தன் எடையை 10% அளவுக்கு, அதாவது 75 கிகி (உபொசு23.7) அளவுக்குக் கூட்டவேண்டி வரும். இதேபோல, சிறிய/இடைநிலை அல்லது இடைநிலை/பெரிய கட்டமைப்புநிலைக்குப் பொதுபுலனைக் கொண்டு கருத்தியலான எடையைக் கண்டறிய வேண்டும். என்றாலும், உயரத்தையும் உடற் கட்டமைப்பையும் மட்டுமே பயன்படுத்தி கருத்தியலான எடையைத் தீர்மானிப்பது, நலவாழ்வு இடர்க் காரணிகளைக் கண்டறிதலில்றீ இடுப்பு-உயர விகிதம், உண்மையான உடற்கொழுப்பு நூற்றன்வீதம் போல அவ்வளவு துல்லியமாக அமையாது.[55] துல்லியமான உடற்சட்டக அளவுக் கணிப்பிகள், இடுப்புச் சுற்றளவு, முழங்கை அகலம், கழுத்துப் பரிதி, போன்ற பிறவற்றின் அளவீடுகளைக் குறிப்பிட்ட உயரமுள்ள ஒருவர் எந்த வகைபாட்டில் அமைவார் என்பத்ஹைத் தீர்மானிக்கப் பயன்படுத்துகின்றன.[56] உபொசு மதிப்பு, அகவைமிகுதலில் குறையும் உயர வேறுபாட்டைக் கணக்கில் எடுக்கவும் தவறுகிறது. இச்சூழலில், எடை உயராமலே உபொசு மதிப்பு உயரும். உபொசு மதிப்பு ஒரு தனியரின் "உடற் பருமன்" அல்லது "ஒல்லித்தன்மை" குறித்த எளிய எண் அளவீட்டை வழங்குவதோடு, தங்களுடைய நோயாளிகளுடன் மிகவும் நேரடியாக மிகை எடை அல்லது குறைவான எடை குறித்து பேச நலவாழ்வு வல்லுனர்களுக்கு உதவுகிறது. இது சராசரி உடல் அமைப்புடன் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரியும் (உடல் இயக்கமின்மை) தனியர்களை வகைப்படுத்துவதற்காகவே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[57] இதுபோன்ற தனியர்களுக்காக, தற்போது பின்வரும் உபொசு மதிப்பு அளவைகள் நிறுவப்பட்டுள்ளன: 18.5 முதல் 25 வரையிலுள்ள உபொசு சரியான எடையாகக் கருதப்படுகிறது. 18.5க்கும் குறைவான உபொசு குறைவான எடையுடன் இருக்கிறார் என்பதையும், 25க்கும் மேற்பட்ட உபொசு அதிக எடையுடன் இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது; 17.5க்கும் குறைவான உபொசு ஒருவருக்கு பசியிழப்பு நோய் அல்லது அதுசார்ந்த நோய்கள் இருப்பதைக் குறிக்கிறது. 30க்கும் மேற்பட்ட உபொசு உடல் பருமனுள்ளவராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது; 40க்கும் அதிகமான உபொசு நோயுற்ற உடல்பருமன் கொண்டவராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. கொடுக்கப்பட்ட உயரத்திற்கு ஏற்ப, உபொசு எடைக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இருப்பினும், கொடுக்கப்பட்ட எடைக்கு உயரத்தின் நான்மடங்கிற்கு உபொசு எதிர்மறையாக இருக்கிறது. ஆகவே உடல் பருமானங்கள் இரட்டிப்பானால், எடை அளவைகள் உயரத்தின் சதுரத்தோடு இயல்பானதாக இருக்கும்போது உபொசு மதிப்பில் இரட்டிப்பாகிறது. உயரமானவர்களிடையே ஆய்வு மேற்கொண்ட இந்த முடிவுகள், அவர்களுடைய நேர்த்தியான உடற் கொழுப்பு அளவுகளுடன் ஒப்பிடும்போது வகைமையானதாக இல்லாத உயர் உபொசு மதிப்பு இருப்பதாக தெரியவருகிறது. பல உயரமான மனிதர்களை குள்ளமானவர்களோடு "ஒப்பிட்டுக் காட்டப்படுவதில்லை" என்ற உண்மையால் இந்த முரண்பாடு முற்றுப்பெறுகிறது. உடல் எடையை நான்மடங்காக்குவது (உபொசு மதிப்பில் செய்வதுபோன்று) அல்லது பருஞ்சதுர மடங்காக்குவதற்குப் (பாண்டரால் சுட்டெண்ணில் செய்வதுபோன்று) பதிலாக 2.3 மற்றும் 2.7க்கு இடையே உள்ள படியேற்றக்குறியைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.[58] தசையும் கொழுப்பும்தசைப் பொருண்மை, கொழுப்புப் பொருண்மை இடையே அமையும் பரவல் பற்றிய கற்பிதங்கள் சரியானவை அல்ல. உபொசு மதிப்பு ஒல்லியானவருக்கும் தடகள வீரர் போன்ற மிக ஒல்லியனவருக்கும் திசுக் கொழுப்பை மிகையாகவும் ஒல்லி குறைந்த உடல் பொருண்மை உள்ள கூடுதல் திசுக்கொழுப்பு உள்ளவருக்கு குறைவாகவும் மதிப்பிடுகிறது. உரோமெரோ-கோரல் குழுவினர் 2008 இல் 13,601 பேரைக் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மூன்றாம் தேசிய, ஊட்டச்சத்து ஆய்வளக்கை உபொசு வரையறுக்கும் உடற்பருமன்(BMI ≥ 30) 21% அளவுக்கு ஆண்களிலும் 31% அளவுக்குப் பெண்களிலும்ளாமைதலைக் காட்டியது. உடர்கொழுப்பு வழி வரையறுக்கும் உடற்பருமன் ஆன்களில் 50% அளவுக்கும் பெண்களில் 62% அளவுக்கும் அமைந்திருந்தது. வரையறுக்கும் உடற்பருமன் வரையறுக்கும் உபொசு உயர் கூர்மையையும் செப்பத்தையும்(ஆண்களுக்கு 95%; பெண்களுக்கு 99%.) பெற்றிருக்க, இயல்பான உபொசு மதிப்பு தாழ் கூர்மையையும் செப்பத்தையும் (ஆண்களுக்கு 36%; பெண்களுக்கு 49%.) பெற்றுள்ளது. அதாவது, உடற்பருமன் உள்ளவருக்குத் தீர்மானிக்கும் உபொசு மதிப்பு பெரும்பாலும் சரியாக அமைய, உடற்பருமனற்றவருக்கு அடிக்கடி பிழைபடவே செய்கிறது. உடற்பருமனற்றவருக்கு உபொசு மதிப்பு அடிக்கடி பிழைபட்டாலும், இடைநிலை உபொசு நெடுக்கமான 20–30 இடைவெளியில், இது அகன்ற உடற்கொழுப்பு நூற்றன்வீதத்துக்கான நெடுக்கத்தோடு இசைந்து போகிறது. 25 உபொசு மதிப்புள்ள, 25% ஆண்களின் உடற்கொழுப்பு நூற்றன்வீதம் 20% அளவுக்கும் குறைந்தே அமைய, அவர்களில் 10 % ஆண்களின் உடற்கொழுப்பு நூற்றன்வீதம் 30% அளவுக்கும் கூடுதலாக உள்ளது.[43] தடகள வீரரின் உடற்கட்டை , உடற்கொழுப்பு அளவீடுகளால் நன்கு கணிக்கவியலும். இதற்குச் சுகின்போல்டு அளவீடுகளும் நீரடி அளவீடுகளும் உதவுகின்றன. உடற்பருமனை அளக்கும் கையளவீடுகளின் குறைபாடுகள் அதற்கு உடற்பருமன் வகைப்பாடு, உடற்பருமன் சுட்டெண் போன்ற மாற்றுமுறைகளை உருவாக்க வழிவகுத்தன. வகைபாட்டு வரையறைகளின் வேறுபாடுஉபொசு அளவுகோலில் மிகையெடை, மீயெடை வ்வாயில் மதிப்பை எங்கே அமைப்பது என்பது தெள்வாக அமைவதில்லை. இதனால், இதற்கான செந்தரங்கள் சில பத்தாண்டுகலாகவே மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் உணவளவு வழிகாட்டுதல்கள் 1980 இலிருந்து 2000 வரையில் மிகையெடையை வேறுபாட்ட மட்டங்களில் உபொசு 24.9 முதல் 27.1 வரை வரையருத்துள்ளது. தேசிய உடல்நல நிறுவனங்களின் பொதுக்கருத்தேற்புக் கருத்தரங்க 1985 இல் மிகையெடை உபொசு மதிப்பை ஆண்களுக்கு 27.8 ஆகவும் பெண்களுக்கு 27.3 ஆகவும் பரிந்துரைத்தது. இந்த நிறுவன அறிக்கை, 1998 இல் மிகையெடைக்கு உபொசு மதிப்பை 25 அளவுக்கு மேலாகவும் மீயெடைக்கு உபொசு மதிப்பை 30 அளவுக்கு மேலாகவும் அமைகிறது என முடிவு செய்தது.[23] உலக நலவாழ்வு நிறுவனம், தேசிய உடல்நல நிறுவனச் செந்தரங்களையே ஏற்க, 1990 களில் முடிவு செய்து, 25-30 நெடுக்கம் மிகையெடைக்கும் 30 அளவுக்கும் மேலான நெடுக்கத்தை மீயெடைக்கும் வகைபடுத்தியது. இது மீயெடையைத் தீர்மானிக்கும் தெளிவான வழிகாட்டி ஆனது. நடப்பு உலக நலவாழ்வு நிறுவன, தேசிய நலவாழ்வு நிறுவன இயல்பு எடைகளுக்கான உபொசு மதிப்புகள் இரண்டாம் வகை நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கான குறைந்த இடர்வாய்ப்பை கொண்டுள்ளது; என்றாலும், ஒத்த மதிப்புகளையே தற்போக்காக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன; இந்நிலை ஆண்களுக்கு மிகவும் பொருத்தமற்றதாகிறது.[59] ஓர் ஆய்வு, நடப்பு வரையறைப்படி, மிகையெடை, மீயெடை என அடையாளப் படுத்தப்பட்டவரில் பெரும்பாலானவர் இறப்புவீத உயரிடர் ஏதும் சந்திக்கும் வாய்ப்பில்லை என கண்ட றிந்துள்ளது. 600,000 ஆண்களும் பெண்களும் அடங்கிய பல ஆய்வுகளின் அளவியலான பகுப்பாய்வு, உபொசு மதிப்பு 23-29 நெடுக்க மக்களில் மிகக் குறைந்த இறப்புவீதமும்; உபொசு மதிப்பு 25–30 நெடுக்க மக்களில், மிகையெடையுள்ளவராகக் கொள்ளப்பட்ட பெரும்பாலானோரில் உயரிடர் வாய்ப்பு ஏதும் அமையவில்லை எனவும் கண்டறிந்தது.[60] மாற்றுமுறைகள்கூட்டுச் சுட்டெண் (முப்படியேற்றம்)கூட்டுச் சுட்டெண் அல்லது பண்டாரல் சுட்டெண் அல்லது உரோகிரர்சு சுட்டெண் என்பது உயரத்தின் படியேற்றத்துக்கு 2க்கு மாற்றாக 3 ஐப் பயன்படுத்துகிறது. இந்தக் கூட்டுச் சுட்டெண் மீக்குட்டை, மீநெட்டை மாந்தருக்கும் உபொசு மதிப்பை விட நன்கு சரியாகப் பொருந்தும் முடிவுகளைத் தருகிறது.[61] எடுத்துகாட்டாக, 152.4 செமீ உயர நெட்டையர் கருத்தியலான 48 கிகி எடையுடன் உள்ளபோது, உபொசு மதிப்பு20.74 ஆக அமைய, கூசு மதிப்பு 13.6 ஆகவும் 200 செமீ உயர நெட்டையர் கருத்தியலான 100 கிகி எடையுடன் உள்ளபோது, உபொசு மதிப்பு24.84 ஆக அமைய, கூசு மதிப்பு 12.4 ஆகவும் அமைகிறது. உபொசு மதிப்பு 24.4, 25 எனும் மிகையெடை உபொசு மதிப்புக்கு மிக நெருக்கமாகவும் அதேபோல, கூசு மதிப்பு 12.4, 12 எனும் இயல்பெடை கூசு மதிப்புக்கு மிக நெருக்கமாகவும் அமைதலைக் காணலாம்.[62] புதிய உபொசு (2.5 படியேற்றம்)ஆக்சுபோர்டு பல்கலைக்கழக எண்ணியல் பகுப்பாய்வுப் பேராசிரியரான நிக் திரிபிதென், குட்டை, நெட்டைத் தனியருக்கு மரபான உபொசு வாய்பாட்டின் குலைவுகளைத் தவிர்க்க, உடல் பொருண்மைச் சுட்டெண்ணைக் கணிப்பதற்கான புதிய வாய்பாட்டை முன்மொழிந்தார்.[63] இவர் சராசரி உயர அகவை முதிர்ந்தோருக்கான மரபு உபொசு வாய்பாட்டோடு புதிய உபொசு வாய்பாடு ஒத்தமைய, புதிய வாய்பாட்டில் 1.3 எனும் அளவீடுசெய் காரணியை அறிமுகப்படுத்தினார்; மேலும், படியேற்ற எண் 2க்கு மாற்றாக 3 ஐப் பயன்படுத்தி எடை (மாறாத அடர்த்தியின்போது பருமன் கோட்பாட்டியலாக, உயரத்தின் முப்படியாக அமையுவதால்) விளைவையும் சரி செய்தார்; என்றாலும், திரிபிதென் தன் பகுப்பாய்வில், படியேற்ற என் 2 அல்லது 3 ஐ விட, படிஏற்ற எண் 2.5 ஏ குறைந்த குலைவுடன் புலனறிவு/ஆய்வுத் தகவல்களோடு ஒத்துபோகும் எனதையும் கண்டறிந்தார். முதன்மை உபொசு( இயல்பான 2 படியேற்றம்)முதன்மை உபொசு என்பது திருத்திய இயல்பு உபொசு மதிப்பாகும். இது உண்மை உபொசு மதிப்பை மேனிலை வரம்பு உகப்புநிலை உபொசு மதிப்பால் வகுத்துவரும் விகிதமாகும் (நடப்பு வரையறைப்படி, பின்னதின் மதிப்பு 25 கிகி/மீ2 ஆகக் கொள்ளப்படுகிறது.); அதாவது, உண்மையான உபொசு மதிப்பு மேனிலை வரம்பு உகப்பு மதிப்பின் விகிதமாக வெளியிடப்படுகிறது. உண்மையான உடல் எடைக்கும் மேனிலை வரம்பு உகப்புநிலை உபொசு மதிப்பு எடைக்கும் (25 கிகி/மீ2) இடையில் அமையும் விகிதமே முதன்மை உபொசு மதிப்புக்குச் சமமாகும். எனவே, இதொரு பருமானமற்ற எண்ணாகும். இம்முறைப்படி, 0.74க்கும் குறைந்த முதன்மை உபொசு மதிப்பினர் தாழெடையினர் ஆவர்; 0.74 முதல் 1 வரையிலான முதன்மை உபொசு மதிப்பினர் உகந்தநில எடையினர் ஆவர்; 1க்கும் அதற்கு மேலும் உள்ள முதன்மை உபொசு மதிப்பினர் மிகையெடையினர் ஆவர். முதன்மை உபொசு மதிப்பு மருத்துவமனை நடைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது; ஏனெனில், இது ஒருவர் பெரும உகப்புநிலை முதன்மை உபொசு மதிப்பில் இருந்து எந்த விகிதத்தில் ( எ-டு: 1.36) அல்லது எந்த நூற்றன்வீதத்துக்கு மேல் ( எ-டு: 136%, அல்லது 36% அளவுக்கும் மேல்) ஒருவர் வேறுபடுவார் எனத் தெளிவாக அறிய்ய முடிகிறது.எடுத்துகாட்டாக, 34 kg/m2 உபொசு மதிப்புள்ள ஒருவரின் முதன்மை உபொசு மதிப்பு 34/25 = 1.36 ஆகும்; இவர் தன் மேனிலை பொருண்மை வரம்பை விட, 36% மேலான பொருண்மையைக் கொண்டிருப்பார்.ஆசிய மக்கள்தொகையில் (மேலே பன்னாட்டு வேறுபாட்டு பிரிவைப் பார்க்கவும்) முதன்மை உபொசு 25க்குப் பதிலாக வகுக்கும் எண்ணில் உபொசு 23 இன் உயர்நிலை வரம்பு கொண்டு கணக்கிடப்பட வேண்டும். இதனால், முதன்மை உபொசு, உயர்நிலை வரம்பு உபொசு மதிப்புக்கள் வேறுபடுகின்ற மக்கள்தொகையினரை எளிதாக ஒப்பீடு செய்ய உதவுகிறது[64] இடைச் சுற்றளவுஇடைச் சுற்றளவு வயிற்றறைக் கொழுப்புக்கான நல்ல சுட்டியாகும். மற்ற இடங்களில் அமையும் கொழுப்பை விட, வயிற்றறைக் கொழுப்பே கூடுதலான நலவாழ்வு இடர்களைத் தருகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசிய நலவாழ்வு நிறுவனம் வரையறுப்பின்படி, இடைச் சுற்றளவு ஆண்களுக்கு 1020 மிமீ அளவுக்கும் கருவுறாத பெண்களுக்கு 880 மிமீ அளவுக்கும் கூடுதலாக இருப்பது, இரண்டாம்வகை நீரிழிவு நோய், குருதிக்கொழுப்புமிகை, குருதி அழுத்தமிகை, இதயக் குழல் நோய் போன்ற நோய்களுக்கான உயரிடர் தருமெனக் கருதப்படுகிறது. உபொசு மதிப்பை விட உடற்பருமன்சார் நோய்களுக்கான சிறந்த சுட்டியாக இடைச் சுற்றளவே அமைகிறது. இந்த எடுத்துகாட்டு முதியவருக்கும் ஆசியக் கால்வழியினருக்கும் ஒத்துப்போகிறது.[65] ஆண்களுக்கான 940 மிமீ அளவும் ஆண்களுக்கான 800 மிமீ அளவும் உயரிடர் வாய்ந்தவையாகவும் தேசிய நலவாழ்வு நிறுவன மதிப்புகள் மேலும் கூடுதலான உயரிடர் வாய்ந்தவையாகவும் அமைகின்றன.[66] இடுப்பு-இடை விகிதமும் பயன்பட்டாலும் தனித்த இடைச் சுற்றளவை விடச் சிறந்ததாக அமையவில்லை; மேலும், இரண்டின் அளவீடுகளை எடுப்பதும் கூடுதல் சிக்கலைத் தருகிறது.[67] இடைச் சுற்றளவை உயரத்தால் வகுக்கும் மற்றொரு சுட்டியும் உண்டு. இதன்படி, உயரிடர் தரும் மதிப்புகளாக, 40 அகவைக்கும் குறைவானவருக்கு 0.5 மதிப்பை விடக் கூடுதலான மதிப்பு 40–50 அகவை நெடுக்கம் உள்ளவருக்கு 0.5- 0.6 நெடுக்க மதிப்பும் 50 அகவைக்கும் மேலானவருக்கு 0.6 மதிப்பை விடக் கூடுதலான மதிப்பும் அமைகின்றன.[68] புறப்பரப்புசார் உடலுருவச் சுட்டெண்புறப்பரப்புசார் உடலுருவச் சுட்டெண்(SBSI-பஉஉசு) எனும் மேலும் சரியான சுட்டெண் பின்வரும் நான்கு அளவீடுகளை சார்ந்துள்ளது: உடல் புறப்பரப்பளவு (BSA- உபுப), குத்துநிலை முண்டச் சுற்றளவு (VTC-குமுசு), இடுப்புச் சுற்றளவு(WC -இசு), உயரம் (H-உ). 1999–2004 கால இடைவெளியில், தேசிய நலவாழ்வு, ஊட்டச்சத்து ஆய்வு அளக்கைகள் 11,808 பேரைக் கொண்டு செய்த ஆராய்ச்சி முடிவுகள், பஉஉசு (SBSI) மதிப்பு உபொசு(BMI) மதிப்பையும் இடுப்புச் சுற்றளவையும் உடலுருவத்தையும் மட்டும் கொண்ட உடல் உருவச் சுட்டெண்ணையும் உஉசு(ABSI) மதிப்பையும் விடச் சிறந்து விளங்கியதால், இந்த பஉஉசு மதிப்பு பின்னிரண்டுக்கும் மாற்றாக அமைந்தது.[69][70] பருமானமற்ற ஓர் எளிய ப உ உசு (SBSI) முறையும் SBSI* எனும் பெயரில் பின்னர் உண்டக்கப்பட்டுள்ளது.[70] திருத்திய உடல் பொருண்மைச் சுட்டெண்(திஉபொசு)குடும்ப மாச்சத்துவகை பல்நரம்பியல் கோளாறு போன்ற சில குறிப்பிட்ட மருத்துவச் சூழலில், ஊனீர் மாச்சத்துவகை(அல்புமின்) ஒரு காரணியாகக் கொண்டு திருத்திய உடல் பொருண்மைச் சுட்டெண்(திஉபொசு) உருவாக்கப்படுகிறது. திஉபொசு மதிப்பை உபொசு மதிப்பை, (ஒரு இலிட்டருக்கான கிராம்கள் அலகில் உள்ள) ஊனீர் அல்புமின் அளவால்(கி/இலி) பெருக்கிப் பெறலாம்.[71] மேலும் பார்க்க
மேலும் படிக்க
குறிப்புகள்மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia